30 December 2011

எக்ஸைல்

ஒரு நாவலை எப்படி எழுதவேண்டும் என்று எனக்குத்தெரியாது. தெரிந்திருந்தால் எழுதியிருக்கமாட்டேனா? ஆனால், நாவலை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் அதில் சம்மந்தா சம்மந்தமில்லாமல் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பது சாரு நிவேதிதாவுக்குத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் ஆண்டுக்கொன்றாய் எழுதிக்கொண்டே இருக்கிறார் போலும். ஆரம்ப வாசிப்பில், ஆசிரியரின் மேலை வாசிப்பு காரணமாக அதை அப்படியே இறக்கிக் கீழ் வாசிப்பாக எழுதிக்கொண்டு போவதுபோல் தோன்றியது. 

24 December 2011

ஆராய்ச்சியும் அகழ்வாராய்ச்சியும் அல்லது சோத்துக்கு ஊம்பியும் சொகத்துக்கு ஊம்பியும்


<நான் தயாரிப்பில் ஈடுபட்டு பதிப்பித்த நரிக்குறவர் அகராதியும், ஜேனு குருபர் மொழி அகராதியும் ஃபோர்ட் ஃபவுண்டேஷன் நிதியுதவி பெற்றவை அல்ல; ஒரு பைசா கூட ஃபோர்டிலிருந்து வந்ததில்லை. நான் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் இந்த அகராதிகளை யார் வேண்டுமென்றாலும் வாங்கிப்பார்க்கலாம். இந்த அடிப்படை பொது விபரத்தினை அறிந்துகொள்ளாமல் மேற்கண்ட பதிவில் மாமல்லன் என்னை அவதூறு செய்வதன் காரணம் என்ன?>

21 December 2011

சாமானியர்களின் சாமானும் அறிவுஜீவிகளின் சாமானும்

சாமான் என்று எழுதினால் அறிவுஜீவி அக்ரகாரத்தில் ஆச்சாரம் கெட்டு, பொறுக்கி மொழியாகிவிடும். ஆனால் அயல்நாட்டானின் அம்மண சாமானத்தை அட்டையில் படமாய்க் போட்டுக்கொண்டு, கலாச்சாரம்: அ-கலாச்சாரம்: எதிர்-கலாச்சாரம் என புடுக்கும் கூடசேர்ந்து ஆட அட்டைக்கத்தியைச் சுழற்றுவதுதான் அதிதீவிர அறிவுப் புரட்சி.

20 December 2011

அவசியமும் அத்தியாவசியமும்

Shaseevan Ganeshananthan கொண்டோடியின் இன்னொரு கருத்தையும் கீழே இணைக்கின்றேன். கொண்டோடி 1995 - 2004 வரை புலிகள் இயக்கத்தில் இருந்தவர். அதுமட்டுமல்லாது 'ஜெயசிக்குறு' சண்டையில் பங்குபற்றியுமுள்ளார். 

நரம்பில்லாத நாக்கும் எலும்பில்லாத மூக்கும்

விளிம்பு நிலை மக்கள் என்பதைத் தமிழில் சொல்லிவிட்டு லும்பன் என்று ஆங்கிலத்தில் கூறுவதில் இருப்பது அறிவார்த்தமா? மொழிப் பற்றாமையா? ஆராய்ச்சி செய்வதற்கான டாலர் பற்றாமையா?

சென்னை உலக திரைப்படவிழா 19 டிசம்பர் 11 மலையின் நிறங்கள்

குட்டிப் பையனொருவன் எட்டி உதைக்கும் நிலையில் இருக்க, அந்தரத்தில் நிற்கும் கால்பந்து. தபால்தலை அளவில் இப்படியான ஒரு புகைப்படமும் கொலம்பிய நாட்டுப்படம் என்கிற கூடுதல் தகவலும் மட்டுமே இந்தப்படத்தைப் பார்க்குமுன் எனக்குத் தெரிந்தவை.

19 December 2011

வேலை

நாவலைப்பற்றி நான் எழுத இருக்கிறேன் என்பது எப்படிப் பரவிற்று என்றுதான் தெரியவில்லை.

சென்னை உலக திரைப்படவிழா 18 டிசம்பர் 11 அன்னா பற்றிய கடைசி அறிக்கை

இன்று பார்த்த முதல் படம் An Ordinary Execution. இதைத்தான் பார்ப்பது எனத் தேர்வு செய்யக் காரணம், கதையின் பின்புலம் ஸ்டாலினிய காலம் என்பது மட்டுமின்றி ஸ்டாலினே பாத்திரமாய் வருகிறார் என்பதும்தான்.

18 December 2011

சென்னை உலக திரைப்படவிழா 17 டிசம்பர் 11 ஹேபியஸ் பாப்பம்

இன்றைய தினத்தின் சிறந்தபடம் என்று இத்தாலியின் Habamus Papam என்றுதான் கூறவேண்டும்.

இளையராஜாவும் எம்டிஎம்மும்

எந்த சம்பந்தமும் இல்லாத வித்யாசங்கர் நம்பிராஜன் நக்கீரன் என எல்லோரையும் லும்பன்கள் என்று வசைபாடவேண்டிய அவசியம் என்ன? வித்யாசங்கரை விக்ரமாதித்தனைக் கடைசியாகப் பார்த்தது 95 புத்தகக்கண்காட்சியில் என்று நினைக்கிறேன். அப்புறம் தொடர்பே இல்லை. திரும்ப எழுதவந்தபின் 2011ல்தான் வித்யாசங்கருடன் சாட்டிலும் விக்ரமாதித்யனுடன் கைபேசியிலுமாகத் தொடர்புவந்தது.

17 December 2011

சென்னை உலக திரைப்படவிழா 16 டிசம்பர் 11

இந்தப்படத்தின் முதல் பத்து நிமிடங்களைப் பாருங்கள். கால்பந்தாட்டக் கலவரம் போலந்து பட்ஜெட்டுக்குள் இவ்வளவு அட்டகாசமாய் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படம் போகப்போக ஹாலிவுட்படம்போல் ஆகிவிடுவது துரதிருஷ்டம்.

16 December 2011

சென்னை உலக திரைப்படவிழா 15 டிசம்பர் 11

நத்தையடிக்கும் படங்களுக்கும் பெரும்பாண்மைக்கும் எப்போதும்  ஆவதில்லை. நிதானமாக நகரும் படங்களைப் பார்க்க மனதைத் தயார்படுத்திக் கொண்ட அகிம்சாவாதிகளையும்கூட வன்முறையாளர்களாய் ஆக்கவல்லவை பிரஸ்ஸோ(ன்) மணிகெளல் அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றோரின் படங்கள். 

15 December 2011

சென்னை உலக திரைப்படவிழா 14 டிசம்பர் - சைக்கிள் சிறுவன்

இன்று மதியமும் மாலையும் சிறுவர்களைப் பற்றிய இரண்டு படங்கள் பார்க்கக் கிடைத்தன. இரண்டுமே தந்தையால் புறக்கணிக்கப்பட்ட சிறுவர்களைப்பற்றிய படங்கள். ஒன்று வடிவ ரீதியில் கலைத்துப்போட்டு விளையாடித் தீர்த்த படம் மற்றது. விசேஷமாக ஒன்றுமில்லை சும்மா பாருங்கள் என்பதுபோல் விளையாட்டாய் சொல்லிச்செல்லும் படம். இரண்டு தந்தைகளுமே வாழ்வில் வெற்றிகாண முடியாது தவிப்பவர்கள். தவிப்பின் ஆதங்கம் முந்தைய தந்தையிடம் வன்முறைச் செயல்களாகவும் பின்னதில் தப்பியோடுதலாகவும் வெளிப்படுகின்றன. 

08 December 2011

நிர்மல் ஷேகர் - விளையாட்டு எழுத்தில்லை

கால்பந்தாட்டக்காரர் சாக்ரடீஸுக்கு,நிர்மல் ஷேகர் எழுதியிருக்கும் அஞ்சலியைப் படித்துப் பாருங்கள். இப்படி எழுத நம்மூர் இலக்கிய பீடாதிபதிகள் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வரிசையில் நிற்க வேண்டும்.

01 December 2011

மத்தகமும் மண்ணும்

இந்த இதழாளர்களில் பெரும்பாலானவர்கள் முதலாளிகளின் அதிகார தரகர்கள் – பர்கா தத், ராஜ்தீப் சர்தேசாய் போல. பலர் உண்மையில் பெண்தரகர்களும் கூட.

