ஜானு மாமி said... 23
மாமல்லன், நீங்க ஒரு மாமா மல்லன் என்ற ரீதியில் வாசகர் கடிதங்கள் வர ஆரம்பிச்சுட்டதோல்லியோ? அவாளுக்கு இது போல நிரம்ப வருதாம்.
#சும்மா தமாசுக்கு.கோவிச்சுக்காதீள்!
விமலாதித்த மாமல்லன் said... 26
விமலாதித்த மாமல்லன் said... 26
ஜானு மாமி
அம்பி, மாமி பேர்ல வந்து, வாஞ்சையோடா மாமான்னு கூட்டு, கைக்காரியத்தயெல்லாம் உட்டுட்டு, தனி பதிவே எழுத வெச்சுட்டயே ஒஞ்சமத்து ஆருக்கு வரும் சொல்லு.
யோவ் ட்விட்டர்ல என்னைக் காச்சு காச்சுன்னு காச்சுட்டு இங்கியும் கண்டினியு பண்றியா. சரி விதி வலியது.
என்னைப் போலவே நீயும் பண்ற ஒரே விஷயம் அதான் பஸ்ஸுல மாட்டிண்டியே ”ஸ்பெல்லிங் மிஸ்டேக்” - இப்பயும் பாரு, தேள் ளுக்கு பதிலா தீள் காட்டிக்குடுத்துடுத்தே!
அது சரி கமல்கஸான் எப்பப்பா புரட்சிகர படம் எடுத்தாரு.
சின்ன புரட்சிங்கோ சுருட்டு தாடிக்காரனை ஐடி போட்டோல வெச்சிகினு திரியறாப்பல இது இன்னா ’ஜானு மாமி’ ஒளவை சண்முகி. எந்திரன் எதிர்ப்பு + அப்பிடியே நம்பளையும் வார்ரீயளோ. கற்பனையக் கொஞ்சம் வள்துக்கோ.
காக்கி டவுசருக்கும் செழுப்பு சட்டைக்கும், கல்பனை ஏள்ரையாவுது பொறுத்தம்.
ஏழு அரை ஆளுங்க சேந்து ஏழரயா,
இல்லே ஏழு ஆளுங்களும் ஒரு அர டிக்கெட்டும் சேந்து ஏழரயா,
இல்லே எல்லா ஆளுங்களும் சேந்து ஏழரயா,
இல்லே ஏழரங்கறதே ஒண்டிக்கு ஒண்டி ஒத்த ஆளா #டவுட்டு
இதுலப் போலி ஏழர வேற எல்லா எடத்துலயும் உம்பேர்லப் பின்னுட்டம் பொட்டுகிட்டு இருக்குது. போலி எப்பிடி சேம் தத்துவதுல போடுதா இல்லே உன்னை ஆப்பாக்கறத்துக்காவவே ஆப்போசிட் தத்துவத்துல பின்னூட்டம் போடுதா?
பாவம்பா உம் பாடு. உன்னைய பயோரியா பல்பொடி ரெஞ்சுக்கு ஆக்கிட்டாங்களே.
நா வேன்னா ஒரு ஐடி கிரியேட் பண்ணவா கொஞ்சம் கற்பனை கலந்து.
போக உங்க கமிட்டி இன்னின்னா படத்தெ புரட்சிகர படமா ஒத்துக்குதாம் - போர்க்கப்பல் பொடம்கின் தவிர. எனக்கு பொலிட்பீரோவோட சினிமா ரசனையைத் தெரிஞ்சிக்கக் காட்டுத்தனமான அவா. இது அவாளோட அவா இல்லே, ஆவல்.
