26 August 2010

குறும்படங்கள் - கரடி

The Bear - Film by Jean-Jacques Annaud



படம் பார்த்துவிட்டீர்களா கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். நமது  அக்கப்போர்  இருக்கவே  இருக்கிறது. அமைதி. கொஞ்சம்  நீர் குடிக்கலாம்.   அவசரம்  ஒன்றுமில்லை  கீழே  இருப்பதை அப்புறம் படிக்கலாம்.


















































எனது  நெடுநளைய  நண்பர்  சம்பத்.  இவர்  பற்றிய விபரங்களைத் தெரிவிக்கலாமா இல்லையா என்று இவரிடம் அனுமதிபெற்ற பிறகே சொல்லமுடியும்.   இவர்  பெயர்  சம்பத்  என்பதைத் தாண்டி  எனக்கே அவ்வளவாகத்  தெரியாது.  ஆனால்  நான்  இவருக்கு  நிறைய  கடன் பட்டிருக்கிறேன்.   கணினிமேல்  எனக்கிருந்த  மோகத்தை  விசிறிவிட்டவர். வழி சொன்னால்  போதாதா  வைகுந்த  வாசலைத்  தட்டித் திறந்துவிட மாட்டோமா  என்ன.

எழுதச்சொல்லி விடாமல் பிறாண்டிக்கொண்டே இருந்த இருவரில் இவர் ஒருவர்.  என்னைவிட  பத்தாண்டுகளாவது   இளையவர்  என  நினைக்கிறேன்.

இன்னொருவர்  சுந்தர  ராமசாமி,  பல  ஆண்டுகள்  மூத்தவர்.  பார்த்த படங்களைப்பற்றி  எழுதக்கூட  வேண்டாம்,  பட்டியலாகவாவது  எழுதி வெச்சுக்கோங்கொ.  என்ன  படம்  முக்யாமான  படம்னு,  பார்த்த  அனுபவத்த வெச்சுண்டு  படம்  பேர்  சொல்லக்கூட  ஆள்கெடையாது.  எல்லாரும் படிக்கறவா.  படத்தைப்பத்தியும்  நெறய  பேர்  படிச்சிருக்கா.  பாத்தவா  கம்மி. நீங்க  படிக்கிறவர்  இல்லெ  பாக்கறவர்.  ஏகப்பட்ட  அக்கறைகள்  அவருக்கு, பொது  விஷயங்கள்  பற்றி.  நாம்போ  நாதாரி.

இந்தப்படத்தை எனக்கு அனுப்பி கூடவே எழுதியிருந்த ஒரு வாக்கியம்கூட இவர் பற்றிய நிழலோவியத்தைக் கொஞ்சம் துல்லியப்படுத்த உதவக்கூடும்.

If you have seen a film like this..do let me know.

நன்றி: P.R.சம்பத்

மேலதிக குறும்படங்களுக்கு

http://www.flixxy.com/bear-animal-nature-film.htm