18 March 2011

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள்!

<சில நாட்கள் இரவில் சுகு அழும்போது உறக்கத்தில் பாlலூட்டும் மனைவியின் முகத்தை பார்த்திருக்கிறேன். அதில் கருணையோ, அன்போ எதுவுமிருக்காது. எப்போது பால்குடித்து முடியும் என்று பொறுமையற்று காத்திருப்பவளின் சிடுசிடுப்பே நிரம்பியிருக்கும்.

அந்த சிடுசிடுப்பிற்கு இன்னொரு காணரம் இருந்தது. சுகுவின் அழுகையை மீறி நான் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தது.>

மூடக் குழந்தைகளுக்கு இதில் நான் சொல்லும் பிழை என்னவென்று இன்னும் புரியவே இல்லையாம்.

கதை ஆரம்பிக்கையில் தொடங்கி டென்ஸ் மாறி மாறி வருகிறதே. இதை இங்கிலீஷ்ல எழுதி இருந்தா மட்டும்தான் இலக்கணமெல்லாம் பாப்பீங்களா?

எதுவுமிருக்காது / காரணம் இருந்தது / தூங்கிக் கொண்டிருந்தது இது எல்லாமே பாஸ்டென்ஸா? என்ன தொனி வருகிறது. இறந்த காலத்தை நிகழ்காலத்துல எழுதற லட்சணமாய்யா இது.

எல்லாம் என் தலை எழுத்து. 

தான் ஒரு தேச சஞ்சாரி சென்னையை மெட்ராஸா இருந்த காலத்துலேந்தே குறுக்கும் நெடுக்குமா அளந்த பெரிய்ய்ய டுபுக்குன்னு பீலா உட்டுகுட்டு நுங்கம்பாக்கம் ஆவடி தரமணி பழவந்தாங்கல் கடல் பசுமையான மரங்களடர்ந்த பள்ளின்னு எல்லாத்தையும் கண்டமேனிக்கு சுனாமி அடிச்ச ரேஞ்சில கலந்துகட்டி எழுதிகிட்டு இருக்கான் எழுத்தாளன் அப்பிடிங்கற பேர்ல ஒருத்தன்.

அத்தப்போயி ஒரு முண்டம் மாயா யதார்த்த வாதம்னு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட எழுதிகிட்டு பெனாத்துது.

கேனத்தனமா எழுதறவன் ஒரு மண்ணும் தெரியாம சொகம்மா புக்குமேல புக்கா தப்பும் தவறுமா எழுதிகிட்டு இருக்கான்.

கேள்விகேக்கறவன் மொக்கைங்களோட மல்லுகட்டவேண்டி இருக்கு.

ஒட்டக்கூத்தன் கதைதான் நினைவுக்கு வ்ருகிறது.

கம்பனுக்கும் ஒட்டக்கூத்தனுக்கும் கட்டோட ஆகாது. மன்னன்கிட்ட ஒட்டக்கூத்தனுக்கு செல்வாக்கு அரசிக்கோ கம்பன் கவிதையில் ஈடுபாடு. ஒரு நாள் அரசனிடம் அரசிக்கு ஊடல். ராணி உள்பக்கமா தாப்பா போட்டுகிட்டு தெறக்காமக் கோவமா இருக்கா. அரசன் ஒட்டக்கூத்தனிக் கூபிட்டு எதாவது ஜல்சா கவிதை சொல்லி ராணிய சரிக்கட்ட சொல்றான். ஒட்ட்க்கூத்தனும் போய் கவி பாடறான். உள்ளேந்து தாப்பா போடற சத்தம் கேக்குது. பின்னாடியே ராணியோட குரலும் வருது.

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் அப்பிடின்னு. எழுத்தாளன் ஏண்டா பின்னூட்டப் பெட்டிய மூடறான்? இல்லாட்டி இணையம்னா அலறறான்?

தப்புன்னு என்ன சொல்ல வறான் எதைச் சொல்லவரான்னே புரிஞ்சிக்கற அடிப்படை பொது அறிவுகூட இல்லாம நொய்யான் நொய்யான்னு குதிக்கறதுதான் உங்க வாசிப்பு லட்சணமாய்யா?

அங்க ஒரு முட்டாக்கூறு, நம்ப ஜெயமோகன், நரசிம்ம அவதாரம்னு எழுதிட்டார் அது மாமல்லனைப் பத்திதான்னு பஸ்ஸு விட்டு அதை இன்னும் நாலு முட்டாக்கூறுங்க லைக்கும் பண்ண, பஸ்ஸுட்ட முட்டாக்கூ,சேட்ல என்கிட்டயே வந்து சொல்லி ஹிஹிஹிங்கிது. 

