02 February 2011

சாரு நிவேதிதாவுக்கு நன்றி!

எளிய தமிழில் என்ன ஒரு அறிமுகம். 

இரண்டாவது கைக்குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொள்ளும் இளம் பெண்ணின் லாவகத்துடன் இலக்கிய ஜாம்பவான்களின் அறிமுகம் - தாஸ்தாவஸ்கி, ஆண்டன் செகாவ், கு.ப.ரா.

இவர்களையெல்லாம் எங்களுக்குத் தெரியாதா எனக் கேட்கலாம். தெரியாத எவருக்கேனும் இவர்களைப் படிக்க வேண்டும் என்கிற பேராவலைத் தூண்டும்படியாக இருக்கிறது சாருவின் எழுத்து. பேசப்படும் ஆளுமைகளின் சாரத்தை எளிமைக்காகவோ / சுவாரஸியத்திற்காகவோ, சற்றும் சமரசம் செய்யாமல் எழுதுவது சாதாரண விஷயமில்லை. 

அங்கே பேசப்பட்ட ’சிறிது வெளிச்சம்’ இங்கே முழுமையாக. புத்தக விபரம் கடைசியில்.

கு.ப.ராஜகோபாலன் - சிறிது வெளிச்சம்
கலாமோகினி - ஜனவரி 1943
கு.ப.ரா கதைகள் புத்தகத்திலிருந்து நன்றியுடன்


கு.ப.ரா கதைகள்
அணுகவேண்டிய இடம்
அடையாளம் வெளியீடு