//அவரது நிலைபாடுகள், வாதங்களை ஒட்டுமொத்தமாக பார்க்கையில் அவர் ஒரு கலகக்காரர், புரட்சிக்காரர் என்ற சித்திரமே உருவாகிறது. இதை நம்பும் இடதுசாரிகள் அவர் முதலாளித்துவ ஊடகங்களின் சிருஷ்டி என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். அவரை இன்று வரை தூக்கி நிறுத்தி இருப்பது அவருக்கு இருக்கும் ‘உலகப்புகழ்’ என்ற மாயை. அந்த மாயையை உருவாக்கியவை மேலை ஊடகங்கள்.
அருந்ததி ராயின் நிலைபாடுகளில் எப்போதும் மாறாமல் இருக்கும் இரு அம்சங்கள் உண்டு. இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் அவரது ஆதரவு உண்டு. ஏன்? இந்திய ஒருமைப்பாட்டை முதல் எதிரியாகக் கொள்ளும் இரு சக்திகள் ஒன்று சீனா, இன்னொன்று கிறித்தவ மதமாற்ற அமைப்புகள். அருந்ததி எந்நிலையிலும் சீனாவுக்கோ மிஷனரிகளுக்கோ எதிரான எதையும் சொல்வதில்லை. இவ்விரு சக்திகளும் வடகிழக்கில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இன்று இந்த ஒத்துழைப்பு இந்தியாவின் பல பகுதிகளில் பரவி இடதுசாரி தீவிரவாதமாக மாறியிருக்கிறது. அருந்ததி இந்த இரு சக்திகளின் ஊடகமுகம்.
ஆம், அருந்ததியை முதலில் ‘உலகப்புகழ்’ பெறச்செய்து பின் நம் மீது சுமத்தி நம் சிந்தனையை ஊடுருவியிருப்பது இந்தியாவை சிதிலப்படுத்த விரும்பும் மேலநாட்டுச் சக்திகளே என்று பொதுப்பார்வையில் உணர முடியும். அருந்ததி போராளி அல்ல.வெறும் ஊடகப்பிரமை மட்டுமே. அவர் இந்திய சமூகத்தின் மாற்றத்துக்காகவோ இந்தியா மக்களின் முன்னேற்றத்துக்காகவோ போராடுபவர் அல்ல. அவரது நோக்கம் இந்தியாவின் அழிவு, இச்சமூகத்தின் சிதைவு. அதன் மூலம் உருவாகும் மாபெரும் அராஜகத்தில் இருந்து லாபம்பெற காத்திருக்கும் அதிகார சக்திகளின் ஐந்தாம்படை அவர்//
இந்திய இறையாண்மையை எதிர்த்துத் தன்னந்தனியாகப் புரட்சிகரமாக போராடிக் கொண்டிருக்கும் அருந்ததி ராயை இழிவு படுத்தி ஒருமுறை வ.பு
இடதுசாரிகள் அவருக்கு இருக்கும் ‘உலகப்புகழ்’ என்ற மாயையில் மயங்குவதாய் சித்தரித்து மறுமுறை வ.பு
இந்திய ஒருமைப்பாட்டை முதல் எதிரியாகக் கொள்ளும் இரு சக்திகள் ஒன்று சீனா, இன்னொன்று கிறித்தவ மதமாற்ற அமைப்புகள். இரண்டுமுறை வ.பு
//அவரது நோக்கம் இந்தியாவின் அழிவு, இச்சமூகத்தின் சிதைவு. அதன் மூலம் உருவாகும் மாபெரும் அராஜகத்தில் இருந்து லாபம்பெற காத்திருக்கும் அதிகார சக்திகளின் ஐந்தாம்படை அவர்/
அருந்ததி ராய் பேட்டியை வெளியிடும் நம்மையும் சேர்த்து ஒரு வ.பு
செய்து இருக்கும் இந்தப்.....யை என்ன செய்யலாம். இவ்வளவையும் எழுதி தன் தளத்தில் ஏற்றி ரீடருக்கெல்லாம் இது போகும் என்று நன்றாக அறிந்திருந்தும், வேண்டுமென்றே வன்மத்துடன் அப்படிப் போக வேண்டும் என்பதால் கொல்லைப்புறம் வழியாக சேற்றை அடித்துவிட்டு பதிவையே டிலீட்டும் செய்திருக்கிறார்.
அஹ்ஹா நம்மிடம் யாரேனும் எஸ் ஆக முடியுமா நாம் ஏற்கெனவே பிரதி எடுத்து வைத்திருக்கிறோம். முழு கட்டுரையையும் படுத்துப் பாருங்கள். இதோ அந்த சுட்டி http://bit.ly/g5CIMt
இலக்கிய சூரர் ஆன்மீக தீரர் இவரின் ஹிந்து ஞான மரபு போலவே தளம் எப்படி வெற்றாய் இளிக்கிறது என்பதைக் கட்டுரையின் தலையிலேயே பார்த்தீர்கள் அல்லவா.
அதனால்தான் அவரைப் பற்றி கட்டுரை எழுதும் போதெல்லாம் பெயரின் ஒரு எழுத்தை மட்டும் மாற்றி பர்மனெண்ட் டெம்ப்ளேட்டாக சூத்தாம்பட்டையில் செருகிக்கொண்ட தலையன் படம் போட்டுப் பிரசுரிக்கிறோம்.
சீனாவை சிறுமைப்படுத்திய இவரை, பிட் நோட்டீஸ் அடித்து இவர் இருக்கும் ஏரியாவுக்குப் போய் விநியோகித்து நியாயம் கேட்கலாமா?
