11 January 2011

பேயோன் நீங்கள் எம்டிஎம் ஆக இல்லாவிட்டால்.....



பேயோன் எம்.டி.முத்துக்குமாரசாமிதான் என தொடர்ந்து, மூர்க்கமாக நம்பும் கூட்டத்தில் நானும் ஒருவன். 

பேயோனின் இரண்டு கதைகளை அவரது தளத்தில் படித்து அசந்து போய்விட்டேன். திருவனந்தபுரத்தில் இருக்கும் சுகுமாரனுக்கு - அவன் அங்கு இருப்பது போல இருக்கிறான் ஆனால் பெரும்பாலான சமயங்களில் கோவை, நாகர் கோவில், சென்னை பெங்களூர் என்று எங்காவது சுற்றிக் கொண்டே இருக்கிறான் என்பதால் திருவனந்தபுரத்தைக் குறிப்பிட்டாக வேண்டி இருக்கிறது. 


இலக்கிய உலகத்தில் தொடர்ந்து அமைதியாகவும் இருந்துகொண்டு, அவ்வப்போது எழுதினாலும் நன்றாகவும் எழுதிக் கொண்டு, முகம் சுளிக்காமல் முன்னுரையும் கொடுத்துக் கொண்டு வேறு பாஷைக்காரனாகவும் இருந்துகொண்டு ஒருவர் இருந்துவிட்டால் இலக்கிய நாற்காலி புட்டத்தோடு ஒட்டிக் கொண்டுவிடுவது தவிற்க இயலாதது. 

சுகுமாரன் அளவிற்குக்கூட இல்லை, ரெண்டுமாத்து கம்மியாக இருந்தால் கூடப் போதும். டிமாண்டுதான்.

காரணம், எல்லோருக்கும் கூட்டம் நடத்த முண்டுகிறது. கோர்வையாகப் பேச ஆள் தேவைப்படுகிறது. பொது இடத்தில் மூக்கு நோண்டுகிற பழக்கம் போல, மேடையிலேயே புத்தகம் கிழிக்கிற அல்லது ஒன்றுக்கடிக்கிற கோமாளித்தனம் எல்லாம் செய்யாத ஒருவர் இலக்கியவாதி போன்ற தோற்றத்துடன் இருந்தால்கூடப் போதும். என்கிற அளவிற்கு இலக்கிய லோகத்தில் எழுத்தாளப் பஞ்சம்.

சுகுமாரன் கனவானாகவும் இருந்து இலக்கியவாதியாகவும் இருந்து இங்கிதம் தெரிந்தவனாகவும் வேறு இருக்கிறான். எந்தத் தனி முகாமின் லேபிளும் இல்லாமல், எல்லோருடனும் இருந்துகொண்டிருக்கிறான். அவனைப் பிடிக்க ஆளில்லை. ஊர் ஊராக சுற்றல். தற்செயலாக அவன் திருவனந்தபுரத்தில் இருந்த ஒரு நாளில் நான் ஃபோன் செய்ய மாட்டினான். பேயோன் பற்றி அவனுக்கு ஓரளவு தெரிந்திருந்தது. அவரது சில கதைகள் பற்றி கூறி சுட்டிகளையும் அனுப்பி வைத்தேன். 

குறிப்பாக இரண்டு கதைகள் என்னை அசறடித்திருந்தன.
நொடிமுள்ளின் கதை
எனது பிரெஞ்சுப் புரட்சி அனுபவங்கள்

பிறகு தமிழினி வசந்தகுமாரை சந்தித்த போது இந்த ஆளைப் பற்றி சொல்லி இந்த இரண்டு கதைகளையும் நீ கட்டாயம் படிக்கவேண்டும் எனப் பிறாண்டிவிட்டு வந்திருந்தேன்.

மேற்குறிப்பிட்ட இரண்டு கதைகளிலும் உலகங்கள் மெய்மையான தோற்றத்துடன் உருவாக்கப் பட்டிருந்தன.

செய்திறன் முழுமையாகக் கைவந்த ஒரு எழுத்தாளனாகவே இவரைச் சொல்வேன். 

