Cyrano de Bergerac - Jean-Paul Rappeneau - ஃப்ரான்ஸ்
1992 மெட்ராஸ் திரைப்பட விழா - நூற்றாண்டுவிழா மண்டபம் - மெட்ராஸ் பல்கலைக் கழகம் இந்த விழாவிற் காகவே பிரத்தியேகமாய் திரைப்பட அரங்காக மாற்றப்பட்டது. உலகத் திரைப்படங்கள் இங்கும் இந்தியத் திரைப் படங்கள் வாலஜா ரோடிலிருந்த கலைவாணர் அரங்கத்திலும் அயல்நாட்டு சிறப்புப் பார்வையாகக் கொரியப் படங்கள் தேவி திரையரங்கிலும் திரை யிடப்பட்டன. தேவியில் ஸினிமாக்காராள் கூட்டம் முண்டியது. கை சைஸ் கொரியர்களுக்கே அந்த களேபரம். பின்னே எத்தனைக் காலம்தான் அவ்விடெ டைனொசாரையே ஜோதியில் பார்த்து மோக்ஷம் அடைவதாம்!
நீள மூக்குடன் தன்னைக் குரூபியாக நினக்கும் ஒரு மாபெரும் போர் வீரனும் கவிஞனு னவனின் ஒருதலைக் காதல் காவியம்தான் இந்தப்படம். அழகின்மை காரணமாக தான் நிராகரிக்கப் பட்டு விடுவோமோ என்ற தயக்கத்திலேயே சொல்லாமல் மறைத்த காதல்.
இதற்குமேல் 'கதை' சொன்னால் எனக்கு நானே தண்டனை கொடுத்துக் கொள்ள நேரும் என்பதால் நிறுத்திக் கொள்கிறேன். (அண்ணன் கொல்கை வீரரு)
கதாநாயகன் ஃப்ரெஞ்ச் சூப்பர்ஸ்டார் 'Gérard Depardieu' படம் முடிந்து பலகாலம்வரை கேரெக்டர் மேலிருந்த காதல் காரனமாக நீள்முடி மீசை கெட்டப்பிலேயே இருந்ததாகக் கேள்வி.
என்னிடம் ஒரு நல்ல DVD உள்ளது. இருந்தாலும் நீங்கள் அண்ணா சாலை அடித் தளத்தில் தேடுவதே உரசலுக்கு உட்படுத்தப் படாத நமது நல்ல நட்பையும் பரஸ்பர பிம்பங்களையும் பாதுகாக்கும்.
கிராமத்து அன்பர்காள் ஆர்வக்கோளாரில் 1955 கருப்பு-வெள்ளைப் படத்தை வாங்கிவிட்ட மெட்ராஸில் உப்புப் புளி மொளகா உட்பட அல்லாமெ பொய் என்று ஏதோ மவுண்ட் ரோடில்தான் இதையெல்லாம் விளைவிப்பதைப் போல எளுதினால் கெட்ட கோவம் வரும் (ஊரானுங்க நல்லா உட்ரானுகபா ரவுசு)
படம் பார்த்தபின் குறைந்தது ரெண்டு நாள் தலை கிர்ரடிக்கும்.
சந்தோஷம் துக்கம் சிரிப்பு என நீங்களே நடமாடும் படமாய்த் திரிந்துகொண்டு இருப்பீர்கள். அதற்கு நான் கியாரண்டி.
அப்படியும் உமக்கு எதுவும் 'நிகழவில்லை' எனில் ENT ஸ்பெஷலிஸ்ட்டிடம் மொய்யெழுத விதிக்கப்பட்டிருக்கிறீர் என்று அர்த்தம், என்ன துட்டு கேழ்க்கப் ப்டாது.
விபரங்களுக்கு http://www.imdb.com/title/tt0099334/
தயவுசெய்து படம்பார்த்தபின் படிக்க http://www.imdb.com/title/tt0099334/trivia
பிகு: நான் சொல்லப்போகும் தகவல் உங்களுக்குக் கடுப்பு கிளப்புமே யானால் அதைக் காட்ட வேண்டியது என்னிடமன்று என்கிற முன் எச்சரிக்கையுடன் சொல்கிறேன்
இந்தப் படத்தை ஒரு 'மாதிரியாக' தமிழில் ஏற்கெனவே பார்த்து விட்டீர்கள்.
1990 இந்தப் படம் ஃப்ரான்ஸில் வெளியாயிற்று
1992 ஜனவரி திரைப்படவிழாவில் நம்ம ஊரில் ரிலீஸ்
1994 ல் நம்மூர் ரிலீஸ்.
கீழே படித்தால் BP எகிறும் நம்ம படம் கட்டித்தழுவியது மேற்படி படத்தை இல்லையாம் எந்த நாடகம் படத்திற்கு அடிப்படையோ அதே தான் நம்மாளுக்கும் அடிப்படையாம்.
நம்ம லக்கிய எளுத்தாளனுங்கோ நம்மூர் கதையெவெ சுட்டு நம்மகிட்டியே ப்லிம் காட்டசொல்லொ கமர்ஸியல் சினிமாவுல ஆல் க்ரைம்ஸ் அலோவ்ட் ன்னா நா சொல்றத்து.