ஐந்தாம்படை என்றவரின் அலுவலகம் போய் ஆர்ப்பாட்டம் நடத்தலாமா? அடச்சே அவசரப்பட்டு VRS வாங்கிவிட்டார்.
இலக்கிய தீபத்தால் சினிமாவிற்கு விளக்கு பிடிக்கும், இவரது தற்போதைய முதலாளியான மணிரத்தினத்திடம் போய் போராடலாம் என்றால் அதில் ஒரு சிக்கல். நமது ஆள்பலம் பார்த்து, போணியாகாத கும்பல் கூட்டும் சினிமா ஏஜெண்டாய் நினைத்துவிடக் கூடும்.
நம் எதிர்ப்பைக் காட்ட குறைந்த பட்சமாய் என்ன செய்யலாம்?
அருந்ததி ராய் போல தனக்கு தனக்கு உலக அங்க்கீகாரம் கிடைக்கவில்லையே என ஜெயமோகன் புலம்புவது பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது என்று சொல்லி புரிந்து புரியாத பாஷையில் கிழிந்த தத்துவ தாவணி கட்டி
புரட்சி கரசேவை செய்யும் பித்துக்குளியை வைத்து ஒரு பஸ் விடலாம்.
///மாமல்லன் தொடர்ந்து எழுதி வருபவைகளை வாசித்தால் (!) பாவமாகத்தான் இருக்கிறது...///
ஜெயமோகனை விமலாதித்த மாமல்லன் விமர்சித்தால் சம்பந்தமே இல்லாமல் பஸ்ஸுல ஏத்தி பிட்டு படம் போட்டுக் கவுஜ எழுதறவனோட கைகோத்து தர்ம அடி.
அருந்ததி ராயை ஆதரிப்பவர்களை ஐந்தாம்படை என ஜெயமோகன் விமர்சித்தால் புரட்சிகர பவர்கட்.
உயர உயர பறந்தாலே ஊர்க்குருவி பருந்தாகாதாம்.
பறப்பது போல பம்மாத்து செய்வதை என்னவென்று சொல்வது?
உன் கனவை மற நம் கனவை நினை
1060 Comments
பத்ரன்
என்ன நடக்கிறதென்று பார்ப்போம்
கவிழ்நாலிக்கோவ்
வெத்துப் பயல்களுக்கு நெத்தியடி சுத்தியடி மத்தபடி
மாந்தி
மணிரத்தினம் என்ன அல்லக்கை அவன் அண்ணன் இருக்கும் இடத்திற்கே போய் நம் எதிர்ப்பைக் காட்ட வேண்டும்
வராஹமித்திரன்
கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் என்றால்...கட்டுரை கொஞ்சம் தரமான நடையில் இருந்திருக்கலாம்.
பிந்திரன்மேலே
அடேய் வராஹமித்ரா பார்ப்பண பாடு மாமாவே. பிச்சி பிச்சிப் பிடுவோம் பிச்சி. நாங்க சுப்பிரமணிய பாரதியவே சுளுக்கெடுக்கறவங்க.
கனவு
சகாவு பிந்திரன்மேலே நம் எதிரிகளை வென்றேடுக்க முயற்சிக்க வேண்டும். இன்றில்லை எனினும் என்றேனும் ஒரு அமாவாசை இருட்டில் பெருமாள் உண்டியல் என தவாறாக நினைத்து நமக்கும் போட்டுவிடக் கூடும்.
தமிழ்தண்டி
கனவே புனைவின் நினைவே இனியென் துணிவே கிடையாது நமக்கு இழிவே
எருக்கம்பூ
நல்ல ஆழமான கருத்துள்ள கட்டுரை. எட்டாவது முறையாக மனப்பாடம் செய்துகொண்டு இருக்கிறேன்.
New yaar_ker
Hey man you think you are the first evolutionary. Bullshit man.
Bit_Pepper
We know what we are doing. do you know whar you are doing?
தருக்கிநட
தமிழ் நாட்டில் வந்து ஒரு சாயாக்கடை நாயான் இந்தியாவின் இறையாண்மையை தூக்கிப் பிடிப்பானாம் அதை நாம் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதா. இடது காலைத் தூக்கி அவன் வலது கவட்டையில் எட்டி உதைக்க வேண்டாமா? தவறாக எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை. இதில் நீங்கள் காட்டும் மெத்தனம் என் ரத்தத்தைக் கொதிக்க வைக்கிறது. இறையாண்மையாம் இறையாண்மை. மொள்ளமாரி இறையாண்மை முடிச்சவிக்கி இறையாண்மை....
இன்னும் வரும்....
அணியணியாய் வந்து கொண்டே இருப்பார்கள்
பன்னாட்டு ஐடி அலுவலகங்கள் இருக்கும் வரை
அதில் ஓஸி இண்டர்நெட் கிடைக்கும் வரை
ஐடி தயாரிப்பை கூகுள் கட்டுப்படுத்தாத வரை
மாதம் 60,000 அல்லது 70,000 வாங்கும் பாட்டாளி வர்க்கம் இருக்கும் வரை
பாட்டாளிகளால் பாட்டாளிகளுக்காக பாட்டாளிகளின் உலகை நிர்மாணிக்க வேண்டி அணியணியாய் வந்து கொண்டே இருப்பார்கள்
ஓஹோ எந்தன் புரட்சி
நீ வாராய் எந்தன் புரட்சி
கலை மேவும் ஹிந்துத்வ ஜாலம்
புரட்சி கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் பு-ர-ட்-சி