கடைசி வரியில் கண்ணைக் குத்தி தண்ணி எடுத்துக் காலட்சேபம் பண்ணி இலக்கியவாதியாய் வெற்றிலையைக் குதப்பும் மழலையில் அல்லது சிகரெட் வாயிலேயெ ஒட்டிக் கொண்டிருப்பதால், புரியாமல் பேசி இருண்மையை கட்டியெழுப்பி ஒரு ஆளாய்த் திரிபவர்களுக்கிடையில், முகம் காட்டாத இந்த ஆள் முக்கியமானவர். இணையத்தில் மட்டுமே எழுதுவதால், இலக்கியவாதிகளிடம் இவரது எழுத்து அவ்வளவாகப் பரிச்சயம் இல்லை போலும்.

பல ஆயிரம் பக்கங்களில் வரட்டி தட்டிக் கொண்டிருப்பவன்கள் எல்லாம் பேயோனை, நகைச்சுவை எழுத்தாளன் என்கிற ஒரு செளகரிய லேபிள் ஒட்டி தந்திரமாய் நகர்த்திவிட்டுப் போகவே முன்னுவான்கள். 

ஜேஜேவில் ராமசாமி ஒரு உலகத்தையே தீவிர கருத்தாக்கங்களுடன் உருவாக்கியதைப் போல, பேயோன் இரண்டு மூன்று பக்கங்களுக்குள் குட்டிகுட்டிக் கதைகளில் உலகப் போலிகளை உருவாக்குகிறார். இது வெறும் பொழுதுபோக்கு மேலோட்ட விளையாட்டல்ல. அதே சமயம் இதை அவர் தாண்டுவதும் இல்லை.

போலி உலகத்தை உண்டாக்கும்போது உண்மை காவு கொடுக்கப் படுகிறது. உலகப் போலி உருவாக்கத்தில் கற்பனை கவிதையின் உயரத்திற்கு  உயிர்ப்பெற்று மேலெழுகிறது.

தீவிர இலக்கிய எழுத்தாளர்கள், மொழி ஆளுமையிலும், காட்சி விவரிப்பு கச்சிதத்திலும், இவரிடம் கற்றுக் கொள்ள அநேகம் இருக்கிறது.  இவரது எழுத்துக்களை ஒரு எழுத்தாளரைப் பற்றிய கிண்டலாக மட்டுமே குறுக்க என் மனம் ஒப்பவில்லை.சுஜாதாவிற்குப் பின் முக்கியமான பரிசோதனைக்காரராகவே இவரைப் பார்க்கிறேன்.

இரண்டு கதைகளிலேயே இவரிடம் நெருக்கமாக உணரத் தொடங்கி விட்டேன்.(ஆள் தெரியாத காரணத்தால், இவர் என்று அழைக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். வயது பற்றிய விசாரிப்பொன்றில் தம்மை நடுப்பெரியவன் எனக் கூறலாம் என ட்விட்டரில் எனக்கு பதில் கூறி இருந்தார்.) தமக்காக இவர் உருவாக்கிக்க் கொண்டிருக்கும், பஞ்சுமிட்டாய்த் தலை படத்தை வைத்து இவரை ’இவர்’ என்று அழைக்கிறேன். அந்தப் புகைப்படத்திற்கு அகிரா குரசோவாவிடம் முன்னனுமதி வாங்கி உள்ளாரா என அறிய ஆவல்.

மற்றபடி மனதிற்குள் இந்த ஆளை நெருக்கமாக இவன் என்றுதான் உணர்கிறேன்.

என் புத்தகத் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டிருந்தபோது, புத்தகத்தில் வெளியிட, என் கதைகள் பற்றிய அவரது மதிப்பீட்டினைத் தர இயலுமா என ட்விட்டர் டிஎம்மில் கேட்டிருந்தேன். அதற்கு அவர் அனுப்பிய பதில் ட்விட்டும் அதன் தொடர்ச்சியான எனக்கும் அவருக்குமான மின்னஞ்சல் உரையாடலும் கீழே:

பதிலினை மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறேன்.