29 November 2011

துருவ நட்சத்திரம் - பழநி சுப்பிரமணிய பிள்ளை - லலிதா ராம்

துருவ நட்சத்திரம் - பழநி சுப்பிரமணியம் பிள்ளை பற்றி லலிதா ராம் எழுதிய புத்தக வெளியீட்டுவிழா அழைப்பிதழ்

28 November 2011

குட்டை ஏணி

குட்டை ஏணியைப் பற்றிக்கொள்
கூப்பாடு போடக் கற்றுக்கொள்

ஏணியின் முனையில் தெரிந்த வானம்
ஏறிப் பார்த்தால் எங்கே காணம்?

கூப்பாடு போடக் கற்றுக்கொள்
குட்டை ஏணியைப் பற்றிக்கொள்

26 November 2011

இருபத்துநான்குமணிநேர அடிமை

பெரும்பாலும் விளையாட்டுச் செய்திகளைப் படிக்காமல், வெறும் படம் மட்டுமே பார்த்து நகர்ந்துவிடுபவனுக்கு, 90களில் நிர்மல் சேகரைப் படி என்று புல்லரித்து அறிமுகப்படுத்தியவன், ட்ரைவ்-இன் நண்பன் ஸ்வரன் என்கிற ஸ்வர்னகுமார் தான்.

24 November 2011

உதட்டோரம் ஒரு புன்னகை

ஒரு பதிவை எழுதத் தொடங்கி, இப்படித்தொடங்கி இப்படி முடிக்கலாம் என முதல் வரி கடைசி வரி மட்டும் எழுதினேன். செங்கை வந்துவிடவே மூடும் அவசரத்தில் வரைவாக சேமி என்பதை அழுத்த நினைத்து, வெளியிடு என்பதை அழுத்தி விட்டேன். நின்ற ரயிலில் இருந்த படியே அதை சரிசெய்ய முயன்றால் வெளியில் மழை காரணமாக ரிலையன்ஸ் படுத்தல் தொடங்கிவிட்டது. இடர் களைந்து ஒருவழியாக உலகத்தின் கண்களில் இருந்து வெற்றிகரமாக மறைத்துவிட்டதாய் எண்ணித் திருப்திபட்டபோது, ஆட்டோ பயணத்தில் பொறி தட்ட என் அறியாமையை எண்ணி உதட்டோரம் ஒரு புன்னகை.

பேயோன் பேயோன்

Dyno Buoy அனுப்பியிருந்த பஸ்ஸின் சுட்டி, மெய்லில் இருந்தது. அதைப் பார்த்துத்தான் படிக்கத்தொடங்கினேன். இன்னமும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வெளிவருவதாக உள்ள பேயோனின் புத்தகங்கள்  பட்டியலில் நான்கைக்கூடத் தாண்டவில்லை.

ரயிலில் வழக்கமாய் வரும் சக பயணிகளுக்கு, நெட்புக்கில் வெட்டியாய் எதையோ நோண்டிக் கொண்டிருக்கும் பைத்தியம் என்கிற அபிப்ராயமே இதுவரை இருந்திருக்கும் என்பது என் எண்ணம். இன்று அது உறுதிப்பட்டிருக்க வேண்டும்.

மின்சார வண்டிகளில் உரக்க உரையாடவோ அல்லது செல்ஃபோனில் பேசவோ மட்டுமே அத்தியாவசியம் கருதி பிறப்புரிமை போன்ற அனுமதி உண்டு. வாய்விட்டு சத்தமாய்ச் சிரிப்பது கண்டிப்பாக தடைசெய்யப்படவேண்டும் என்று ஓரிரு பெருசுகள் ஆசிரியருக்குக் கடிதம் எழுதினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

23 November 2011

பள்ளத்தாக்கில் மலைப்பிரசங்கம்

On Wed, Nov 23, 2011 at 9:34 AM, sampath pr <***@gmail.com> wrote:Mr Maamallan

waiting for a full length humour based novel from you . ( Iam sure writer of your sensibility would deliver 'that' with literary flair )

Ref : பள்ளத்தாக்கில் மலைப்பிரசங்கம் போய்க்கொண்டிருந்தது.

எஸ்.ரா போட்ட தூஸ்ரா

நெடுநாளாக திரும்பிக்கிடைக்காத என் புத்தகம் ஒன்று கண்டிப்பாக இன்று கிடைத்துவிடும். ஆனால் அதற்கு ரஷ்ய கலாச்சார மையத்திற்கு வரவேண்டும் என்று நிபந்தனை போடப்பட்டது. நான் உள்ளே வராமல் வெளியில் இருந்தே அழைக்கிறேன். புத்தகம் மட்டும் வெளியில் வந்தால் போதும் என்று ஒப்பந்தமிட்டுக்கொண்டேன். என்னிடம் மிகச்சில பிரதிகளே உள்ள, வாசிப்பதற்காக மட்டுமே என்றுகொடுத்த இரண்டாவது தொகுப்பின் பிரதி எனக்கு முக்கியம். அதற்கு தோப்புக்கரணம் போடச்சொன்னாலும் போட்டிருப்பேன்.

22 November 2011

பிரதி வாதிப்பதில்லை


***

Siva Sankar ***@yahoo.in 5:02 PM (1 hour ago) to me

மாமல்லன் அவர்களுக்கு
வணக்கம்.

" கட்டுரையில் இருக்கும் தகவல்கள் உண்மை, கதையில் சொல்லப்படும் தகவல்கள் கற்பனை என்கிற கட்டுச்சோற்று எண்ணத்தின் காரணமாய் எழும் எண்ணமாக இருக்கலாம்."

20 November 2011

கை முறுக்கும் கைமுறுக்கும்

Siva Sankar ***@yahoo.in 10:37 AM (6 hours ago) to me

மாமல்லன்.

தங்களுடைய இலை கதை சிறுகதையாக தோன்றும் எனக்கு இந்த பயம் சிறுகதையை எப்படி சிறுகதையாக புரிந்துகொள்வது. அது பதிவாகத்தானே தோன்றுகிறது.

நீரில் மிதக்கும் நிலவு - கடிதம்

pasupathi pasupathi ***@gmail.com 12:04 PM (2 hours ago) to me

நீரில் மிதக்கும் நிலவே ஆயினும் தொட்டுப் பார்த்திட ஆசை
வணக்கம்.
அன்பு, பண்பு போன்ற வார்த்தைகளை உபயோகிக்க பயந்தவனாக எழுதும் என் பெயர், த.பசுபதி. திரு. பாலு மகேந்திரா அவர்களிடமும், திரு. வெற்றி மாறன் அவர்களிடமும் சினிமா பயின்று, தற்போது என் முதல் திரைப்படத்தை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.

18 November 2011

தமிழ் விக்கி ஊடகப் போட்டி

Bala Jeyaraman 12:16 AM (4 hours ago) to me


மாமல்லன் சார்,

ஒரு உதவி. தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு ஊடகப் போட்டி ஒன்றை நடத்துகிறது.

17 November 2011

தூக்கு - ஜார்ஜ் ஆர்வெல் தமிழில் - பு பித்தன்

Pu Pithan ***@gmail.com 2:13 PM (4 hours ago) to me

மாமல்லன்,

ஒரு பதிவில் A Hanging பற்றி எழுதி, 'பெயர்க்க'ச் சொல்லிக் கேட்டது ஞாபகம் இருக்கிறதா? அனுபவியுங்கள்!

வளையம்

இளைப்பாறலின்றி
எத்துனைக் காலம்தான் சுமந்து திரிவது?
மனதின் புலம்பல் மடிய மறுத்தது.

15 November 2011

இன்னா செய்தாரை...

கவிஞர் தேவதேவன் இன்னார் என்கிற கவிதையில் தன்னைத்தான் திட்டுகிறார் என்று, எழுத்தாளர் ஜெயமோகன் உறுதியாக நம்பியதால்தான் திற்பரப்பில் 29.05.2011ல் தேவதேவன் கவிதை அரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருப்பாரோ என்றுகூட இந்தக் கவிதையைப் படித்ததும் தோன்றியது.

14 November 2011

ரைட்டராவது எப்படி?

On Mon, Nov 14, 2011 at 6:24 PM, Chandra Sekhar. <***@ymail.com> wrote:

Dear Writer Mamallan,

I enjoy reading your blog. Though I've not read your stories, some of your writings (about Prameel, Jeyakanthan, latest Ramani camera) are very informative. Your language is very good.

13 November 2011

திற்பரப்பில் ஆகா ஓகோ அருவிக் குளியல்

என் அளவுகோலில் பாரதிக்குப்பின் கவிதை எழுதியவர்களில் பிரமிள் முக்கியமானவர். அதன்பின் தேவதேவன். பிரமிள் தன் மனக்குறைபாடுகளால் தேங்கி நின்றுவிட்டவர். தன் கவித்துவத்தை முழுமையாக வெளிப்படுத்தும் தவத்தைச் செய்தவர் தேவதேவன். ஆம், பாரதிக்குப்பின் அவர் ஒருவரையே ‘மாகவிஞன்’ என நான் சொல்வேன்.

