26 December 2010

விடிஞ்சுடுத்தோ!

எவன் விழாவாக இருந்தாலும்
அழையா விருந்தாளியாய்
வாசலில் கடைபரப்பு.

ஆரம்ப இதழ்முதல்
விலைபோகா சரக்கை
கொலுவாக வை
பாத்ரூம் போய்வருபவன்
பார்வையில் பட

ஷாப்பிங்போல
விண்டோ புரட்சி செய்
***************************



எல்லோருக்குமான மழை
இரவிலே பெய்யும்.

பெய்து கொண்டுதான் இருக்கிறது
எங்கெங்கோ.

போர்வைக்குள் கிழியும்
வாய்க்கு
நனையத்தான் நாதியில்லை

**********************************

வாந்தியும் பேதியும்
ஒன்றாக வருகையில்
கிடக்கப் படுத்தல் உசிதம்
வலமோ இடமோ
தேவைப்படும் பக்கம்
திரும்பிக் கொள்ளலாம்

வெசாளக்கிழமை காஞ்சி
மீதி நாளெல்லாம் கஞ்சியோ கஞ்சி

***************************

உருளும் கல்மேல்
ஊரும் பூச்சி

கோச்சிக் கிட்டா
மசுரா போச்சி


*****************************

நீ நம்புகிற
சொம்பிலா
இருக்கிறது நிஜம்?


*****************************

ரா தொலைக்கத்
தூக்கம்
பகல் தொலைக்க
ரயில் சிநேகிதம்

வந்ததும் பொய்யல்ல
போவதும் பொய்யல்ல
வாழ்வது மெய்யா

*******************************

கொள்கைவெறி
தலைக்கேறி
கவட்டையில் நெறி கட்ட
கோமணம்
கொடியாயிற்று

********************************

ஐ.டி காரன்களை வைத்து
விண்டோஸில் புரட்சி செய்

வெளியில்
பட்டொளி வீசிப்
பறக்கிறது
உன் பதாகை

கங்காணி
கவனியாத சமயங்களில்