Re: நீங்கள் எம் டி எம் ஆக இல்லாவிட்டால்...
Inbox
X

Reply
Starredfromwriter payon 
tomadrasdada@gmail.com
dateSun, Nov 14, 2010 at 10:08 PM
subjectRe: நீங்கள் எம் டி எம் ஆக இல்லாவிட்டால்...
mailed-bygmail.com
signed-bygmail.com

hide details 11/14/10
அன்புள்ள மாமல்லன்,

நீங்கள் என்னை யாரோ என்று நினைத்துக்கொண்டு இதையெல்லாம் கேட்கிறீர்கள். எனக்குத் தமிழில் அடிப்படை வாசிப்பு கூட இல்லை. கல்லூரி நாட்களில் மேலோட்டமாகச் சிறிது மேலை இலக்கிய வாசிப்பு இருந்தது, அவ்வளவே. எனவே என்னிடம் ஆழமான கருத்து எதையும் எதிர்பார்க்க வேண்டாம். :-) நான் ஒரு நகைச்சுவை எழுத்தாளன் மட்டுமே. பேயோன் என்ற முகமூடியைப் பயன்படுத்தி நான் எழுதும் எதிலும் நான் ட்விட்டரிலும் என் வலையகத்திலும் எழுதுவது போன்ற நகைச்சுவையும் நகைச்சுவை முயற்சிகளும்தான் இருக்கும். இந்த முகமூடி தவிர எனக்கு வேறு அடையாளங்கள் இல்லை. தயவுசெய்து இதை arrogance என்று நினைக்க வேண்டாம். இதையும் மீறி சொ.செ.சூ. வைத்துக்கொள்ளும் முகமாக என் கருத்தெல்லாம் போட்டு என்னைப் பெரிய ஆளாக்க விரும்பினால் உங்கள் இஷ்டம். :-)

நன்றி
பேயோன்

 Reply
 Forward
writer is not available to chat
Reply
fromவிமலாதித்த மாமல்லன் 
towriter payon
dateSun, Nov 14, 2010 at 10:13 PM
subjectRe: நீங்கள் எம் டி எம் ஆக இல்லாவிட்டால்...
mailed-bygmail.com

hide details 11/14/10
அன்பான பேயோன்,

நானும் அப்படியே மெய்ண்டெய்ன் பண்ணிக்கொள்கிறேன். நீங்கள் மிகவும் நுட்பமான மனிதர்தான் ஐயமே இல்லை.

நன்றி.


5/6, CPWD ((Old) Qrs,
Besant Nagar, Chennai 600090
Mobile 98401 72104
 Reply
 Forward
writer is not available to chat
Reply
fromwriter payon 
toவிமலாதித்த மாமல்லன்
dateSun, Nov 14, 2010 at 10:19 PM
subjectRe: நீங்கள் எம் டி எம் ஆக இல்லாவிட்டால்...
mailed-bygmail.com
signed-bygmail.com

hide details 11/14/10
அப்படியே மெய்ண்டெய்ன் பண்ணிக்கொள்வது என்றால் என்னவோ? :-)

2010/11/14 விமலாதித்த மாமல்லன் <madrasdada@gmail.com>
- Show quoted text -


 Reply
 Forward
writer is not available to chat
Reply
fromவிமலாதித்த மாமல்லன் 
towriter payon
dateSun, Nov 14, 2010 at 11:17 PM
subjectRe: நீங்கள் எம் டி எம் ஆக இல்லாவிட்டால்...
mailed-bygmail.com

hide details 11/14/10
நான் கொண்டிருக்கும் நீங்களில் நீங்களும், நீங்கள் கொண்டிருக்கும் யாரோவில் நீங்களும்:)

அப்படியே இருந்து கொள்வது. இருக்கட்டுமே அதனால் என்ன. நான் குறிப்பிட்ட அந்த ஆளை ஏதோ ஒரு சமயத்தில் அந்த காலத்தில் நான் கொஞ்சம் தவறாக உதாசீனப்படுத்திவிட்டேன்  என்று எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சி. பிறகொரு நாள் அவனது மிகச்சிறந்த கதை ஒன்றை படித்து அசந்து போய்விட்டேன். அப்போது அவன் வேறொரு முகமூடியில் இருந்தான். ஆகவே இதுவும் அவனோ என குழம்பி விட்டேன். உங்கள் சஹஸ்ர நாமாவளியை தமிழினி வசந்தகுமார் கூட படித்து விட்டு இவ்ளோ கூறுள்ள ஆள் எம்டிஎம் ஆகதான் இருக்கணும் என்ற கருத்தில் உள்ளான்.
முட்டாள்கள் குழப்பத்திற்கு ஆட்படுகிறார்கள். புத்திசாலிகள் தெளிவாகக் குழப்புகிறார்கள் # பேயோனின் கருத்தறிய ஆவல்
- Show quoted text -
 Reply
 Forward
writer is not available to chat
Reply
fromwriter payon 
toவிமலாதித்த மாமல்லன்
dateSun, Nov 14, 2010 at 11:21 PM
subjectRe: நீங்கள் எம் டி எம் ஆக இல்லாவிட்டால்...
mailed-bygmail.com
signed-bygmail.com