11 November 2011

எதற்கு எழுதுகிறோம்? - ஜான் பால் சார்த்தர்

படிகள் 6/7 ஜூன் 1980 இதழில், ஜான் பால் சார்த்தரின் எதற்கு எழுதுகிறோம் என்கிற, தமிழவன் அலைபேசியில், படிகளில் சார்த்தரின் எது இலக்கியம் என்கிற கட்டுரை கூட வெளியாகி இருக்கும். இன்றைக்கும் கூட அந்த கட்டுரை முக்கியமானது”  என்று குறிப்பிட்ட கட்டுரை வெளியாகி உள்ளது. எது இலக்கியம் என்கிற சார்த்தரின் புத்தகத்தில், Why write என்பது இரண்டாவது கட்டுரை. அதற்கு சிறிய அறிமுகக் குறிப்பொன்றையும் எழுதி அதில் ”வாசகனை நினைவில் கொள்ளவே கூடாது என தமிழில் அரை குறை இலக்கிய அறிவுடன் க.நா.சு. போன்றோர் இருக்கும் சூழலில்” என்கிற அர்ச்சனையுடன் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிற்கோ மொழிபெயர்ப்புக்கோ எவர் பெயரும் போடப்பட்டு பொறுப்பேற்கப்படவில்லை.அநேகமாக இது ஆசிரியர் குழுவிலிருந்த தமிழவனாகவே இருக்க வேண்டும்.

10 November 2011

தவறியும் போகாதவை

என் நினைவில் தவறில்லை. ஆம் படிகளில்தான் ழான் பால் சார்த்தரின் ’சுவர்’ கதையின் மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது. அதைத்தேடி பலநாட்களாக கைபேசியில் அலைந்தது வீண்போகவில்லை.

08 November 2011

ஞானியும் மூடனும்


ஏறக்குறைய முப்பது வருடங்களுக்கு முன்னால் 
கல்பாக்கத்தால் சென்னைக்கு ஆபத்து 
என்கிற தீம்தரிகிட போஸ்டர் பெட்டிக்கடையில் தொங்கியது 
நினைவுக்கு வருகிறது.

06 November 2011

இரண்டு வெர்சன்கள் அன்னா ஒரு வெர்சன் ஹசாரே ஒரு வெர்சன்

http://annahazaresays.wordpress.com என்கிற அன்னா ஹசாரே பிளாகை முந்தாநாள்வரை நடத்திக் கொண்டிருந்தவர் ராஜு பாருலேகர் என்னும் மும்பை பத்திரிகையாளர்.

03 November 2011

முட்டைகோசு

முக்காலம் உணர்ந்ததுபோல் முகம்தூக்கும் எக்காளம் 
வெறுமுட்டை கோசென்று உலர்த்துவது இக்காலம்

***

எம்.டி.எம்மின் குட்டிக்கதை - மின்தூக்கி இயக்குனர்

02 November 2011

அசால்டாய் நடத்தும் அறச்சீற்ற யாவாரம்

அண்ணா ஹசாரேயின் இயக்கம் இந்திய ஊடக முதலாளிகள் விரும்பாத ஒன்றாகவே இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அதற்கு நாடெங்கும் ஆதரவு அலை கிளம்பியபோது அவர்கள் அதைக் காசாக்கிக்கொண்டார்கள். அதாவது அண்ணா ஹசாரே ஊடக உருவாக்கம் அல்ல. அவர் தன்னைத் தியாகம் மூலம் உருவாக்கிக்கொண்டவர்

01 November 2011

அழைப்பு

இருட்டில் ஒளிரும் சிலுவை
தொலைவில் அழைத்தது.

28 October 2011

தலைசிறந்த எழுத்தாளராக அன்புடன் ஜெ அளிக்கும் அறிவுரை


<இதைஎப்படிப் போக்குவது, அல்லது இப்படியே இருப்பதுதான் சரியா ?

நன்றி
விஜய்.

27 October 2011

உயிர்ப்பு

உர்ரென்று முறைத்த கோட்டோவியத்தை 
திருஷ்டிப்பூசனி, படிகாரம்போல் 
இருந்துவிட்டுப் போகட்டுமென்று 
முன்கதவில் மாட்டி வைத்தேன்.

25 October 2011

பட்டிமன்ற வெட்டி

<நீங்கள் கருதினால் பாரதி மகாகவியே என நீங்களே வாதிட்டு எழுதமுடியுமா என்றார்கள்.>

பின்னே வேறு யாராலும் முடியவில்லை என்பதை உலகமே கண்டுவிட்டதே.

பயம்ம்மா இருக்கே பயம்பயமாய்


எமன் ரொம்பப் பொல்லாதவன் விட மாட்டான் - நர
சிம்மன் பேரைச்சொன்னால் தொட மாட்டான்

22 October 2011

அறச்சீற்ற வெளிச்சப்பாடா? விஷச்செடியின் வேரா?



from***@gmail.com
tomadrasdada@gmail.com
dateMon, Oct 17, 2011 at 6:18 PM
subjectconfidential
mailed-bygmail.com
signed-bygmail.com
Important mainly because of the people in the conversation.
hide details Oct 17 (5 days ago)

Boss..

20 October 2011

தலீவா வெளியே வா - தில் இருந்தா

”இந்த தளத்தில் எதையுமே பேசலாம். ஆனால் இது ஓர் எழுத்தாளராகிய என்னுடைய தளமாக அறியப்படுவதனால் சில சிறு சங்கடங்கள் இருக்கின்றன. ஆகவே சில விஷயங்களை பேசவேண்டாமென நினைக்கிரேன். சாரு அதில் ஒரு தலைப்பு. என்னைப்பொறுத்தவரை இனி எப்போதும் எந்நிலையிலும் எங்கும் அந்த பெயரை சொல்லப்போவதில்லை. கருத்துரைக்கவும்போவதில்லை. இதன்பின்னால் ஆழமான ஓர் அவமான உனர்ச்சி இருக்கிரதென்பதை மட்டுமே சொல்ல விரும்புகிறேன். இங்கே பேசப்படும் எதுவும் என்னுடன் அடையாளப்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்பதனால் இந்த எச்சரிக்கை. மற்றபடி எதையும் தடுக்க அல்லது கட்டுப்படுத்த விரும்பவில்லை.”

ஒரு தமிழ் எழுத்தாளர் அடியேனைப் பற்றி எழுதியிருப்பதே மேலே கண்டது.


இதைப் பார்க்கையில் நான் கொஞ்சம் பாக்கியவான்.

19 October 2011

சடையே இல்லாவிட்டாலும் பேனுக்குக் குறைவில்லை

Monday, October 17, 2011 6:37 PM கவிதா ரசனைக்கு இணையக் காப்புரிமை வைத்திருக்கும் இலக்கிய குருஜி தூக்கிப்பிடித்த, 

மொட்டை மாடியில்

18 October 2011

கவிதையின் உயிரும் அவரவர் உயரமும்


இணையத்தில் ஜ்யோவ்ராம் சுந்தரின் பலமே, எவனாவது சீரியஸாக எதையாவது பேசினால் அதிலிருந்து ஓரிழையை மட்டும் எடுத்துக்கொண்டு ஓரிரு சிரிப்பான் போட்டு பஸ் ஓட்டுவதுதான். இதைப் பார்க்க்கையில் அய்யனார் தாளிப்பு பன்மடங்கு தேவலாம். முதிரா இளம் கோபத்தில் கொந்தளித்தாலும் ’உணர்ந்தால்’ ஒப்புக்கொள்ளும் நேர்மை சாதுர்யவாதிகளுக்கு எந்த ஜன்மத்திலும் சாத்தியமில்லை. அதுதான் ஜெயமோகனின் சாபமும் கூட.

17 October 2011

உம்மாச்சி காப்பாத்து

மொட்டை மாடியில்

புத்தகத்தை மூடி, எழுந்து
விளக்கணைக்கவும்
கணத் தாமதமுமின்றி
என் அருகே வந்தமர்ந்து
புன்னகைத்த
நிலவைக் கண்டு அதிர்ந்தேன்;
விளக்கைப் போடவும்
அது விருட்டென்று முகஞ்சுளித்தபடி
வானேறிக் கொண்டதும்
நான் கவனிக்கத் தவறியதும்
வேதனையாய் மனதிலாட.

தேவதேவன்

16 October 2011

பூவா தலையா - ஜெயமோகன்?


