29 January 2011

ஆசப்பட்டுக் கேட்டுட்டார் சாரு, ட்விட்டிட்டாப் போச்சு #tnfisherman


#tnfishermanக்காக லீனா கவிதையில் ட்விட்டினால் - உப்பு கரிக்கும் மயிரைப் பிடுங்குங்கள் எவன் குறியிலிருந்தேனும். மகிந்தாவுடையதாய் இருப்பின் மகிழ்ச்சி.

#tnfishermanக்காக குட்டி ரேவதி கவிதையில் ட்விட்டினால் - ஆலிங்கனித்து அம்மணமாய்க் கிடக்கட்டும் இரண்டு சடலங்கள் மகிந்தாவும் அவன் தம்பியுமாய்.

#tnfishermanக்காக ம.பு ட்விட்டினால் - சுடப்பட்டது தமிழக மீனவன். ஆனால் இறந்து கிடப்பது மனிதம்.

#tnfishermanக்காக விஜய் ட்விட்டினால் - நான் இலங்கை ராணுவத்தை சுட ஆரம்பிச்சுட்டா என்னையே நான் சுட்டுக்கவும் தயங்க மாட்டேன்.

#tnfishermanக்காக ரஜினி ட்விட்டினால் - நான் ஒரு தடவே சொன்னா நூறு தடவே சொன்னா மாதிரி. இலங்கைக் கடற்படே ஒரு தடவே சுட்டா நூறு தடவே சுட்டா மாதிரி. நா சொல்ல மாட்டேன் செய்வே! ஹா ஹா ஹா. ஏற்கெனவே ஒரு தடவே பிரபாகரனைப் உங்குளாலே பிடிக்க முடிஞ்சிதான்னு சவால் விட்டேன் அது வேறே மாதிரி ஆயிடுச்சி அதான் மீனவேன் பத்தி ட்விட்ட யோசிக்கிறேன். அவசரப் பட்கூடாது ரொம்ப யோசிச்சி செய்ய வேண்டிய காரியம் இது!

#tnfishermanக்காக கமல் ட்விட்டினால் - இலங்கை ராணுவம், சாரி நேவி சுடுதுங்கறாங்க, அல்பாச்சினோவோட ஸ்கார்ஃபேஸ் பாத்துருக்கியா! அது மாதிரி பலம்பொருந்திய வல்லரசான இந்தியா திருப்பிச் சுட்டா நீ என்னா ஆவே! இலங்கையிலையும் மக்கள் மனிதர்கள் மீனவர்கள் இருக்காங்க நம்ம கோவத்துல அத, அத மறந்துடக் கூடாது.