லிஸ்ட் குடுக்க டைம் ஆவும், ஏன்னா எதுல்லாம் நல்ல படம்? எதுல்லாம் நம்ம படம்? நம்ம படம் மட்டுந்தான் நல்ல படம். நாம நல்ல படம்னு நெனைக்கிற, அந்த டைரடக்கரோட மத்த படமெல்லாம் நல்ல படமா? இல்லே பப்படமா? நல்லா படமெடுத்துட்டு பின்னாடி கட்சிமாறி நாதாரி ஆயிட்டானா? அப்பிடிப் பட்டவன் படத்தை - நல்லதாவே இருந்தாலும் - எப்பிடி நல்லதின்னு சொல்றது? நம்பொ நல்லதின்னு சொல்றத்த மத்த ரோஸுங்கோ நெல்லதின்னு சொல்லுதா? இல்லியா? அவுனும் சொல்லி நாமளும் சொன்னா ஜனொ கன்பூஸ் ஆயிட்டா இன்னா ஆவுறதி? இப்டீக்கா கமிட்டி போட்டு டிஸ்கஸ் பண்ணி ஒலகப் பட லிஸ்ட் சொல்றத்துக்குள்ள்ளார, தொண்டனுக்குக் கண்ணாலமாயி, கொழந்த குட்டி ஆபீசுன்னு ஆனப்பொறவு, டெய்லி வந்துகிணு இருந்தவன், நாத்து கெழம மட்டும் வர ஆரம்பிச்சி, அப்பொறம் வழில பாத்து நல்லாகீறியாண்ட்டு டீ வாங்கிக் குட்த்துட்டு, நவுந்துடுவான். நமக்கின்னா அதுனாலெ? எப்பியும் ஸ்டெடி. மெட்ரோசிடி மாதிரி ப்லோட்டிங் பாப்புலேசன், பின்னாடியே புச்சி புச்சா பசங்கொ வந்துகினே இர்ப்பானுங்கோ கண்ணாலங்கட்ற வரிக்கும்.
அண்ணா கோச்காதிங்கண்ணா. உங்க இஸ்கோல்ல சேர்லீங்கண்ணா. ஏதோ எட்டிப் பாத்ததுலக் காதுல உய்ந்ததுங்கண்ணா.
ஒன்னு செரியில்லேன்னு சொன்னா மாற்றா எது செரின்னு காட்னூன்னு முப்பது வருசம் மின்னாடி உங்ககிட்ட ஏலகைவன் மாரி கத்துகினப் பாடந்தாண்ணா. அதனாலதாண்ணா உங்குளுக்கு நெல்லதுன்னு தோன்ற பட லிஸ்ட்டு கேக்கறங்கண்ணா.
தாலி கெட்னாலெ ரப்ச்சருதாண்ணா, பொண்ணுக்குக் கட்னாலும் சரி தத்துவத்துக்குக் கட்னாலும் சரி. பொண்ணுக்குக் கட்னா அத்தோட ரப்ச்சரு. தத்துவத்துக்குக் கட்னா அடுத்தவன் ரப்ச்சரு.
எப்பப்பாத்தாலும் எந்திரன் மாரி போல்ட் நட்டுல்லாம் டைட்டா இர்க்குதாண்ட்டு ஸ்பேனரும் கையுமாவேத் திரியனுங்கண்ணா.
அவாளுக்கு ஆயிரம் வேலை தலைக்குமேல கெடக்கும், செத்தெ நீங்களாச்சும் ஒத்தாசை பண்ணி பெஸ்ட் பிக்சர்ஸ் ஆஃப் த வேர்ல்ட் லிஸ்ட்டை வாங்கிக் குடுங்கோ ஜான்மாமி. அட பெஸ்ட்டு பேரு பட்டுனு வந்துட்ச்சி பார்பா. ஜான்மாமிங்கற ஐடி கிரியேட் பண்றதுலப் பிரச்சனையே இருக்காது. இந்த ஐடிதான் பிரச்சனையையேக் கிரியேட் பண்ணும். அதான நமக்கு வேண்டியதெ.
ஐடியோட ஐடெண்டிடி என்ன ஒரு பாந்தமா அமஞ்சுடுத்து பாத்தியோ! ஜான்மாமிங்கிற ஐடில என்னல்லாம் இருக்கு பாரு!
பொழுதன்னிக்கும் பார்ப்பான் பார்ப்பான்னு திட்னாலும் நீயும்கூட பொறப்பால பிராம்மணன் அப்பிடிங்கறது மாமில இருக்கு.
