27 February 2011

தமிழிசை ஆர்வலர்களே! பாருங்கள்! நூறு கதைகளுக்கு இணை இந்தக் குறும்படம்!

இவரை அடையாளம் தெரிகிறதா? இணைய நன்பர்களே இந்த முகத்தை எங்கோ பார்த்தது போலவும் ராதா விஸ்வநாதன் என்கிற பெயரைக் கேட்டது போலவும் தோன்றுகிறதா?
இவரை எம்.எஸ் அம்மா என்று கர்நாடக இசை உலகில் மரியாதையுடன் போற்றப்படும் எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களுடன் கச்சேரிகளில் பாடுவதைப் பார்த்திருப்பீர்கள். 

Radha Viswanathan is the eldest daughter of Thiagarajan Sadasivam and his first wife, Smt.Apithakuchambal. However she was brought up by Smt.M. S. Subbulakshmi whom her father married after the passing away of his first wife. Smt Radha Viswanathan is often known to be the Torch Bearer of the M.S. Bani. http://en.wikipedia.org/wiki/Radha_Viswanathan

அடிப்படையில் இவர் ஒரு பாடகியாக மட்டுமின்றி நடனக் கலைஞராகவும் இருந்திருக்கிறார். 

 Ramachandran 
பக்கவாதம் உடம்பில் பாதியை வீழ்த்திய பின்னும், ஒரு கையும், கண்களும் செய்யும் ரஸவாதம்:

பல வருடங்களாக பக்கவாதம் காரணமாய் வீல்சேரில் இருப்பவர். ஏதோ ஒரு வீட்டின் (அடுத்து வரும் குறும்படத்தில் இருந்து, பார்வையாளர் பேச்சின் மூலம் எடுக்கப்பட்ட இடம் க்ளீவ்லேண்ட் எனத் தெரிய வருகிறது)   அடைசல்களுக்கு நடுவில் உட்கார்ந்து உடலைக் கடக்கும் அற்புதத்தைப் பாருங்கள். தமிழ் பாடல்தான், புரியக் கூடியதுதான், பாடலின் பொருளுக்கு ஏற்ப என்னென்ன பாவங்கள். ஒற்றைக் கையும் (அதுவும் இடது கை) பழுத்த கிரிணிப் பழம் போன்று இருக்கும் முகமுகமும் கொண்டு உட்கார்ந்த இடம்விட்டு அகலாமல் (அகலமுடியாமல்) என்ன ஒரு அற்புத்தத்தை நிகழ்த்துகிறார்.

இப்போது சொல்லுங்கள் இவரது பேசுகிற இடது கை முக்கியமா? செயலற்ற வலது கை முக்கியமா? இந்த நிலையிலும் இவரின் கலை எப்படி மிளிர்கிறது என்பதைச் சொல்ல முனைபவன் கலைஞனா? அதைத் தேட முயற்சிப்பவன் நல்ல ரசிகனா? 

தன் கலையால் உடலைக் கடப்பவன் கலைஞன். கூட்டத்தைச் சேர்த்து கலையில் தன் இடத்தை நிறுவிக் கொள்ளப் பார்ப்பவன் ஈனப்பிறவி. 

ஈனப்பிறவி கெட்ட வார்த்தையா சார்? - கெட்டவார்த்தைக் குட்டச்சன்.