hide details 11/14/10
இப்போதுதான் 'வலி' படித்து முடித்தேன். மனதைப் பிசைந்தது. என் குழந்தைப் பருவம் நினைவுக்கு வந்தது.  இரண்டாம் வாசிப்பில் இன்னும் பல விஷயங்கள் புரிபடலாம். சராசரியான எதிர்வினைதான். மற்ற கதைகளைப் படித்துவிட்டு என் அறிவுக்கு எட்டியதைச் சொல்லிவைக்கிறேன். நன்றி. :-)

2010/11/14 விமலாதித்த மாமல்லன் <madrasdada@gmail.com>
நான் கொண்டிருக்கும் நீங்களில் நீங்களும், நீங்கள் கொண்டிருக்கும் யாரோவில் நீங்களும்:)
- Show quoted text -


 Reply
 Forward
writer is not available to chat
Reply
fromவிமலாதித்த மாமல்லன் 
towriter payon
dateSun, Nov 14, 2010 at 11:40 PM
subjectRe: நீங்கள் எம் டி எம் ஆக இல்லாவிட்டால்...
mailed-bygmail.com

hide details 11/14/10
நன்றி பேயோன்.
- Show quoted text -
 Reply
 Forward
writer is not available to chat
Reply
fromwriter payon 
toவிமலாதித்த மாமல்லன்
dateWed, Dec 8, 2010 at 11:06 PM
subjectRe: நீங்கள் எம் டி எம் ஆக இல்லாவிட்டால்...
mailed-bygmail.com
signed-bygmail.com

hide details 12/8/10
மன்னிக்கவும். உங்கள் படைப்புகளை முதல் கதைக்குப் பின் மேற்கொண்டு படிக்க நேரம் கிடைக்கவில்லை. அதனால் அவை குறித்துக் கருத்து தெரிவிப்பதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டியிருக்கிறது. வேலையில் கூடுதல் பணிகளை ஏற்கும் பொறுப்பு வந்ததிலிருந்து ட்விட்டர் பக்கம் கூட வர முடியவில்லை. மீண்டும் மன்னிக்கவும்! தவறாக எண்ண வேண்டாம்!

2010/11/14 விமலாதித்த மாமல்லன் <madrasdada@gmail.com>
நன்றி பேயோன்.
- Show quoted text -


 Reply
 Forward
writer is not available to chat
Reply
fromவிமலாதித்த மாமல்லன் 
towriter payon
dateThu, Dec 9, 2010 at 3:05 AM
subjectRe: நீங்கள் எம் டி எம் ஆக இல்லாவிட்டால்...
mailed-bygmail.com

hide details 12/9/10
மிக்க நன்றி, 
எனது வேண்டுகோளை இவ்வளவு ஸீரியஸாய் எடுத்துக் கொண்டதற்கு. உங்கள் நிலையை விளக்கியதும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டும் விட்டேன்.

மற்றபடி ஓய்வாய் இருக்கையில் படிக்கவும். அவசரம் ஒன்றுமில்லை.
- Show quoted text -
 Reply
 Forward
writer is not available to chat
Reply
fromwriter payon 
toவிமலாதித்த மாமல்லன்
dateMon, Dec 13, 2010 at 9:16 PM
subjectRe: நீங்கள் எம் டி எம் ஆக இல்லாவிட்டால்...
mailed-bygmail.com
signed-bygmail.com

hide details 12/13/10
ஒரு எழுத்தாளரிடம் புரிதலுக்கு நன்றி சொல்லக் கூடாது. இருந்தாலும் தெரிவித்துக்கொள்கிறேன்! :-)

2010/12/9 விமலாதித்த மாமல்லன் <madrasdada@gmail.com>
- Show quoted text -


 Reply
 Forward
writer is not available to chat
 New window
 Print all
 Expand all
 Forward all
« Back to Sent Mail
Archive
Report spam
Delete
Move to Inbox
Labels
More actions