@Dyno Buoy : எப்படி இப்படில்லாம். சபாஷ். (6.26 வரை எழுதி இருந்ததை வைத்து)
இந்தாள்மேல ஆரம்பத்துல செம கடுப்பு இருந்துது. ஜெமோவை நம்பி திலிப்குமார் கதையை நானும் சேந்து ஒளறி தியரைஸ் பண்ணின அவமானத்துல நானே கூனிக்குறுகி இருக்கும் போது ’தவறான தகவல் தற்கொலைக்கு சமானம்’னு நான் எழுதினதைக் கிண்டலடிச்சி,
இதுக்குதான் தற்கொலை கிற்கொலைனுத் தூவக்கூடாது, மனப்பாடம் பண்றது பெரிய விஷயமாங்கற மாதிரி தொனில, இவங்கல்லாம் எளக்கிய எளுத்தானுங்கன்னு பஸ்ஸுல எழுதினபோது, சுருக்குன்னுச்சு. யார்ரா இவன்னு ட்விட்டர்லத்தேடினேன். நக்கல் புடிச்சிருந்துது. நம்பள இப்பிடி நக்கல் பண்ணிட்டானேன்னு உள்ள சுத்திகிட்டே இருந்துது.
வயிறு கதையை படிச்சிட்டு போட்ட - 81க்கு நல்ல கதை. இடைத்தரகுன்னு தலைப்பு வெச்சிருக்கலாம்கற ட்விட்டப் படிச்சபோது. அட சரியாப் புடிக்கிறானே இந்தாளுன்னு ஒரு அபிப்ராயம் விழ ஆரம்பித்தது. அப்பறம், நந்தலாலா பற்றிய பதிவிற்கு ஒற்றை வார்த்தையில் பாராட்டிச் சென்றது என் தன்னம்பிக்கையைக் கூட்டியது. பாராட்டை எதிர்பார்த்து எழுதுவதில்லை எனினும் இளைஞர்கள் பாராட்டு -பொருட்படுத்தத் தக்கதா என்பதை பரிசீலித்து ஏற்கையில் - காலத்தோடு இருக்கிறோம் என்பதை உறுதி செய்யும் ஒன்றுதான். அதுவும் என்னைத் துச்சமாக நக்கலடித்தவன் பாராட்டுகையில், மனம் உற்சாகம் கொள்வது இயல்புதானே.
ஜெமோவைக் கொடையும் போது அதுக்கு எதிரா என்னைக் கிண்டலடிச்சதுல வடகரையார் மாதிரி அடில அழுத்தம் குடுக்காமக் கிண்டல்ல கொடுத்தது சரிதான். சரியான ஆளுதான்னு ஒரு அபிப்ராயத்தை ஏத்திச்சி.
உண்மை மனிதர்கள் சீரிஸை எனக்கு அறிமுகப்படுத்தினதே இந்தாளோட ட்விட்டுதான் ஃபேவரைட்ல சேமிச்சி இருக்கேன்.
@dynobuoy
☣ dYNo ☣
அறம் - சிறுகதை http://is.gd/rGpM5q || என்னா எழுத்துய்யா இவருக்கு... கலக்கியிருக்கார் ஜெமோ. ஆமா, யார் அந்த பெரியவர்? அந்த சுட்டிலேந்துதான் அந்தக் கதையையேப் படிச்சேன்.
அப்பறம் புதுப்பட ரிலீஸ் ரசிகர்கள் ஆரவாரமும் என் எதிர்வினைகள் வரவழைத்த கோபங்களும் அதில் எனது அதீதமும் அதைத் தனிநபர் தாக்குதலாய் தன்னைத் தாக்கியதாய் தவறாக நினைத்து வருத்தப்பட்டவருக்காக என் பதிலை/’மன்னிப்பை’ மறைமுகமாய் எதிபார்த்ததும். அது செய்தவரைக் குறித்ததன்றி வேறு எவரையும் குறித்ததல்ல என்கிற என் தன்னிலை விளக்கத்திற்குப் பின் அதைத் தொடராமல் தாண்டியதும் இத்தனைக்கும் என் சண்டைக் கதையில் இவரையும் குத்தி இருக்கிறேன் அதைப் பெரிது படுத்தாமல் விஷயத்தைப் பேச வந்ததும்,
ஒரு கோர்வையில் விழுகிறது அல்லவா. இவ்வளவுதான் விஷயம்.
விமர்சனம் என்று ஒன்று தனியாக எங்கோ தொங்கிக் கொண்டு இல்லை. வாழ்வு பற்றிய கூர்த்த அவதானிப்புகள்தான் நம்மை முன்னகர்த்துகின்றன. அது இல்லாமல் எத்துனைப் புத்தகங்கள் படித்தாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை.
இதில் அய்யனாரும் டைனோவும் சொல்வது போல் புர்ரா கதையில் எஸ்.ரா கையாண்டிருப்பது, ஜப்பானிய உத்தி என்பது இப்போது இவர்கள் சொல்லியே எனக்குத் தெரியும்.
ஜென் கவிதைகள் சில ஆற்காட் ரோடு ஓஷோபைத்தியம் மூலமாக அறிமுகம்.
எது ஒன்றையும் உள்ளுக்குள் செரித்துக்கொள்ளாமல் இறக்குமதி செய்கையில் நிகழும் விபத்து.
சொல்லவேண்டும் எனப்பட்டது சொல்லிவிட்டேன். சரி என் பதிவிற்குப் போகிறேன். புர்ரா புர்ரா புர்ரா