அப்டியே இருந்தாலும் இந்துமதவாதியில்லேன்னு காட்டிக்க ஜான் வந்துடுத்து.
ரெண்டுத்தையும் சேர்த்தா கலப்புத்திருமணம் முற்போக்குன்னு காட்டிக்க ஜானும் இருக்கு மாமியும் இருக்கு.
ஜானும் மாமியும் சேர்ந்து அர்த்தநாரிங்கர ஆன்மீக தத்துவத்தின் அடையாளமாகி ’சோஷியலி கான்ஷியஸ் ஹிண்டு மாமா’வையும் கரெக்ட் பண்ணிண்டுட்லாம்.
ஆணும் பெண்ணும் சரிக்கு சரிபாதின்னு பெண்ணியவாதமாகவும் ஆச்சு. ஏதோ ரெண்டு பேர் ஆர்வத்தோட வந்தான்னா ரெப்ரசெண்டேஷனும் ஆச்சு.
அற்பனுக்கு பொவுசு வந்தா அர்த்த ராத்திரில கொடை புடிப்பான் - பயமொளி
புது மதமாரி புது ஆண்டவனை ரெஸ்ட்டெடுக்கவுடாம உலுக்கிகினே கெடப்பான் புயுமொளி
ஸ்லோகம் புதுசு
அடையாளங்கள் புதுசு
அர்ச்சகர் புதுசு
அர்ச்சனை புதுசு
கடவுள் புதுசு
- பூஜை மட்டும் ரொம்ப ரொம்பப் பழசு ஓய்
அடையாளங்கள் புதுசு
அர்ச்சகர் புதுசு
அர்ச்சனை புதுசு
கடவுள் புதுசு
- பூஜை மட்டும் ரொம்ப ரொம்பப் பழசு ஓய்
ஸ்லோகம் - ஸ்லோகன் ஆகியிருக்கு வேய்
அங்க மனுசன் பேரைச் சொல்லி - நட்சத்திரம் ராசி பேரு கோத்திரம் சொல்லி - கடவுளுக்கு அர்ச்சனை.
இங்கக் கடவுள் பேரைச் சொல்லி - தத்துவத் தராசுல நீ மட்டம் மண்ணு மசிறுன்னு சொல்லி - மனுசனுக்கு அர்ச்சனை.
உன் தத்துவத்துப்படி வாழாதவனெல்லாம் தத்தாரியா?
இல்லே உங்க வாழ்க்கையைத் தவிர மத்தவந்தெல்லாம் வாழ்வே இல்லையா?
ஏ பாவிகளே! மாதிரியில்லே கொரல் உடறே!
என்ன ஒரு அராஜகம்.
ஓவரா வாய்வுட்டு மாட்டிகினீனா முட்டிக்கிமுட்டி தட்டும்போது வெள்ல் இட்டாற ஒதவுறது, ’தூக்கி எறி’ ன்னு சொல்லிக் குடுக்கிறியே, அதே சட்டம்தான். அந்த சட்டத்தின் துணை கொண்டுதான் அந்த சட்டத்தின் பேரால்தான் வெளில வர முடியுது. நாவகம் இருக்கட்டும்.
போலீஸ் பந்தோபஸ்த்தோடு மீட்டிங் போட்டு, என்னடா உங்க கெவர்மெண்ட்டு என்று கேள்வி கேட்க முடிகிறது ஜனநாயகத்தில்.
உன் தத்துவம் உச்சத்துல இருந்த / இருக்கற நாடுகளில் எதிர் விமர்சனம் வைத்த எத்தனை பேர் மறுநாள் காலைச்சூரியனைப் பார்த்திருக்கிறான், மனசாட்சி என ஒன்று இருந்தால் தொட்டு சொல்.
நாலு பேரு சேந்ததுக்கே இந்த ரவுசு உட்றீங்களே.
