என் சிறுகதைகளும் குறுநாவலுமாக 11 கதைகள் கொண்ட அறியாத முகங்கள் (1500 ரூபாய் பத்மினி கோபாலன் அவர்களால் கடனாகவும் பின்னொருநாள் திருப்பித்தரப் போகையில் தேவையில்லை என்கிற அன்பளிப்பாகவும் 1000 ரூபாய் சேமிப்பு மற்றும் அலுவலக GPF லோனாகவும் மொத்தம் 2500 ரூபாய் செலவில் போடப்பட்ட புத்தகம்)
வெளியீட்டுவிழா 21.12.1983ல் நடந்தது. இடம்: LLA கட்டிடத்தின் சிறிய அறை.
வெளியிட்டவர் அசோகமித்திரன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டவர் வண்னநிலவன்
கட்டுரை வாசித்தவர்கள் அம்ஷன் குமார், விக்ரமாதித்யன், வித்யாஷங்கர், கேவி ராமசாமி (ஆத்மாநாம் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் வராமல் போக அவரது கட்டுரை மீட்சியில் வெளியானது).
அட்டை ஓவியம்: அதிமூலம்
தேவநேயப்பாவாணர் நூலக மாடியில் இருக்கும் சிறிய அறையில் நடந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் 70லிருந்து 80 பேர் இருக்கக்கூடும். வருகைதந்தவர்கள் அனைவரும் கலை இலக்கிய சிறுபத்திரிகைச் சூழலில் இயங்கிக் கொண்டிருந்தவர்கள்.
நூல் வெளியீட்டுக்காக ஆன இடவாடகைச் செலவு அநேகமாக 5 அல்லது 10ரூபாயாக இருக்கலாம். அழைப்பிதழ் அச்சடித்த செலவு 10-15 ரூபாயாக இருக்கலாம். மேற்கண்ட அழைப்பிதழ் மிகச்சிலருக்கு மட்டுமே தபாலில் அனுப்பப்பட்டது. மீதியெல்லாம் ஆசிரியரின் நேரடி சைக்கிள் டெலிவரி.
விற்ற புத்தகங்கள் 14. புத்தகத்தின் விலை 8.00 புத்தகம் விற்றுக் கிடைத்த 134 ரூபாய்ப் பணத்தை -சிலர் 23 வயதுக்காரனின் ஆர்வம் மற்றும் தன்னம்பிக்கைக்கான பாராட்டுதலாய் 10 ரூபாய்க்கும் வாங்கிச் சென்றனர்.நானும் நம்பியும் துரையும் அன்றிரவே (வித்யா ஷங்கரும் தண்ணியடித்துக் கொண்டாடி செலவழித்து விட்டோம்.
இலக்கியத்திற்கு விளம்பரம் தரமான எழுத்து. வாகசன்வாய் மொழியும் தரச்சான்றிதழ் ஆயிரம் ISIக்கு இணையானது. குண்டித்துணி வழித்து சிரிபூட்ட அல்லாடும் கோமாளிக்குதான் தேவை ஆர்க் லாம்ப் வெளிச்சம்.