சனம் நிக்கிது சைடால கிட்டிமுட்டி
வந்தார் ஐயா வண்டி கட்டி
”சட்டையக் கழட்டுங்கோ
ஸ்பெசல் தரிசனம் பார்க்கலாம்
உள்ளே வாங்கோ
கர்ப க்ருஹத்துக்கு எதுத்தாப்புல
ஒக்காந்துக் கோங்கோ”
தட்டிலே விழுகின்ற தட்சணை பார்த்துப்
பின் முறுவலிக்குது பித்தளை கேட்டு
அரை ஐயிரு வெளுத்த மயிரு
வெத்து மாரு இடுப்புல பேண்டு
சட்டை கழண்டு
கஷ்க்கத்துக்குப் போச்சு
”கழட்டுடா நீயும் ” கட்டளை ஆச்சு
”இல்லை பரவால்ல
இங்கேந்தே பாத்துக்கறேன்”
பூணூல் போடாத
முழு ஐயிரு சொன்னாரு
வெட்டி ஜனத்தோட
வெளியிலதான் நின்னாரு
உரிச்ச சட்டையை மாட்டிகிட்டே
வெண்தாடி வேந்தர்
பொருள்விளக்கம் தந்தாரு
”நான் போய்க் குந்தினது
ஆதி சங்கரனின்
புட்டம் பட்ட எடம்”
ஓ அப்படியா சேதி!
ஆனாலும் சட்டை
அவிழ்க்கவெல்லாம் முடியாது
தத்வமசி
*******************
அஹம் ப்ரம்மாஸ்மின்னு
நெனைக்கிற அசடு,
கருவறை தடாலடிக்கு
எதிர்வாதம் பண்ணினா
இருக்கவே இருக்கு
”பார்ப்பண பாதந்தாங்கி”
பட்டப்பேர் ஒட்டிவிடு
*******************
வேர்த்த பூணூல் விழியைப் பிதுக்க
கக்கம் விரித்து சட்டை பதுக்கி
வேகமாய்ப் பின்தொடரும்
கதை மறைக்க
டேய் சவுண்டிப் பார்ப்பான்னு
சபை நடுவில் சவுண்ட் சர்வீஸ்
*******************
எடுத்ததுக்கெல்லாம்
பார்ப்பான்னு திட்டு
எதிர்ப்படும் பிராமணத்தி
எவளைப் பார்த்தாலும் இளி
**************************
பொட்டைச் சிவப்பிலே வை
புத்தியைக் கவட்டிலெ வை
புட்டத்துக் கிழிசலை தைக்காமல்
இஷ்டத்துக்கு எழுதலாம் பொய்
**************************
உள்ளதைச் சொல்றவன்
என்னிக்கிடா நல்லவன்?
*************************
விலங்குப் பண்ணைக்கு
இன்ஜெக்ஷன் போட்டு
உலக இலக்கியம்
விளங்ககுதா பாரு
*************************
இஷ்ட தெய்வம்
காமாக்ஷிக்கு
அம்பேத்கர் பெரியாரை
அறிமுகப் படுத்தியாச்சா?
அஞ்சறைப் பெட்டிக்கு
ஏனிந்தஅறைகூவல்
*************************
ஹே கம்யூனிஸ்ட்டுக் காமாக்ஷி?
சொல்லடி ஜோசியம்
சேகுவேராவைக் கொன்றது
பொலிவியாவிலா? இல்லை
தினம் தினம் சாவது
போலிகளாலா?
*************************
ஆன்மீகத்தையும் மார்க்ஸியத்தையும்
வெல்டு பண்ணாதேன்னு 82 இலக்குல
கோவை ஞானிக்குத் தட்டி
உங்க பேஸ்ட்டுல உப்பிருக்கா?
************************
என்ன எழவுடா இது
எம்பரேசிங்காப் போச்சு
பைத்தியக்காரன் சிவராமனை
பஸ்ஸ்விடச்சொன்னால் ஆச்சு.
நக்ஸல்பாரி நம்பூதிரி
மார்க்சியத்துக்கு
சாட் பூட் த்ரீ