காளிராஜ் என்பவரை முன்னிருத்தி செய்யப்பட்ட மேற்படி மதோபதேச காலட்சேபத்தில் 

11 October 2011

புல் அரிப்பு

தள்ளுவண்டியில்
மல்லாக்கக்கிடக்கும் இழைப்புளிமேல்
தேய்க்கப்பட்ட கட்டிஐஸ்
கொளுத்தும் வெயிலைக் குளிர்விக்குமா?
தெய்வம் தொலைந்த திருவிழா நசநசப்பில்
பனி பொழிவதாய்
பயல்கள் நனையக்கூடும்.

09 October 2011

பைசைக்கிள் தீவ்ஸ் படத்தில் எஸ்.ரா ஓட்டிய கடைசி ரீல்

கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல் சிரிப்பு மூட்டும் சிறந்த நகைச்சுவை எழுத்தாளரான விருது ஸ்பெஷலிஸ்ட் திருவாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ஒலக சினிமா புத்தகத்தில் பைசைக்கிள் தீவ்ஸ் படத்தின் முடிவு பற்றி எழுதி இருப்பதை கூகுள் பஸ்ஸில் படிக்க நேர்ந்ததும் வெடித்து சிரித்துவிட்டேன். 

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் - எம்.டி.எம்

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் - எம்.டி.எம்மின் இந்தக் கட்டுரை தமிழர்களால் மட்டுமல்லாது தன்னைத் தமிழன் என்று உணரும் ஒவ்வொருவராலும் வாசிக்கப்படவேண்டியதாகும் என்பது இந்தக் கன்னட-மராட்டிய எளிய தமிழனின் வேண்டுகோள்.

ஜெயமோகனின் என்றைக்குமான மதிப்பு

08.10.11 நிலவரப்படி Alexa Traffic Rankல் ஜெயமோகனின் இன்றைய மதிப்பு

08 October 2011

பாரதி சின்னப்பயல்

ஞான் கவி இல்லா.

கம்பனை நோக்கில்
தமிழின் நவீன ஆதி கவியே மகாகவி இல்லா.
அவன்டெ கவியில்
ஒருஜிநாலுடீயும் ஞான் கண்டிட்டில்லா.

06 October 2011

காடு

விளையாட்டாய்க் கிறுக்கத் தொடங்கிக்
காடாக்கிக்கொண்டிருந்தாள் குழந்தை.

கடந்துவந்த பாதையின்
வரைபடத்தை விரித்து
பத்திரமாய் அவளைக் கடக்க வைப்பது எப்படியெனப்
பதறிக்கொண்டிருந்தார் தந்தை.

ரத்தம் போலவே முட்களும் புதியவை
பதற்றம் மட்டும் அரதப் பழசு.

சீனப் பெருஞ்சுவர் - ஃப்ரான்ஸ் காஃப்கா

சீனப் பெருமதில் அந்த நாட்டின் வடக்கு முனையில் முடிவடைந்திருந்தது. தென் கிழக்கிலிருந்தும் தென் மேற்கிலிருந்தும் இரண்டு பகுதிகளாக வந்து கடைசியில் அங்கே ஒன்று சேர்ந்தது. கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வந்த இரண்டு தொழிலாளர் அணிகள் பகுதி பகுதியாகக் கட்டி முடிக்கும் கட்டுமான உத்தியை சிறிய அளவில் பயன்படுத்தியிருந்தார்கள். அதை இப்படிச் செய்தார்கள்: இருபதுபேர் கொண்ட குழுவை அமைத்தார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட நீளத்தைக் கட்ட வேண்டும். ஐநூறு காதம் என்று வைத்துக் கொள்வோம். அதே போன்ற இன்னொரு குழு முதலில் கட்டி முடித்த பகுதியுடன் இணையும்படி அதே நீளமுள்ள இன்னொரு பகுதியைக் கட்டியது. ஆனால் இந்த இணைப்பிடத்தைக் கட்டி முடித்த பின்பு, அதாவது ஆயிரம் காதம் கட்டிய பின்பு, ஆரம்பமாவதல்ல மதிலின் கட்டுமானம் . மாறாக, மறுபடியும் கட்டுமானத்தைத் தொடர்வதற்காக இந்த இரண்டு அணிகளும் முற்றிலும் வேறான சமீபப் பகுதிகளூக்கு மாற்றப்பட்டன. இதனால் ஏராளமான இடைவெளிகள் உண்டாயின. பின்னர் மெல்ல மெல்லவே இந்த இடைவெளிகள் சரி செய்யப்பட்டன. மதில் கட்டி முடிக்கப்பட்டு விட்டது என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் வரையும் சில இடங்களில் முடிக்கப்படவில்லை. உண்மையில் ஒருபோதும் முழுமையாக்கப்படாத இடைவெளிகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை அது பரிசோதனை செய்யப்பட முடியாததாக இருக்கலாம். அல்லது மதிற் சுவரின் பிரம்மாண்டமான கட்டுமானம் காரணமாக , ஒரு மனிதனால் தன்னுடைய கண்களாலோ அல்லது தீர்மானத்தாலோ பரிசோதனை செய்ய முடியாதது என்று காட்டுவதற்காக எழுப்பப்பட்ட கட்டுக்கதைகளில் ஒன்றாக இருக்கலாம்.

04 October 2011

தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வில் ஓர் அறியப்படாத நிகழ்ச்சி - போலந்து சிறுகதை


ஓர் இரவு. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தனது கையெழுத்துப் பிரதியில் திருத்திக் கொண்டிருந்தார் தாஸ்தயேவ்ஸ்கி.திடீரென்று யாரோ கதவைத் தட்டினார்கள். இந்த நேரங் கெட்ட நேரத்தில் எந்த விருந்தாளியும் வருவது வழக்கமில்லை. தனக்கோ ஒரு வேலையாள் கூடக் கிடையாது. பிறகு இந்த அகாலத்தில் யாராக இருக்கும்? 

27 September 2011

உயிர்

எப்போதும் உனக்கு சொல்லிக்கொள்

எளிய சொற்களில் கடின விஷயமா
கடின மொழிக் கற்றைகளில் எளியதா
என்பதில் ஒருபோதும் மயிரை இழக்காதே
எஞ்சி இருப்பதே கொஞ்சம் எனும்போது
சிக்கனம் அவசியம்

26 September 2011

மூடுதிரை

வெயில் வந்ததே என்று ஜன்னலை மூடினேன்
காற்றும் வராமல் போனது.

நிலவு பார்க்க திறந்து வைத்தேன்
கொசுக்களும் வந்தன.

மனத்தைத் திறந்து மூடுவதுபோல்
அவ்வளவு எளிதில்லை
ஜன்னலைத் திறப்பதும் மூடுவதும்.

22 September 2011

மோட்சம்

சுற்றுச்சூழலின் விழிப்புணர்வோ 
கிணறு குளம் கடல் கிட்ட இல்லாத சங்கடமோ 
பால்கனி பக்கெட்டில் கரைந்துகொண்டிருந்த
களிமண் பரம்பொருள்
தொட்டிச்செடியை பெலப்படுத்தக்கூடும்

21 September 2011

குடை

அச்சுவெல்லமாய்
வார்க்கப்பட்ட பிள்ளையார்
சுபிட்சம் அளிக்க
நாற்பது ரூபாய்க்கு வீடு வந்தார்.
கொசுறாய் வந்தது
குண்டிப்புறம்
குடையைப் பிடித்துக்கொள்ளக்
கொஞ்சம்போல களிமண்.


மன்சூர் அலியும் மண்ணாந்தையும் - சுடச்சுட ஃபேஸ்புக் சாட்டிலிருந்து

Manzoor Ali
Today

vanakkam sir

வணக்கம்

வெசாவும் பிரமிளும் திமிர் பிடித்த சண்டைக்காரர்களா?

06 JulyRamji Yaho

ஆனாலும், உங்களின் வாசிப்பு ஆர்வம், முயற்சிகள் பிரமிக்க வைப்பவை சார். இன்னொரு மனிதரால் இந்தச் சாதனையை முறியடிக்க முடியுமா என்பது ஐயம்.

சோடாபாட்டில் - அது போதும்



Bala Jeyaraman to me
show details 9:09 PM (12 hours ago)

மாமல்லன் சார்,

ஆஹ்.. நா ஆளானத் தாஆஅமர ரொம்ப நாளாகத் தூஊஉங்கல


தொலைக்காட்சி பார்ப்பதில்லை. 
இணையம் வெட்டி அரட்டை மடம். 

