நடுவிரல் காட்டி என்னைத் தேவடியாள் பையன் என்று அழைத்து, அதை ஒற்றை எழுத்தாக சுருக்கி விடுபட்டவற்றிற்கு நட்சத்திரக் குறியிட்டு, இந்திய மெடிக்கல் கவுன்ஸிலின் அட்ரஸ் எது எனக் கேட்டதும், அந்த பஸ்ஸையே முற்றிலுமாய் நீக்கிவிட்வர்.
இணையத்தையே கிடுகிடுக்க வைக்கும் ஆஹா என்றெழுகின்ற யுகப்புரட்சி மண்டபத்தின் முட்டுக் கொடுத்தலோத் தாங்கிப்பிடித்தலோ அல்லது காமாக்ஷியின் கடாக்ஷமோ இல்லாத நான் ஒரு தான்தோன்றிப்பயல் என்கிற காரணத்தால், தனியாகவே இந்தத் தாக்குதலை எதிர்கொண்டேன்.
அதன் பிறகு நான் அவமானங்களைக் கடந்தால்தான் ஆன்மீகம் என்கிற தனிப் பதிவாய்ப் போட்டதும், இன்னும் இரண்டு மூன்று வாரங்களில், என்னைப் பற்றி சைக்கோ அனலைஸ் செய்து எனக்கே அனுப்பப்போவதாய்ச் சொல்லி, எழுதி எழுதி கலைத்துக் கொண்டிருப்பவர். இன்றும் பல்வேறு பெயர்களில் எவ்வளவு முறை எங்கெங்கே ப்ளாக் பண்ணினாலும், என்னைத் தொடர்கிற, கோவை / பிர்மிங்காம் சைகை யாட்டிரிஸ்ட்டு பிறந்த இடம் காஞ்சி என்று ஒரு முறை கூகுள் ப்ரொஃபைலில் குறிப்பிட்டு இருந்தார்.
JP Rajendran, Jaypee Rajendran, jaypee raj
தெய்வமே நீங்கள் எல்லாம் மெத்தப் படித்தவர்கள். நானோ தெருக்குழந்தை.
உங்களுக்கு புத்தகங்கள் தெரியும். எனக்கு வாழ்க்கை தெரியும்.
உங்களுக்கு வாசிக்கத் தெரியும். எனக்கு எழுதத் தெரியும்.
உங்களுக்கு வாசிப்பதை நிறுத்தத் தெரியாது. எனக்கு எழுதுவதையும் நிறுத்திக் கொள்ளத் தெரியும்.
உங்களுக்கு செருப்பால் அடிப்பேன் என சொல்லத் தெரியும். என் எழுத்தால் அடித்தால் அதில் உங்கள் செருப்பு உஙகளை உங்கள் காலத்திற்குப் பிறகும் அடித்துக் கொண்டிருப்பதை உங்கள் சந்ததியும் பார்க்க சந்தி சிரிக்கவைக்கும் வித்தை தெரியும்.
நீங்கள் என்னைத் தேவடியாள் பையன் என்று அழைத்ததனால் இறந்து போன என் தாய்க்கு என்னதான் ஆகிவிடப் போகிறது? அழைத்ததன் வடு உங்கள் வாயைச் சுட்டுக் கொண்டிருக்கிறது போலும், அந்தக் குற்ற உணர்விலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளவே என்னைக் குற்றவாளியாய் எப்படியேனும் ஆக்கிவிடத் துடித்தபடி என் பின்னால் முகர்ந்தபடியே தொடர்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குப் புரிகிறதா?
நீங்கள் என்னைத் தேவடியாள் பையன் என்று அழைத்ததனால் இறந்து போன என் தாய்க்கு என்னதான் ஆகிவிடப் போகிறது? அழைத்ததன் வடு உங்கள் வாயைச் சுட்டுக் கொண்டிருக்கிறது போலும், அந்தக் குற்ற உணர்விலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளவே என்னைக் குற்றவாளியாய் எப்படியேனும் ஆக்கிவிடத் துடித்தபடி என் பின்னால் முகர்ந்தபடியே தொடர்ந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குப் புரிகிறதா?
ஒரு உண்மையைத் திருகிப் புரிந்து கொண்டுவிட்டால், அதைத் தள்ளி நின்று பார்த்து,நேர்செய்து புரிந்துகொள்ள குறைந்தபட்ச முயற்சியாவது மேற்கொள்பவன்தான் சரியான மனிதன்.
