27 January 2011

எழுத்தாளர்களும் #tnfishermanனும்

#tnfisherman சாரு ட்விட்டினால் - ராஜபக்சேவின் குதத்திலே சதம் அடிப்போம் என்று என் தேகம் நாவலில் எழுத நினைத்திருந்தேன்.மிஷ்க்கின் இது தெரியாமல் சரோஜாதேவி என்கிறார்.
#tnfisherman ஜெமோ ட்விட்டினால் - ஆதி மனத்தின் ஆழத்தில் வேறூன்றியுள்ள அகிம்சை தத்துவத்தை..அட ஆரம்பிக்கறதுக்குள்ளையே செத்துட்டானே

#tnfisherman எஸ்ரா ட்விட்டினால் - கடல் மீனை உள்ளே வைத்திருப்பதே போல மீனவனின் மனதிற்குள் கடல் விரிந்து கிடக்கிறது தானில்லையா!

#tnfisherman அ.மி ட்விட்டினால் - என்ன இருந்தாலும் சுட்றது நன்னா படல்லே. அவ்ளதான். அதுக்குமேல ஷொன்னா நம்பள சுட்ருவா.

#tnfisherman இ.பா ட்விட்டினால் - நான் வார்ஸா பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது கச்சத்தீவு இந்தியாவில் இருந்தது மீனவனும் சுடப்படவில்லை.

#tnfisherman கலைஞர் ட்விட்டினால் - பார்ப்பண தருக்கர்களின் ட்விட்டுகள் இந்த சாமானிய சூத்திரனை என்ன செய்யும். மீனவத் தன்மான இனம்தான் என் மூச்சு பேச்சு 200 கோடி போச்சு

#tnfisherman டி.ஆர் ட்விட்டினால் - டேய் ஸ்ரீலங்கா ராணுவமே என்ன மாதிரி உங்குள்ள எவனுக்காச்சும் ஒடம்புல மசிறிருந்தா என்ன சுட்றா அப்பறம் உனக்கு உசுரிருந்தா சிம்பு வெறும் கொம்பு என்ன நம்பு இல்லாட்டி நீ வெரும் சொம்பு

**************

ட்விட்டரில் நடப்பது தார்மீக ரீதியிலான தீவிரமான முன்னெடுப்பு என்பதால் இவைகளை ட்விட்டவில்லை. இது வெற்றுப் பகடியும் அல்ல. ஒரு விதத்தில் ஆளுமைகள் பற்றிய விமர்சனமும் கூட.

வியட்நாம் போரை எதிர்த்து ஹிப்பிகள் நடத்திய பல நூதனப் போராட்டங்களில் ஒன்று, வெள்ளை மாளிகை இருந்த திசை நோக்கி ஆயிரக்கணக்கானோர் மூத்திரம் அடித்தார்கள். 

அடுத்தவன் உயிரை எடுக்கச்சொல்லி கட்டாய ராணுவ சேவை என்கிற பெயரில் என் உயிரைப் பணயம் வைத்துப் போரில் ஈடுபடுத்த அரசுக்கு என்ன உரிமை என எழுந்த போர் எதிர்ப்புப் பேரலை. 

தவறாகப் புரிந்துகொள்ள மாட்டாது என்கிற நம்பிக்கையுடன், இது இங்கே பதியப்படுகிறது. மீனவர்களுக்கான ட்விட் போராட்டத்தைத் தீவிரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் எவரேனும் புண்படுத்துவதாக எண்ணுகிற பட்சத்தில், நீக்கப்படவேண்டும் என நினைத்தால் உடனடியாக இந்தப் பதிவு நீக்கப்படும்.