20 September 2011

இடுக்கும் எழுத்தும்


இடுக்கில் எழுது
கிடைத்த இடுக்கில் எழுது
கிடைத்த இடுக்கைப் பற்றி எழுது
கிடைக்காத இடுக்கைப் பற்றியும் எழுது
இடுக்கில் எழுத நேர்ந்ததே என்கிற புலம்பலையும் எழுது
முக்கியமான விஷயம் இடுக்கா எழுத்தா?
இரண்டும்தான்
சீசருக்கு உரியது சீசருக்கு
ஆண்டவருக்குரியது ஆண்டவருக்கு

19 September 2011

மழைநாளின் ரயில் பயணம்

மந்தநடை பயிலும்
புறநகர் கர்ப்பிணி மாடாய்
அசுவாரஸியத்துடன்
விட்டுவிட்டுப் போய்க்கொண்டே
கூடக்கூட வந்துகொண்டிருந்த
மழை,
அதக்கிய புகையிலையாய்
சுவரொடுக்கி
அடுத்தவன் அக்குளை
உரசியபடி
எழுதவைத்துக்கொண்டிருந்தது.

அது சரி,
அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
சம்சயமென்ன?
பிரமிளுக்கும் பெருமாளுக்குமான
சம்பந்தம்தான்.

இலக்கியம், கெளரவ ஜெபமாலை உருட்டலில்லை.

சண்டை நம் ஈகோவுக்காக இல்லாமல் நமக்கு சரியெனப்படும் இலக்கிய தரப்பிற்கானது எனில் கட்டாயம் இலக்கியத்தரமாக அமைந்தே தீரும் # ’தரம்’ என்பது உயர்தர ஜெபமாலை உருட்டலில்லை.

18 September 2011

ஊழலுக்கெதிரான தீவிர தேசப்பணி

வங்கிக் கடன்கூட முதல் வீட்டிற்கு மட்டுமே கொடுக்கப்படவேண்டும் என்று கட்டுப்பாடு இருக்கிறது. காரணம்,முதல் வீடு எல்லோருக்கும் அடிப்படை அவசியம். இரண்டாவது வீடு என்பது சொகுசு. 

ஜெயமோகனின் டிவிஎஸ் கீபோர்டு

நான் ஒருவன் மட்டுமே இலக்கியப் பிரவாகம் என்று விஷ்ணுவே தீர்மானித்துவிட்ட பிறகு மற்றவரெல்லாம் ஓரமாய் ஒழுகிச்செல்லும் சாக்கடைகள்தானே. 

தாயகம் பற்றி அலெக்ஸாண்டர் ஸால்ஜெனிட்சின்

எறும்புகளும் நெருப்பும்

அது எறும்புகளின் குடியிருப்பாய் இருப்பதை அறியாமல் ஒரு உளுத்துப்போன கட்டையை நெருப்பில் எரிந்தேன். கட்டை பிளக்கத்தொடங்கியதும், எறும்புகள் வெளிப்பட்டுத் திகைத்து நான்கு திசைகளிலும் ஓடின. கட்டையின் மேற்புரத்தில் ஓடின-ஜ்வாலையில் தீய்ந்தும் செத்தும். நான் கட்டையை இறுக்கிப்பிடித்து மறுபுறத்தைத் திருப்பினேன். மணலுக்கும் பைன் மரக்குச்சிகளுக்கும் ஓடின.

முடிச்சு - கடிதம்


R.V. Subramanyan to me
show details 9:31 PM (8 hours ago)
Dear Mamallan, From a confirmed poetry-hater who is struggling with a mudicchu for the last couple of years; I could absolutely identify with this. You have captured my feelings perfectly...Cheers RV
siliconshelf.wordpress.com

***

நன்றி.

17 September 2011

நொம்பலம்

எழுதியதோடு நம் வேலை முடிந்தது என்று முறுக்கித் தோளில் போட்டுக்கொண்டு போய்விட முடிகிறதா?
 
அதை எப்படி வாசிக்கவேண்டும், எதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டும், என்ன சொல்ல வருகிறது என்று பொழிப்புரை நல்கி, இப்போது புரிகிறதா என்று வகுப்பெடுத்து, எழுதியவனே கையையும் தட்டிக்கொள்ளவேண்டும். 

ங்கோத்தா! 
புழுதிக்காத்துலப் பொரிகடலை விக்கப்போனவன் கதையாயிடுச்சே இணையத்துல எழுத வந்தது.

முடிச்சு

முடிச்சிலிருந்து விடுபடவேண்டும்.
முடிந்தால் இந்த முடிச்சை அவிழ்க்க உதவுங்கள்.
முடிச்சு, ஏன் முதலில் விழுந்தது என்றோ
அல்லது ஏன் போட்டுக்கொண்டாய் என்றோ
காலாட்டியபடி வக்கணை பேசாதீர்கள்.

16 September 2011

எழுத்தால் என்ன செய்துவிட முடியும்?

நேற்றிரவு அலைபேசியில் சகா ஒருவனின் அழைப்பு.

சொல்லுமா.

மச்சி நாளைக்கி எக்ஸ்போர்ட் குடுக்கப்போறேன்.

15 September 2011

அமல் படுத்தல்

சம்பளத்தை நேரடியாக வங்கியில் இருந்து பெற்றுக்கொள்ளும் செளகரியத்தை சில வருடங்களுக்கு முன் மத்திய அரசு அமல்படுத்திற்று. ஆரம்பத்தில் பரிசோதனை முன்னோட்ட முயற்சியாய் 2001-2002ல் ஒரு சுற்றறிக்கை மட்டும் வந்தது. திருச்சியில் அப்போதிருந்த துடியான கூடுதல் உயர்அதிகாரி ஒருவரின் தனிப்பட்டமுயற்சியால் தனியார் வங்கியில் பேசி இது அமலுக்கு வந்து விட்டது வேறு விஷயம். 

குல்லாவுக்கு உள்ளே இருப்பது என்ன?

 Chenthil 

@ 
 I shudder to think of Vinavu/Roza/Maamallan/Ravisrinivas deconstructing what is essentially modern thiruvilayadal.

யார் இவர்? நம்மை ஏன் இவர் வம்புக்கு இழுத்தார்? இது எதற்கானது என்று அவரது ட்விட்டுகளில் தேடப்போய் அது கிடைக்கவில்லை எனினும் இந்த பொக்கிஷம் கிடைத்தது.

14 September 2011

அம்பாரப் பண்டாரமும் மோட்டார் மெக்கானிசமும்


<கவிதை எழுதிப் பார்க்காமல் கவிதையை ரசிக்கும் மட்டும் மனநிலை நிறைய பேருக்கு ஏற்படுவதில்லை.>

கவிதை எழுதிப் பார்க்காமல் கவிதையை, ரசிக்கும் மனநிலை மட்டும் நிறைய பேருக்கு ஏற்படுவதில்லை.

கவிதை எழுதிப் பார்க்காமல் கவிதையை, ரசிக்க மட்டுமேயான மனநிலை நிறைய பேருக்கு ஏற்படுவதில்லை.

சொல்வது யாவர்க்கும் எளிது. துல்லியமாய்ச் சொல்ல முயற்சிப்போர் அரிது.

கடிச்சு மெல்லதானப் பல்லு அதைத் துலக்கும் நேரத்தில் இன்னொண்ணைக் கடிச்சுத் துப்பலாமே என்பது அம்பாரப் பண்டாரத்தாரின் அவதானிப்பு.

வரிசையாவும் இருந்து மெல்லுவது தெரியாமலும் இருந்தால் நன்றாகவும் இருக்குமே என்பது மோட்டார் மெக்கானிசம்.

வழுக்கி வாழும் கணங்கள்

எதிரில் நின்று எல்லா பெண்டிரும் ஏனிப்படி லஜ்ஜையற்று வைத்தகண் வாங்காமல் பார்க்கிறார்கள் என்று, புறநகர் ரயில் நிலையத்தில் காத்திருக்கையில் தோன்றுவதும், அனைவரும் ஒத்திசைவோடு குழுநடனம்போல் நடைமேடையின் ஓரம் நோக்கி நகர்கையில், நமக்குப் பின்னால் தொலைதூர வளைவில் வண்டி வந்துகொண்டிருந்தது பிடிபடுவதும் ஆணியல்பு. 

பிடிபட்டது பதியாமல் கலைந்துவிடுவதன் காரணம், புதிதாக சிலர் முளைத்துக் மனதைக் கலைக்கத் தொடங்கிவிடுவதுதான்.

பி.கு: எவரும், விருப்பப்படி எண்டர் தட்டிக் கொள்ளலாம். வடிவம் காப்புரிமை செய்யப்படவில்லை.

12 September 2011

முழுமை

செப்பனிட்டேன் முழுமை வேண்டி.
கிடைக்கக்கூடும் என்கிற நம்பிக்கையில்
பின்னத்தைச் செதுக்கத் தொடங்கினேன்.
பூரணம் கூடுவதுபோல் தோன்றிற்று.

