26 August 2010

குறும்படங்கள் - கரடி தொடர்ச்சி

The Bear - Film by Jean-Jacques Annaud


பாண்டிச்சேரியில் பள்ளிப்படிப்பில் ஃப்ரெஞ்ச் படித்திருந்திருக்கலாம் (அய்யய்யோ அசோகமித்திரன் வந்துட்டாருபா) பள்ளிக்கூடத்தையே உட்டுட்டு பாந்து சண்டை பாக்கறதும், இருந்த ரெண்டே காக்கி டவுசரு வெள்ளை சட்டையோட, தக்கினியூண்டு இருந்துகிணு வெள்ளெலி மாதிரி இருந்ததால ஆஸ்ரமத்தானாட்டம், நைஸ்ஸா உள்ள பூந்து வாராவாரம் ஒன்னும் புரியாட்டியும், ஊமக்கோட்டானாட்டம் படம் பாக்குறது. மாட்டினா டின்னு கட்டிறப் போறானுங்களேனு க்ளைமாக்ஸ்ல, வெளியப்போறக் கதவாண்ட நின்னுகினு தெரைக்கிப் பின்னாடி படம் பாக்குறது.

பகிர்வென்பது  மூலத்தைக்  காட்டவேண்டும்.  அதன்  மூலம்  வாசகனோ பார்வையாளனோ அல்லது தல கிட்ட வந்தா எதுனா மேட்ரு கெடகும்பா என வருகிற, ஏன் வந்தோம் இவனிடம் என்கிற காரணம் கூட அறியாத பாமர விசிறியாகக்கூட (இவ்ரு எணெயத்துல ரொம்பொ பேமஸுபா) அவன் பயணத்தை அவன் மேற்கொள்ள வழிசெய்வதாக இருக்கவேண்டும்.


படத்தின் தொடக்கத்திலிருந்து குரல்கள் இடி இயற்கை ஒலிகள் மட்டுமே. பின்னனி இசை எந்த கனத்தில் தொடங்குகிறது. அங்கதான் மேட்டர்.

முதல் ஷாட்டில் வெளிர் மேகங்கள் சூழ்ந்த மலையின் பேரமைதிப் பினணியின் முன்வெளியில் நிற்கும் ஒரு முகடு. அது ஒரு மேடைபோல நிற்கிறது. நொடிப்பொழுதில் வில்லனின் நாடகீய வெளிப்பாடு. முகட்டின் பின்புறம்  இருந்து  மேலெழுகிறது  ஒரு  வேங்கை.  அதன்  முழு ஆகிருதியைக் காட்ட மெல்ல முன்னகர்ந்து அதன் முழுமையை அருகில் நின்று அவதானிக்கிறது கேமரா. கட்.


மலையின் வேறொரு பகுதியில் ஏதோ ஒரு மிருகம் மேய்ந்து கொண்டிருக்கிறது.  அங்கிருந்து  கேமரா  பின்வாங்கிக்  கொண்டே  வருகிறது. இரண்டிற்கும் இடைப்பட்ட தொலைவை நமக்கு உணர்த்தவே இந்த ZOOM-BACK ஆனால் அது வேங்கையின் அருகிலிருந்து. இது அதன்மேல் கண் வைத்துவிட்டது. அய்யயோ. உணர்வு உங்களுக்குள் உங்களையறியாமல். நாமெல்லாம் திருட்டுப் பசங்கள். வரட்டு கெளரவக்காரர்கள். ஆச்சர்யத்தை, அறியாமயைக்  காட்டிக்கொள்ள  மாட்டோம்.  குழந்தைகளோடும் பெண்களோடும்  பாருங்கள்.  கேமரா  பின்வாங்கி  இன்னொரு  காலியான முகட்டைக்காட்ட  வேங்கையார்  ஏறிவந்து  கூர்ந்து  அவதானிப்பதைக் காட்டுகிறது. கட

நெடுந்தொலைவில் இருக்கும் மிருகம் கரடி என்று துல்லியப்படுறது. முதல் முறையை விட இப்போது இன்னும் சற்று அருகில். கட


கரடி குதூகலம்


(கதன குதூகலத்தைக் கிண்டலடித்ததாய் யுவன் சந்திரசேகர் கோபித்துக்கொள்ள மாட்டார் என நினைக்கிறேன்).


ஓரு க்ளோசப் பில் இருந்து எதிர் காட்சிக்கு இன்னொரு க்ளோசப் என்பது இலக்கணம்.


கரடியிடம்  கட்  செய்தால்  நாக்கை  துழாவும்  நாயகன்.  ஷாட்டின்  நீள அளவுகளும்  முக்கியம்.  கட்.