எழுதும் போது, தள்ளி நின்று அவனையே ஒரு பாத்திரமாகப் பார்க்க சாத்தியப்பட்டால்தான் ஒருவன் எழுத்தாளன் ஆகமுடியும். எழுத வருகிறது என்பது மட்டுமே ஒருவனை எழுத்தாளனாக ஆக்குவது இல்லை. அம்பாரமாக எழுதிக் குவித்த புத்தக அடுக்குகள் இறவாமைக்கு அச்சாரமில்லை. ஒரு வரி அல்லது ஒரு வார்த்தை உங்கள் மனதை விட்டு அகலாமல் நெருடிக் கொண்டிருக்கிறதெனில் எழுதியவன் இல்லாமற் போனாலும் இறப்பின்றி அவன் இருந்து கொண்டிருக்கிறான் என்றே பொருள் இல்லையா?
ஆறாம் வகுப்பு வாத்திமார் ஆயிரக்கணக்கானோர் இறந்துவிட்டார்கள். அவர்களின் ஜன்னல் திறப்பில் உள்வாங்கிய ஒளியைச் சுமந்தல்லவா அநேகம்பேர் விஞானிகளாகவும் கவிஞர்களாகவும் ஆகியிருக்கிறார்கள். கோடு கோணலாகப் போய்விட்டமைக்காக கோபிக்காமல் நேர்த்தியாய் அதை வளைப்பதெப்படி என்று கற்றுத் தந்தமையாலேயே ஓவியத்தில் ஆர்வத்தை உள்ளே விதைத்த டிராயிங் மாஸ்டர்களை தங்களுக்குள் வைத்திராத ஓவியர்கள் எத்துனைபேர் இருந்துவிடக்கூடும்.
நமக்குக் கிடைத்தது நாட்டுடைமை என்று, நான் வலையேற்றுவதையெல்லாம் எடுத்து உங்கள் பெயரில் சுட்டி கொடுப்பதாலோ, உங்களுடையதாக வலையேற்றுவதாலோ என்னைக் காயப்படுத்துகிறீர்களா? எனக்கேதும் இழப்பா? இல்லையே, நல்ல விஷயம் இன்னும் கூடுதல் பேரைச் சென்றடைகிறது என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி,
நீங்கள் ஒருவராக இருக்கலாம், ஒரு கும்பலாக இருக்கலாம், ஸ்ட்ரெய்ட் அல்லது மிக்ஸட் டபுள்ஸ்ஸாக இருக்கலாம், அல்லது உங்கள் முகத்தை அடுத்தவர் உபயோகிக்க வாடகைக்குக் கொடுத்தவராக இருக்கலாம். நீங்கள் யாருமே இல்லாத யாரோவாக இருக்கலாம். காக்காவாக இருக்கலாம். காக்கா போட்ட கக்காவாக இருக்கலாம். தொடக்கத்தில் கோவையில் இருக்கலாம், துண்டுப் பிரச்சனைக்காக தற்போது பிர்மிங்காமில் வசிக்கலாம். இதைப்படித்து விட்டு ஒட்டு மொத்தமாய் இணையத்தை விட்டே வெளியேறாலாம். இணையத்தில் எதுதான் சாத்தியமில்லை.
ஆறாம் வகுப்பு வாத்திமார் ஆயிரக்கணக்கானோர் இறந்துவிட்டார்கள். அவர்களின் ஜன்னல் திறப்பில் உள்வாங்கிய ஒளியைச் சுமந்தல்லவா அநேகம்பேர் விஞானிகளாகவும் கவிஞர்களாகவும் ஆகியிருக்கிறார்கள். கோடு கோணலாகப் போய்விட்டமைக்காக கோபிக்காமல் நேர்த்தியாய் அதை வளைப்பதெப்படி என்று கற்றுத் தந்தமையாலேயே ஓவியத்தில் ஆர்வத்தை உள்ளே விதைத்த டிராயிங் மாஸ்டர்களை தங்களுக்குள் வைத்திராத ஓவியர்கள் எத்துனைபேர் இருந்துவிடக்கூடும்.