இயற்கையில் எப்படித் தன்னால் கூடி நிற்கிறது?
இலையில் பூவில் செடியில் கிளையில் நிலவில் கடலில்
மூலத்தின் முளையில் எப்படி நிறைந்தது முழுமை?

காற்றின் முழுமை,
மரமொடிக்கும் மூர்க்கத்திலா?
இலையசைக்கும் வருடலிலா?

ஒப்பீட்டில் உயிர்தரிக்கும் உயர்வு போல்
தொலைவில் தெரிந்த முழுமை,
தொலைவில் இருந்தது.

09 September 2011

வளர்

பூமியின் தோற்றுவாயாய்த் தோன்றிய எரிமலைக் குழம்பு 
உருகிக் குளிர்ந்த பாறையில், 
எங்கோ எப்போதோ இறந்தவர்களுக்கு, 
நடுகற்களை உருவாக்கி ஏற்றுமதி செய்ய, 
ராப்பகலாய் செத்துக்கொண்டிருக்கும் 
தொழிலாளிகளின் உழைப்பை முதலீடாக்கிக் 
கூலியைப் பிந்திப்பிந்தித்தந்து 
வாழ்ந்து கொண்டிருப்பவர் 
கொண்டுவரப்போகும் அந்நியச் செலாவணிக்காகக் 
கதவை சீல் வைக்கக் 
கண்விழித்தாகவேண்டிய வேலைக்கு இடையில் 
முடிந்தால் இலக்கியம் வளர். 

06 September 2011

எதிரிகளை சுலபமாய் சம்பாதிப்பது எப்படி?

சீக்கிரம் பணக்காரர் ஆவது எப்படி?
சினிமா இயக்குநர் ஆவது எப்படி?
காதலியைக் கவர்வது எப்படி?
அடுத்தவரை எளிதாய் வெல்வது எப்படி?

03 September 2011

கோலி சோடாவும் காலி சோடாக்களும்

ஊழல் செய்யும் உயர் அதிகாரிகள்மேல் வழக்குத்தொடுக்க வேண்டுமென்றால் துறையிலிருந்து அனுமதி வாங்க வேண்டும் - பஸ்ஸில் உதிர்க்கப்பட்ட முத்து.

அதாவது இப்போது இருக்கும் சட்டங்கள் எல்லாம் ஊழலுக்கு சாதகமாகவே உள்ளன. ஊழல் அதிகாரிகளை வேலை நீக்கம் செய்ய இயலாது. ஆகவே ஹசாரேவின் ஜன்லோக்பால் ஒன்றே தீர்வு.

புகார் மனு போன்றதொரு விண்ணப்பம் [சிறுகதை]

ஐயன்மீர்,

பொருள்: 1986ல் சத்ரபதி வெளியீடாய் பதிப்பிக்கப்பட்டு, இன்று அச்சில் இல்லாது அருகிப்போன, முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் மற்றும் பிற கதைகள் என்கிற புத்தகத்தின், (கையில் இருந்த மிகச்சிலப்) பிரதிகளில் ஒன்றை, சுமார் 9 மாதங்களுக்கு முன்னால், படித்துவிட்டுத் தருகிறேன் என்று கொடுத்த வாக்கை நம்பிக் கொடுத்த, அரசு அதிகாரி, தற்போது புத்தகத்தைத் திருப்பிக் கேட்டால், இடையில் நடந்த அன்னா ஹசாரேவின் ஜன்லோக்பால் உண்ணாவிரதப் போராட்ட வரலாற்றுத் தருணத்திற்குப் பின், ஏதேதோ காரணங்களைக் கூறி டபாய்க்கும் ஒரு ஜன் பற்றிய புகார் மனு போன்ற விண்ணப்பம்.

01 September 2011

தட்டிக் கேளுங்கள் ஊழல் ஒழியக்கூடும் குல்லாபோட்டு ஒழியாது

ஒரு சம்பவம் (என்று நானல்ல சொன்னது நண்பர்)

2005. என் தங்கைக்கு அண்ணா பல்கலையில் இடம் கிடைத்திருந்தது. கல்விக்காக லோன் பெறும் முயற்சியில் இருந்தேன். அப்போது நிதி அமைச்சர் சிதம்பரம் அனைத்து வங்கிகளுக்கும் கல்விக்காக லோன் கேட்டு விண்ணப்பிபவர்களுக்கு கட்டாயம் லோன் வழங்கவேண்டுமென்று உத்தரவிட்டிருப்பதாக பேப்பரில் செய்திகள் வந்தன. சரி அண்ணா பல்கலை க்கழகம் என்பதால் லோன் ஈசியாகக் கிடைக்கும் என்று நினைத்து இந்தியன் வங்கி மதுரையில் அப்ளை செய்தோம்.

வாழும் கணங்களும் - நீலத்திமிங்கலங்களும் - வயிறுவலிக்க சிரிக்கவேண்டுமா!


<நம் காலத்தில் வாழும் மகத்துவமான கவிஞர் தூத்துக்குடியில், கடலுள்ள ஊரில்தான் வசிக்கிறார்.> 

எம்.டி.எம் - ராம் லீலா மைதானத்தில் கேட்ட வாய்மொழிக் கதை

ஒருபத்தி கதையா? ஒரு பத்தி கதையா? ஒருவரைப் பத்திய கதையா? இல்லை சும்மா ஒரு பத்திக் கதையா?

31 August 2011

சுஜாதா குறிப்பிட்ட குறும்படம் - ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘எ ஹேங்கிங்’ ஆக இருக்கலாமோ

விடுப்புதின விடியற்காலையான பத்து பத்தரை வாக்கில் எழுந்து பல்விளக்கி ஹிண்டுவைப் பிரித்துப் புரட்டிக்கொண்டிருக்கையில் ஜார்ஜ் ஆர்வெல்லின் தூக்கு பற்றிய கட்டுரை பார்த்தேன். படிக்கத் தொடங்கினேன். பாதியைத் தாண்டுகையில் பளீர் என ஒரு மின்னல். பல வருட அலைகழிப்பு நிலைக்கு வந்ததில் ஒரு நிம்மதி. அப்போதே இதை எழுதத் துவங்கினேன். ஆனால் சுந்தரின் குரல் என்னை அவருக்காய் இழுக்க அதை எழுதப்போய்விட்டேன். பிறகு முஹமத் பாயின் கடிதம் கொஞ்சம் குற்றவுணர்வில் படுத்திவிட்டது. திரும்ப வில்லுப்பாட்டுக்குப் போய் ஒருவழியாய் சில குறைகளையும் செப்பனிட்டு இதற்கு இப்போதுதான் வர முடிந்தது.

எப்படியோ இன்றைய விடுமுறையும் கதை எழுத முடியாமல் கழிந்ததில் ஒருவித நிறைவு. கதையாக எழுதினால்தான் ஆயிற்றா என்ன?

வாழ்த்துக்கள் வணக்கம் மாப்பு மற்றும் நன்றி முஹமத்


mohd safiullah *****@gmail.com to me
show details 4:43 PM (3 hours ago)

நலமா மாமல்லன் சார்,

நானும் உங்கள லந்த குடுக்கற கோஷ்டில ஒரு ஆளுன்னு நினைச்சுடீங்க.பரவாயில்ல சார். வாரத்துல யாராவது ஒருத்தர் உங்கள சீண்டரதுனால உங்களுக்கு அப்பிடி நினைக்க தொனிருக்கலாம்.

ஊழலைப் பற்றி ஜல்லியடி வில்லுப்பாட்டு

<இன்று காலை செய்தித்தாள்களில் பார்த்திருப்பீக்ரள். ரவீந்தர் என்ற வருவாமன வரி கூடுதல் ஆணையர் 50 லட்சம் ரூபாய் (அதுவும் ஒரே டிரான்ஸாக்‌ஷனில்) லஞ்சமாக வாங்கி பிடிபட்டிருக்கிறார். 

30 August 2011

டாஸ்மாக்கில் ஹசாரே


from parthasarathi.jayabalan@***.com
to madrasdada@gmail.com
date Mon, Aug 29, 2011 at 6:59 PM
subject RE: கதைதான் அனுப்பக் கூடாது..சந்தேகம் கேட்கலாமல்லவா
mailed-by ***.com

மாமல்லன் சார் - உங்களோட ஹசாரே பற்றிய கட்டுரைகளைப் படித்தவுடன் எனக்குத் இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

சில்லறை விஷயம் தான்.ஆனால் கொஞ்சம் சில்லறை புரளும் விஷயம்.