அந்தப் பத்தியை எப்படி ஜெமோ முடிக்கிறார் என்பது பற்றியோ எவர்சில்வர் கோட்பாட்டு நகம்ங்கற வார்த்தை எப்படி என்னைக் குறிக்க முடியும்?  அடுத்து அந்தப் பத்தியை முடிக்கும் போதே பேராசிரியர்கள்னு சொல்றாறே அது என்ன?அப்பிடின்னுல்லாம் யொசிக்கிறது கிடையாது. மாமல்லன்தான் படிப்பு வாசனையே இல்லாத பண்டாரமாச்சே கோட்பாடுகள்லாம் அவனுக்கு எப்படிப் பொருந்தும், அப்பிடிங்கற எலிப்புளுக்கை அறிவுகூட இல்லே. என்னைப் பற்றின இந்த கணிப்பு கூட இல்லாதவரா ஜெயமோகன். வாசிப்பின் நாட்டிய சாஸ்திரம் அந்தக் கடைசி சில பத்திகளைப் பாத்தாலே தெரியும் அவர் என்ன சொல்ல வரார்னு.

//இப்போது போல அல்ல அப்போது. நவீன இலக்கியம் ஒரு ஆயிரம்பேருக்குள் தான் அன்று புழங்கிக்கொண்டிருந்தது. எந்த அச்சு இதழிலும் இலக்கியவாதிகளைப்பற்றி எதுவும் இருக்காது. எவருமே அசோகமித்திரன் அல்லது சுந்தர ராமசாமி பெயரை சொல்லி நம் காதில் விழாது. இலக்கியம் அறிந்த ஒருவர் நமக்கு ஓர் இலக்கியவாதியை அறிமுகம் செய்து இலக்கியத்தை சொல்லிக்கொடுத்தால்தான் உண்டு
ஆனால் குப்புசாமிக்கு எவருமே அறிமுகம் செய்யவில்லை. அவரே நூல்களை எடுத்து வாசித்து பிடிக்காதவற்றை நிராகரித்து பிடித்தவற்றை தேர்ந்தெடுத்து வாசித்து நல்ல இலக்கியங்களைக் கண்டுகொண்டார். முக்கியமான எல்லாவற்றையும் வாசித்திருந்தார்.ஆச்சரியம் என்னவென்றால் அவர் அறிந்த இன்னொரு இலக்கியவாசகன் நான்தான்.
எப்படி உங்களால் நல்ல இலக்கியத்தை அடையாளம் காணமுடிந்தது என்று நான் கேட்டேன். நல்ல உணவை எப்படி அடையாளம் காண்கிறோம் , நல்ல படிப்பை எப்படி தேர்ந்தெடுக்கிறோம்? என்றார் அவர். ‘டேய், நான் பார்த்த வாழ்க்கையை யார் பார்த்திருக்கிறார்கள்? எனக்கு வாழ்க்கை தெரியும். அந்த வாழ்க்கைதான் என் அளவுகோல். அந்த அளவுகோல் கல்கியை பொழுதுபோக்கு எழுத்து என்றும் அசோகமித்திரனை வாழ்க்கையைப்பற்றிப் பேசும் நவீன இலக்கியம் என்றும் அடையாளம் காட்டுவதில் என்ன ஆச்சரியம்?
ஆம், இலக்கியத்தை அறிய வேறொன்றும் தேவை இல்லை. எளியமையான மொழியறிவு, அடிப்படையான கற்பனை சக்தி, வாழ்க்கையை அறிந்துகொள்ளும் தன்மை மூன்றும் போதும். சொந்த வாழ்க்கையை, சொந்த மனத்தை, சொந்த கனவுகளை மட்டுமே இலக்கியத்தை புரிந்துகொள்ளவும் மதிப்பிடவும் பயன்படுத்தினால் போதும்//


இதையேதான் நான் வேற வார்த்தைகள்ல சொல்லிகிட்டு இருக்கேன். போதாக்குறைக்கு இதையேதான் ஜெயமோகன் எழுதின நான் வாசித்த சில கதைகளுக்கு எதிரான வாதமா வெக்கிறேன்.

சுரா இன்னும் வேற வார்த்தகள்ல சொன்னதேதாதான் இது.

அவருக்கு முன்னாடி க.நா.சு இதையேதான் சொல்லிகிட்டு இருந்தார்.

நாளைக்கு வரப்போற எழுத்தாளனும் இதையேதான் சொல்லுவான் - அவன் உண்மையான எழுத்தாளனா இருக்கற பட்சத்தில்

வாழ்க்கையப் பாருங்கடா வண்ணான் வாகனங்களா!