நமக்குக் கிடைத்தது நாட்டுடைமை என்று, நான் வலையேற்றுவதையெல்லாம் எடுத்து உங்கள் பெயரில் சுட்டி கொடுப்பதாலோ, உங்களுடையதாக வலையேற்றுவதாலோ என்னைக் காயப்படுத்துகிறீர்களா? எனக்கேதும் இழப்பா? இல்லையே, நல்ல விஷயம் இன்னும் கூடுதல் பேரைச் சென்றடைகிறது என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி,
நீங்கள் ஒருவராக இருக்கலாம், ஒரு கும்பலாக இருக்கலாம், ஸ்ட்ரெய்ட் அல்லது மிக்ஸட் டபுள்ஸ்ஸாக இருக்கலாம், அல்லது உங்கள் முகத்தை அடுத்தவர் உபயோகிக்க வாடகைக்குக் கொடுத்தவராக இருக்கலாம். நீங்கள் யாருமே இல்லாத யாரோவாக இருக்கலாம். காக்காவாக இருக்கலாம். காக்கா போட்ட கக்காவாக இருக்கலாம். தொடக்கத்தில் கோவையில் இருக்கலாம், துண்டுப் பிரச்சனைக்காக தற்போது பிர்மிங்காமில் வசிக்கலாம். இதைப்படித்து விட்டு ஒட்டு மொத்தமாய் இணையத்தை விட்டே வெளியேறாலாம். இணையத்தில் எதுதான் சாத்தியமில்லை.
முற்றிலும் முடியாதது, ஒன்றே ஒன்று மட்டும்தான் உண்டு. இணையத்தில் ஏற்றப்பட்ட எதுவும் நாம் நீக்குவதால் அழிந்துபடுவதில்லை. எதுவும் உருவாக்கப்படவும் இல்லை அழிக்கப்படவும் இல்லை உருமாறிக்கொண்டிருக்கிறது என்று கோயில் கதாகாலட்சேபத்தில் சொல்லப்படும், சட்டை கழற்ற வேண்டிய அவசியமே இன்றி அனைவரும் கேட்கக் கிடைக்கும் கதையே போல, எழுதியதெல்லாம் இணையத்தில் எங்கோ இருந்து கொண்டுதான் இருக்கிறது.
இப்போது ஒரு முகத்துடன் வெளியில் வர முடிவெடுத்து இருப்பதால், பாவம் உங்களுக்கும்தான் எத்துனைப் புழுக்கம்! கெளரவமாகக் கோட்டு சூட்டுக்குள் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தால் உண்டான புழுக்கம். இந்தப் புழுக்கத்தின் காரணமாக வரும் அழுத்தத்திற்காகக் கூட இன்னொரு மருத்துவனை நாட முடியாத புழுக்கம்.
ஆயிரம் மூல ஆப்பரேஷன் செய்த வைத்தியன்தான் என்றாலும் உள்ளத்துப் புழுக்கத்தில் உடல் சூடேறி, அவனுக்கே மூலம் வந்துவிட்டால், கைதேர்ந்த மருத்துவனே ஆனாலும் சுய-ஆப்பரேஷன் செய்து கொள்ள முடியாதுதான் இல்லையா?
ஊருக்கெல்லாம் மன நலம் அறிவுரைத்தாலும், கட்டின பெண்டாட்டியோடு பிரச்சனை என்று வந்துவிட்டால் தானும் ஒரு சாதாரணனாய், சபை நடுவில் காச்சு மூச்சென்று கத்தினான் என்றால், சொஸ்தப் படுத்திக்கொள்ளக் காத்திருக்கும் நோயாளிகள், வாய்பிளந்து வேடிக்கை அல்லவா பார்க்க நேர்ந்துவிடுகிறது.
பெண்டாட்டியோடு ஒத்துப் போய் சுமூகமாய் குடும்பம் நடத்த முடியாதவன் நம் வாழ்க்கைக்கு எப்படி வழிகாட்டக்கூடும் எனத் தனக்குள் சந்தேகக் கேள்வி எழுப்பிக் கொள்ளும் பாமரன் முன்னால் எத்துனை தடியான புத்தக எடுத்துக் காட்டுகளைத் தூக்கிப் போட்டுதான் என்ன பயன்? எந்தப் புத்தகம்தான் அவனது புத்தியைத் தெளிய வைத்துவிடக்கூடும்?