29 August 2011

கார்ப்பரேஷன் பள்ளியில் மாண்டிசோரி கல்வி

Montessori system a hit among school children
A kid wields a sharp kinfe to chop carrots using Montessori skills . — DC

ஊழல் அரிப்புக்கு ஹசாரே அல்ல நாமே களிம்பு - 2


@ஜ்யோவ்ராம் சுந்தர்: 
<சுஜாதா வசனம் ஞாபகம் வருது : சிங்கப்பூர்ல சட்டத்தை மீறுவதற்கு லஞ்சம் கொடுக்கறான். இங்க சட்டப்படி நடக்கறதுக்கும் லஞ்சம் கொடுக்கணும்.>

பரவாயில்லையே தேவைப்படும்போது சுஜாதாகூட உதவறார் பாருங்க. சிறு துரும்பும் பல் குத்த உதவும்னு சும்மாவா சொன்னாங்க?

ஊழல் அரிப்புக்கு ஹசாரே அல்ல நாமே களிம்பு


மாமல்லன் சார் என்ன சொல்ல வருகிறார்? இரண்டு டீவி இருந்தாலும் இன்னொரு டீவி வாங்க அலைகிறார்கள், அதனால் கம்யூனிட்டி சான்றிதழுக்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது சரி என்றா?

இது பற்றி விரிவாகவே எழுத வேண்டும்.

28 August 2011

சொறி சிரங்கு அரிப்பு அப்புறம் படை

இருக்கும்சட்டத்தை வைத்துக்கொண்டு ஊழலை ஒழிக்கமுடியாது என்பதற்கான விளக்கம் எந்த வழக்கை எடுத்துப்பார்த்தாலும் கிடைக்கும். நம் அமைப்பில் அரசை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சேர்ந்து நடத்துகிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் கண்காணிக்கும்படி அரசியல்சட்டம் அமைந்துள்ளது. அதன்மூலம் ஊழல் இல்லாமலாகும் என்பது அதன் நம்பிக்கை. ஆனால் அவர்களிருவரும் சேர்ந்தே ஊழல் செய்தால் நம் அமைப்பு ஒன்றுமே செய்ய முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் ஒருவரை ஒருவர் கண்காணிக்கவேண்டும். அவர்கள் சேர்ந்து ஊழல் செய்கிறார்கள் என்றால் ஒன்றுமே செய்ய முடியாது.

27 August 2011

ஜெயமோஹனுக்காக அதிக நேரம் செலவு செய்கிறீர்களோ



frommohd safiullah *******@gmail.com
tomadrasdada@gmail.com
dateFri, Aug 26, 2011 at 1:15 PM
subjectHi Sir
mailed-bygmail.com
signed-bygmail.com
Important mainly because of the people in the conversation.

hide details 1:15 PM (12 hours ago)

நலமா மாமல்லன் சார்,

நான் முஹமத். சிங்கப்பூரில் ஒரு சாதாரண வேலை பார்க்கிறேன்.உங்களின் வலை தளத்தை தினமும் பார்த்து விடுகிறேன்.

26 August 2011

லங்கணம் பரம ஒளஷதம்

ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் இருப்பேன்

ஊழல் ஒழியும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்

25 August 2011

மீட்பு

கனவாய்க் கண்டது கைபடுமுன் தவறிற்று.
கைப்பற்ற இறங்கியத் துழாவலில் அகப்படாது
உதரவெப்ப கதகதப்புத்தேடிப் புதைமணலுள்  
இன்னும் இன்னும் எனப் போய்க்கொண்டிருந்தது.
இருள்வெளியில் பின்தொடர,
குறிக்கோளும் தொலைந்தது.
பின், பிடிபட்டது பயணத்தின் பரவசம்.

நான் சில விஷயங்களை விளக்குகிறேன் - பாப்லோ நெரூதா

ஆகஸ்ட் 1983
Pablo Neruda 
(July 12, 1904 – September 23, 1973 / Parral / Chile)

நான் சில விஷயங்களை விளக்குகிறேன்
பாப்லோ நெரூதா

நீங்கள் கேட்கப்போகிறீர்கள்: லைலாக் மலர்கள் எங்கே போயின?
மேலும் அன்பின் இதழ்களின் மாயாவாதம்?
மற்றும் மழை மறுபடியும் தன் சொற்களால் அறைந்து வீசி
அவற்றைத் துளைகளாலும் பறவைகளாலும் அகழ்ந்தது பற்றி?

24 August 2011

குருஜியும் குர்ஸியும்

குருஜி என்கிற குர்ஸியைத் 
தக்கவைத்துக்கொள்ள, 

23 August 2011

அன்னா ஹசாரேவும் ஜெயமோகனும் - பார்வைகளும் போர்வைகளும்

அகிம்சாவாதி அன்னா ஹஸாரே பற்றி யாராவது தப்பாகப் பேசினால் கொன்றே போட்டுவிடுவேன்! - ’ஜெயமோகன்’

22 August 2011

ஜனவரி 1962ல் எழுத்து 38ஆவது இதழில் பிரமிளின் மூன்று கவிதைகள்

போர்ஹே மற்றும் நான் [சிறுகதை] - ஜோர்ஜ் லூயி போர்ஹே

மற்றவனுக்கு, போர்ஹேவிற்குத்தான், எல்லா விஷயங்களும் நடக்கின்றன. நான் போனஸ் அயர்ஸ் தெருக்களினூடே நடக்கிறேன், ஆங்காங்கே நின்றுகொண்டு ஒருவேளை பழக்கத்தினால் இருக்கலாம்,பழைய நுழைவாயில்களின் வில்வளைவுகளை அல்லது கம்பிக் கதவுகளை நோக்கியபடி. போர்ஹே பற்றிய செய்திகளை தபால் மூலம் அறிகிறேன். அவன் பெயரை பேராசிரியர் குழுவின் மத்தியிலும், வாழ்க்கைச்சரித அகராதியிலும் காண்கிறேன். எனக்கு விருப்பமானவை காலக்கண்ணாடிகள், வரைபடங்கள், பதினெட்டாம் நூற்றாண்டு அச்சுமுறை, வார்த்தைகளின் மூலம் காபியின் நறுமணம், ஸ்டீவன்சனின் உரைநடை; மற்றவனும் இந்த விருப்பங்களையெல்லாம் பகிர்ந்துகொள்கிறான்; ஆனால் அவற்றைக் கோட்பாடுகளாக மாற்றுமளவிற்கு ஒரு ஆடம்பரமான முறையில், எங்களுடைய உறவுமுறை மோசமாயிருக்கிறது எனச்சொல்வது மிகையாகப்படும். போர்ஹே தன்னுடைய கதைகளையும் கவிதைகளையும் புனைவதற்கு ஏதுவாக இருக்க நான் வாழ்கிறேன்.என்னை நான் வாழவிடுகிறேன். மேலும் அக்கதைகளும் கவிதைகளும் எனது பிராயச்சித்தம். அவன் உத்தமமான ஒருசில பக்கங்களை சாமர்த்தியமாய் எழுதிவிட்டானென்று ஒப்புக்கொள்வதில் எனக்குப் பிரயாசமில்லை. ஆனால் இப்பக்கங்கள் என்னைக் காப்பாற்ற முடியாது. ஏனெனில் உயர்ந்தவையெல்லாம் இனிமேலும் யாருக்கும் உரித்தானவை அல்ல - மற்றவனுக்கும்கூட இல்லை - பேச்சிற்கும் பாரம்பரியத்திற்கும் மட்டும். எப்படி இருப்பினும் நான் முற்றிலும் மறைந்து போகவேண்டுமென்பது என் விதி. எனது சில தருணங்கள் மாத்திரம் மற்றவனிடம் எஞ்சியிருக்கும். அவனுடைய முரட்டு வழக்கங்களான பொய்த்தலுக்கும் பாராட்டுதலுக்கும் என்னிடம் சாட்சியங்கள் இருந்தபோதிலும் சிறிது சிறிதாக நான் எல்லாவற்றையும் அவனிடம் ஒப்புவித்துக் கொண்டிருக்கிறேன். ஸ்பினோஸா,எல்லாப் பொருட்களும் தாமாகவே இருக்கவேண்டி அவை முயற்சி செய்வதாகக் கூறினார். ஒரு கல் தானொரு கல்லாகவே இருக்க விரும்புகிறது. ஒரு புலி புலியாகவே. நான் போர்ஹேவிடமே இருப்பேன். என்னுடன் அல்ல. (அப்படியானால் நான் வேறொருவன்) ஆனால் நான், பிறருடைய புத்தகங்களிலிருப்பதைக் காட்டிலும், கிடாரை இசைப்பதைக் காட்டிலும் குறைவாகவே என்னை அவனுடைய புத்தகங்களில் இனம் காண்கிறேன். வருடங்களுக்கு முன்பு அவனிடமிருந்து என்னைப் பிரித்துக்கொள்ள முயன்றேன். நகரத்திற்கு தொலைவிலுள்ள சேரிகளின் கட்டுக்கதைகளிலிருந்து நான், காலம் மற்றும் முடிவின்மையுடன் கூடிய விளையாட்டுகளுக்குச் சென்றேன். ஆனால் அவ்விளையாட்டுகள் இப்போது போர்ஹேவிற்கு உரியன. நான் வேறு விஷயங்களுக்குத் திரும்ப வேண்டும். எனவே என் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. நான் எல்லாவற்றையும் இழக்கிறேன். அனைத்தும் மறதிக்கு அல்லது மற்றவனுக்கு விட்டுச் செல்கிறேன். 