அதிகாரக் குவிப்பு எதன் பேரால் நிகழ்ந்தாலும் உச்சபட்ச ஆபத்தையே உண்டாக்கும். இல்லையென்று சொல்லவியலாதபடி முகத்தில் அறையும் சத்தியம்.
தத்துவத்தை உட்டுட்டு ஓடியாந்த நாடுகள்ல பூரா டீக்கடை பெஞ்செல்லாம் பாலிஷ்போட்டு ப்ளேட் அடிச்சி ஃபாஸ்ட்ஃபுட்டா மாத்திகினு இருக்கான்.
மூளையை இஸ்திரிக்கிக் குடுத்தவன் நாட்ல எல்லாம் பெஞ்சு இத்துப்போயி தரைல கட்டம் பொட்டு பெஞ்சுன்னு நெனச்சுக்க சொல்லி க்ளாஸ் எடுத்துகினு இருக்கான்.
பாவப்பட்ட ஜனத்துக்குப் பட்டிணிச் சாவு மட்டுமே நிரந்தரம்.
சாய்நாத்தை கட்டுரை எழுத வைக்கிற விஷயங்கள் இங்கு மட்டுமே என்றில்லை, வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக இருக்கின்றன. ஆனால் அதை எழுதுவதற்கான சுதந்திரம் ஜனநாயக நாடுகளில் மட்டுமே இருக்கிறது. அணிதிரள ஒன்றுபட கோஷிக்க தூஷிக்க ஒரு ஜனநாயக நாட்டில் மட்டுமே இடம் இருக்கிறது. இது ’போலி’ என்று நீங்கள் சொன்னாலும், உரிமை இங்கு மட்டுமே இருப்பது, மறைக்க முடியாத உண்மை.
கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவை என்னும் அறிவுமில்லார்
அவன்கிட்டப் பேசவேண்டியத எவனெவன்கிட்டயோப் பேசி ஏன் அவன் காலத்தையும் உன் நேரத்தையும் வீணாக்கறே?
ஓஹோன்னு இல்லாட்டியும் சோத்துக்குப் பிரச்சனையில்லை, சொந்த வீட்டுக்கும் பிரச்சினையிlல்லை, ஓஸில ப்ராட்பேண்டு, ஆஃபீஸ்ல வேலைக்கு வேலையும் பாத்துகிட்டு நடுநடுல எந்த பஸ்ஸுல ஏறி இன்னாத்தப் பேசிக்கினு எத்தப் பராக்குப் பாக்கலாம்னு ரோசிக்கிற ஆளுகிட்டப் போயி அது சரியா இது சரியாங்கற அனாவசியப் பேச்சு இன்னாத்துக்கு. தம்பிடிக்கிப் புரோசனமில்லே.
ச்சும்மா கலாயல். அது சரி இந்த ஜானு மாமி ஜான்மாமிக்குக் கூட எவனாச்சியும் போலி ஐடி கிரியேட் பண்டப்போறான். உங்காளு ஒர்த்தரு, இந்தப் பதிவர் வாலுங்கோ, டவுசர் அவுத்துருவானுங்கோன்னு எனக்கு அட்வஸ் குட்த்தாரு. . பாத்தியா கட்சீல உன்னியவே பஸ்க்கி தண்டால் எடுக்க உட்டானுவோ.
....................ஓட்டப்பன் வீட்டைச் சுடும்.
பி.கு. வாப்பா வா குறி மறி பிறி சொறின்னு, அனானி குனானின்னு, வெவ்வேறு பேர்ல ஏகப்பட்ட கூட்டம் முண்டறா மாதிரி ஏகோபித்த ஆதரவுன்னு பிலிம் காட்டிகினு வண்ட வண்டையா பின்னூட்டம் போட்டு எனக்குக் கொஞ்சம் ஹிட்ஸை ஏத்து. புரட்சிகர பொன்னுலகை உருவாக்கும் கனவுக்கு, ஏதோ உன்னால முடிஞ்ச காண்ட்ரிப்யூசன்.
யாருக்கும் ஜெயிப்புமில்லா தோற்புமில்லா வெட்டி இணையப் போர் பாத்தேளா இங்கே!