காதலித்தோம், மணம் புரிந்தோம், ஒத்துவரவில்லை, பிரிந்தோம், நாங்கள் இப்போதும் நண்பர்கள் என்று கெளரவப்படுத்தித்தானே, சொல்ல வேண்டி இருக்கிறது. ஒத்துவரவில்லை ஆனால் ஒதுக்கவும் வழியில்லை, அதுதானே எனக்கும் பிரச்சனை என்கிறான் பாமரன்.ஆனால் உங்கள் பிரச்சனை பொருளாதாரத் தன்னிறைவினால் சொந்த அகங்காரத்தால் வந்துது போலும். அதையேக் காரணமாய்க் கொண்டு முறிவிற்கும் வந்தது போலும். சோற்றுக்கு விரல்சூப்பும் வீணனாய் வாழும் என் போன்ற மத்தியதர வர்க்கத்திற்கு இது கட்டுமா? ரெண்டடி அடிச்சிக்கிறோம் ரெண்டுதடவை படுத்துக்கிறோம், கொஞ்சம் போலக் கத்திக்கிறோம் கொஞ்சம் போல முத்திக்கிறோம். பிறாண்டிகிட்டே வாழறோம். அப்பப்பப் பஞ்சர் ஆனாலும் ஒட்டுப் போட்டு வண்டி ஓடிகிட்டு இருக்கு. பொருளாதார வக்கிருக்கற ஒரே காரணத்தால உங்களால வண்டி மாத்தி வண்டி ஏற முடியிது. இது சாதனையா? செளகரியமா? என்கிற பாமரனின் மெளன கேள்விகளுக்கு புத்தக மேதைகள் மூச்சிரைக்க வியாக்கியானம் கொடுத்தாலும், அவன் முகம் திருப்பி சிரிப்பதைத் தடுக்கவல்ல தத்துவக்கடவுள் எப்போதுதான் பிறக்கப் போகிறான்?
இணையத்து ஆற்றின் படகுப் பயணத்தில் இழைவும் குழைவும் உறவும் முறிவும் ஆத்திரத்தில் ஒரு புனைவும் ஆசுவாசத்துடன் அடுத்த படகிலேறி பயணமும் என்று இப்படியாகத்தானே போகிறது. குட்டையைக் கலக்கினால் மீன் கிடைக்கும் ஆற்றைக் கலக்கவல்ல கை ஏது?
இரட்டை நிலை எடுத்து இணையத்தை அடாவடியாய் மிரட்டலாம்.
பாமரனின் எளிய பட்டறிவுக்கு முன்னால் மருத்துவனின் புத்தக அறிவு எம்மாத்திரம். பலவருடப் பைத்தியம், மாத்திரையைக் கைதவறுதலாய் மாற்றிக் கொடுப்பதன் மூலம் ஒருவேளை குணமாகிறது போலும். ஏன் பிடிக்கிறது எப்படித் தெளிகிறது என விளக்க முடியா ஒன்றிற்கு இப்படி இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் இப்படியெல்லாம் இல்லாமலும் இருக்கலாம் இப்படியல்லவா இருக்கிறது.
இதில் எழுத்தாளன் வாழ்வுக்கு ஆராய்ச்சிதான் உங்களின் கடைசி ஆயுதம்.
சொந்த அழுத்தத்திற்கு விசிறியாய், சுய அழுக்குக்கு சோப்பாய், உங்களுக்கு நான் உதவமுடியும் என்றால் அதை விடவும் என் வாழ்வை எது அர்த்தமுள்ளதாக ஆக்கிவிட முடியும்.
என்னைக் கடலில் வீசினாலும் கட்டுமரமாக மிதப்பேன் நீங்கள் அதில் பயணம் செய்யலாம் எனச் சொல்லும் அளவிற்கு அதிகார எழுத்தாளன் இல்லையெனினும் நானும் ஓரிரு புத்தகங்கள் எழுதியிருப்பவன் என்கிற ஹோதாவில், ஏதேனும் சொல்லித்தானே ஆக வேண்டி இருக்கிறது. எனவே கலைக்க வேண்டிய அவசியமின்றி நீங்கள் என்னை எப்படியும் அழைக்கலாம்.