எங்களில் யார் இந்தப் பக்கத்தை எழுதுகிறோம் என்று எனக்குத் தெரியாது.

21 August 2011

மாவோவுக்காக ஜோசியம்

மாவோ சே துங் 1949ல் ஜோசியம் பார்த்தார் என்று அங்குள்ள கைடுகள் பேசிக்கொள்கிறார்கள் என்று தினமணி ஆசிரியர் ஆதாரமில்லாமல் அவதூறாக எழுதி இருக்கிறாராம். ஆகவே அவரைப்பற்றி “அம்மாவின் திருவடியை நக்கிய தினமணி வைத்தியநாதன் !” என்று புரட்டுகரமாய் எழுதுவார்களாம் இணையப் புரட்சியாளர்கள்.

வட்டச் சிதைவுகள் - ஹோர்ஹ் லூயிஸ் போர்ஹே தமிழில் பிரமிள்

அந்த ஏகோபித்த இரவில் அவன் தரையிலிறங்கியதை யாரும் காணவில்லை. அவனது மூங்கில் படகு அங்கே அப்புனிதச் சேற்றில் புதைந்ததையும் யாரும் காணவில்லை. ஆனால் ஒரு சில நாட்களில், பேச்சு வார்த்தைக்கு இடம் கொடுக்காத இந்த மனிதன் தெற்கிலிருந்து வந்திருக்கிறான் என்பதையோ, நதி வரும் வழியில், மேலே, மலையின் பிளந்த பகுதியில் கிரீக் மொழியினால் ஜென்ட் மொழி பாதிப்படையாமலும் குஷ்டரோகம் அடிக்கடி வராமலும் உள்ள எண்ணற்ற கிராமங்களுள் ஒன்று அவனது ஊர் என்பதையோ அறியாதவர் யாருமில்லை.

டெரிலின் ஷர்ட்டும், எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர் [சிறுகதை] - ஜி.நாகராஜன்

கவனம் 
இதழ் 3 மே 1981

பல சிறுகதைகளும், ”நாளை மற்றும் ஒருநாளே” என்னும் அதிர்வூட்டும் புதினத்தையும் எழுதிய திரு.ஜி.நாகராஜன் மறைந்துவிட்டார். பெரிய பெரிய படைப்புகளுக்கு திட்டமிட்டிருந்த ஜி.நாகராஜன் அவற்றில் ஒன்றையும் உருவாக்காமல் சென்றது துரதிருஷ்டம். டெரிலின் ஷர்ட்டும், எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் என்ற அவர் கதை அவர் உணர்த்திய உலகின் மெய்ம்மை, பொய்மைகளை உருக்கமாகக் காட்டுவது. ஆயுட்காலம் எந்த அளவானாலும் எழுத்தாளனைப் பொறுத்தமட்டில் அது முற்றிலும் வீணடிப்பல்ல என்பதை நாகராஜன் படைப்புகள் நினவூட்டுகின்றன.

ஆசிரியர்: ஞானக்கூத்தன்

விக்ரமாதித்யனின் இரண்டு கவிதைகள்

2

அடுத்து
என்ன செய்வது

கும்பலோடு கும்பலாக
கோவிந்தா போடலாமா

ரெண்டுங்கெட்டானால் கிடைத்த பொக்கிஷம்

அணியாத பூணூலை எனக்கு அணிவித்த ரெண்டுங்கெட்டான் 1917லேயே நான் எழுதியதாய் ஒரு துணுக்கைப்பிடித்துத் தொங்கியதைப் பார்த்தன்மூலம் எனக்குக் கிடைத்த பொக்கிஷம்தான் http://www.thamizham.net/ இந்த தளம்.

கடமையும் ஊழலும் நீள நாக்குகளும் - கடிதம்


S Ravi ****@gmail.com to me
show details 12:14 PM (27 minutes ago)
Dear Sir,

My name is S.Ravi, Engineer Chennai man and now working in Kuwait.

மெண்டல் புரட்சியின் சமூக வடிவமைப்பு

புரட்சியும் மெண்டலும் 
சமூகத்தை ஜாக்கி வைத்து உயர்த்த 
ரூம் போட்டு பள்ளம்தோண்டி 
அரசு இயந்திரத்திற்குத் தெரியாவண்னம்
பதுங்கிப் பதுங்கி விவாதித்தன. 

கடமையும் ஊழலும் நீள நாக்குகளும்

அதிகார எல்லைக்குள் இருக்கும் தொழிற்சாலைகளில் ஏற்றுமதியைக் கண்காணிப்பதும் அரசு அதிகாரிகளின் வேலைகளில் ஒன்று. சுயமாகவே தொழிற்சாலைகள் ஏற்றுமதி செய்துகொள்ளவும் சட்டம் அனுமதிக்கிறது. அதோடு அல்லாது, சுயமாக ஏற்றுமதி செய்துகொள்வதா அல்லது அரசு அதிகாரியை அணுகுவதா இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்பது தொழிற்சாலைகளின் பிரத்தியேகத் தேர்வாய் அளிக்கப்பட்டுள்ள உரிமை. மட்டுமல்ல, அதிகாரத்தின் பிடியைத் தளர்த்தும் முகமாய் எந்த திட்டத்திலும் வராத வழமையான ஏற்றுமதிகளை அந்தந்த நிறுவனங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் அமலுக்கு வந்தாகிவிட்டது.தங்களிடம் வந்துதான் ஏற்றுமதிசெய்ய வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்தலாகாது என்றும் சட்டம் சொல்கிறது. பலகாலமாகவே, அரசின் நோக்கம் தொழிற்சாலைகளின் மீதான அதிகாரிகளின் கெடுபிடியை, அத்துமீறல்களைத் தடுப்பது என்பதே. அதன் காரணமாகவே பெரும்பாலான நடவடிக்கைகள் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வை /கண்காணிப்பு இல்லாது தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களிடமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதிகாரிகள் தொழிற்சாலை /நிறுவனங்களுக்கு செல்வதற்கும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் அலுவலகத்திற்கே வராமல் மாதாந்தர தாக்கல்களையும் வரி கட்டுவதையும் ஆன்லைனில் செய்வது சலுகையாகவோ வசதியாகவோ அல்ல, கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  

20 August 2011

காது

நேருமைதானக் கால்பந்துப் போட்டியில் பங்குபெற்றுத் திரும்பும் எம்.எம்.நகர் ஜேஆர்கே பள்ளி குட்டீஸ் இறங்கியதும், இனி காதுகுடையும் கூச்சல் இல்லை என்று நிம்மதி கொள்ளாமல், எதிர்வரும் நெடுந்தூரத் தனிமை எண்ணி என் போலவே முக்கலும் முனகலுமாய் கிறீச்சிட்டுப் போகிறது முதல்வகுப்புப் பெட்டி.

பி.கு: அவரவர் விருப்பப்படி எண்டர் தட்டி, தட்டாமல் வாசித்துக் கொள்ளலாம். எழுத்தாள - வாசகப் பங்கேற்பு. 

18 August 2011

நனை - சாட் உரையாடல்

K: Hello sir.. 

K is online. 

விமலாதித்த: எஸ்:) 

K: Read your "nanai". Simply superb sir. all your kurungkavithais are really nice.. 

விமலாதித்த: நன்றி:) அது கவிதையா இருந்துதுன்னு ஒரு சர்ட்டிஃபிகேட் கெடைக்குமா?:)))) 

K: Ahaaha.. antha alavukku naan innum valarala sir :) when you find some time read this sir.. ****** 

விமலாதித்த: ரொம்ப வளந்த இணைய இலக்கிய அதிகார மையங்களிடம் காட்டி அங்கீகாரம் வாங்கிக்கொள்ள வேண்டாமா? 

K: I think I dont come in that group.. :) 

விமலாதித்த: அந்த குரூப் இந்த குரூப் இல்லை. எந்த குரூப்புலையும் இல்லாமல் இருப்பதுதான் சுயம் இழக்காமல் இருக்க ஒரே வழி. 

K: Then I think I am on the right way :) 

விமலாதித்த: அப்ப சரி 

Sent at 3:03 PM on Thursday