வேங்கையின் பின்னாலிருந்து வேங்கையை இணத்து தொலைவில் கரடியையும்  சேர்த்த  காட்சி.  சிறிய  அவதானிப்புக்குப்பின். கீழே நாஷ்ட்டாவுக்காக  இறங்குகிறார்  புலிவாள்  நமக்கு  BP  லைட்டாக  எகிறத் தொடங்குகிறது. ஒரு ஜெர்க்கடிப்பு அது பார்த்துவிடப்போகிறதே என்று.


சமயத்தில் கழுத்து ரோமம் மூச்சுக்காற்றின் உஷ்ண விரல்களால் அளையப்படுவது  போல  உணரக்கூடும்.  பெரும்பாலும்  பெண்களுக்கே  இது சம்பவிக்க  அதிக  சாத்தியங்கள்.  ஆண்கள்தான்   லஜ்ஜைகெட்டவர்கள் ஆயிற்றே முந்நூறு அடி தூரத்திலிருந்து முறைத்துக் கொண்டிருப்பான். உள்ளுணர்வோடு (நாம்போ ஒர்ஜினல் லக்கியம். உள்ளுணர்வேய் வேர்டிங் சூப்பர்ரா வந்துட்சேய்)  திரும்பிப் பார்க்கக்கூடும் அவள்.


இங்கு  கரடிக்கு  வாழ்வாதார  உள்ளுணர்வு. திரும்பிப்  பார்க்கிறது. பெரியவாள்பீடத்தை விட்டு இரை தேடி இறங்குவதற்காய் ஒரு தாவல். கட்.

கரடியார்  எதிர்திசை  நோக்கி  ஓட்டம்.  துறத்தல்.  தரை  மட்டத்தில்  கேமரா தாழ்விலிருந்து புலிப்பாய்ச்சல்.


ஒவ்வொரு வாக்கியமும் எழுத்தில் எப்படி பார்த்துப் பார்த்து இழைக்கப் படுகிறதோ  (படவேண்டுமோ) அதுபோல. சினிமாவிற்கு  ஷாட்தான் சொற்றொடர். அர்த்தமற்ற  வாக்கியங்களுக்கு  அதியுயர்ந்த  சினிமாவில் இடமில்லை.  நல்லிலக்கியம்  போல.

சப்ஜெக்டிவ் ஷாட் எனப்படும் பாத்திரப்ப்பார்வை எங்கெங்கு வருகிறது. நாலு  நிமிஷப்  படம்தானே. திரும்பப்  பாருங்கள். திரும்பத்திரும்பப் பாருங்கள். உங்களுக்குப் பிடிதிருந்தால் நல்லது.

மொக்கை என்று உங்களுக்குத் தோன்றினால் தவறிலை இழிவில்லை தரக்குறைவில்லை அடுத்த ஜோலி பாருங்கள்.


மரக்கிளை முதல் முறையாகக் காட்டப்படும் போது ஏன் அந்த கோணத்தைத் தேர்ந்தெத்தான்? பாலம் போன்ற மாயத்தன்மை காட்டி அது இல்லை  என்றானதும்  கரடியைவிட  நம்மிடம்தான்  கலவரம். நீங்கள் ஒன்றிவிடுகிறீர்கள் கரடியுடன் அதன் பீதி உங்களைத் தொற்றிக்கொண்டு விடுகிறது.


வாழ்வு மரணப் போராட்டம்.

இந்தப்படத்தை  ஒரு  தீவிர   இடதுசாரிப் பார்க்க நேர்ந்தால், இன்றைய சூழ்நிலையில் மலைக்குப்  பதில்  வனாந்திரத்தைப்  பின்புலத்தில்  வைத்துக் கரடியை  ஆதிவாசியாகவும்   தன்னைத்   தாய்க்கரடியாவகவும் கானக்கூடும்.

புலம்பெயர்ந்த  தமிழன்  கடைசீக்  காட்சியைப்  பார்க்க  இயலுமா? கண்ணீர் மறைக்காமல்.


குட்டிக்கரடியின் கலவரக் கத்தலில் அதன் முகம் சிவந்து கதறுகிறகதறல், எனக்கு கீழ்க்கண்ட கவிதையை நினைவுகூர வைத்தது.


கடல்களைத்தாண்டிக் கேட்கிறது
வீறிட்ட சிசுக்குரல்
                         - தருமு சீவராமு


ஃப்ரெஞ்ச் இயக்குணருக்கு இப்படியெல்லாம் கூட இந்தப்படம் அர்த்தப்படக்கூடும் எனத்தெரிந்திருக்குமா?.


கலையின்  சாத்தியக்கூறுகள்  எண்ணற்றவை,  எல்லைகளும்கூட  அற்றவை.