தேவடியாள் பையன் என்பது கூட ஒரு நல்ல புனைப்பெயர் போலவே ஒலிக்கிறது. அடுத்த கட்டுரை எழுத நேர்கையில் கட்டாயம் உபயோகித்துக் கொள்கிறேன். இதிலும் தங்கள் மனம் அமைதிப்டவில்லை எனில் என் செவிள் காட்டவும் நிச்சயம் சித்தமாயிருக்கிறேன். செவிளிலும் அடிக்கலாம். லட்சியமாய்க் கொண்டிருக்கும் செருப்பாலும் அடிக்கலாம். என் வீட்டிற்கு வந்து காபி சாப்பிட்டுவிட்டும் அடிக்கலாம் அடித்துவிட்டும் காபி சாப்பிடலாம். புத்தகக் கண்காட்சியில் அத்துனை நாளும் என் கபால மோட்சத்தை உபாசித்தபடி அனைவரின் கண்களிலும் தென்படும் வண்ணம் குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து கொண்டுதான் இருந்தேன். சொத்தை சாமிகளையும் வீர ஆசாமிகளையும் கூட சந்தித்தேன்.
சர்வதேச அன்பை வழியவிட்டபடி வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் போலக் காட்டிக் கொள்பவர்களுக்கு, பொதுவாக ஜனங்கள் என்றாலே பிடிக்காது என்பதும், எவராயிருப்பினும் பார்வையிலிருந்து அகன்றவுடன் அனைவருமே நாய்கள் என்பதும் பலர் அறியாத நிரந்தரம். அந்த நாய் ஏன் வந்துது? இந்த நாய் இப்ப ஏன் ஃபோன் பண்ணுது? அந்த நாய்க்கு இல்லேன்னு சொல்லு! இப்படி இப்படியாக அனைவருமே ஏக அன்போடு அழைக்கப்படுவதும், அது, இந்த நாயின் எதிரில் பிறத்தியார் பற்றி சொல்லப்பட்ட காலத்தில், இது நம் முதுகிற்குப் பின்னால நமக்கும் உள்ளதுதான் என்கிற அறிவு கூடவா இல்லாமல் இருந்திருக்கும்இந்த அற்ப ஜீவன்? நாய் மனிதர்களைப் பற்றி நன்றாக அறிந்த நாய் என்பதுவும்கூட பிரச்சனையின் அடிப்படை அல்லவா?
பொதுவாக ரொம்பவும் கடவுளைப் பிடித்து உலுக்குகிறவர்கள், மனிதர்கள் மேல் நம்பிக்கையற்றவர்களாகவே இருக்கிறார்கள் இல்லையா?
காமாக்ஷியின் முந்தானைக்கும் பெரியாரின் வேட்டிக்கும் எப்படித்தான் முடிச்சு போட மனசு வருகிறதோ. இதற்கு ததாஸ்து சொல்ல, பூணுல் அணியாத புரட்சி தர்பைக் கவசங்கள். பெரியாரின் காப்பிரைட் ஹோல்டர்கள், ஹெட்லைட்டாக எலுமிச்சை சைஸில் ஒளிரும் சிவப்பு விளக்கு ஏந்தித் தன்னைத் தாகூர் என பாவிக்கும் நாகூர் ஆட்டைப் பூர்ண கும்ப மரியாதையோடு மேடையேற்றி நீட்டி முழக்கி சமூக முரண்பாடுகள் பற்றி உரையாற்றுவது, நகைப்புக்குரியது அல்லவா?
உன் மேன்மையையும் என் கீழ்மையையும் எவனைவிடவும் துல்லியமாகப் பார்க்க எனக்குத் தெரியும். அதை எழுதுவதுதான் என் காரியம்.
தொழிலின் கைதி நீ. வாழ்வுச் சிறைச்சாலையைத் திறந்தவெளியாக விஸ்தரித்து கொண்டு திரிபவன் நான்.
இணையத்து அடிதடியில் இரத்தமா கொட்டுகிறது. எடுத்து வீசப்படும் சேறுகூட சிவப்பாவதில்லை, அழுக்கு வண்ணத்தில் அல்லவா அப்பிக் கொள்கிறது அனைவரின் மேலும்.
ஊருக்குச் சொந்தமான ஒரு எழுத்தாளனை, தேவடியாள் பையன் என்றல்லாமல் வேறு எப்படி அழைத்தாலும் பொறுத்தமாய் இருக்காது தானில்லையா? உங்களிடம் இருக்கிற படைப்பின் ஊற்றுக் கண்ணை இப்போதுதான் என் ஊனக்கண் கான லபித்தது. மிக்க நன்றி.