<உண்மையாகவே கவிதையை இப்படி பிச்சுப்போட்டுதான் படிக்க வேண்டுமா ? கவிதை என்பது அனுபவமல்லவா ?>
கரமைதுனம் கூட அனுபவம்தான். சூப்பர் அனுபவம்.
உலகத்தில் முஷ்டி மைதுனம் செய்பவன் 99பேர். இல்லை எனச்சொல்லும் அந்த மற்றையோர் ஆள் - பொய்யன்.
இதை நான் சொல்லவில்லை.
சொன்னவர் பெயர் சிக்மண்ட் ஃப்ராய்ட். ஃப்ராய்ட் சொல்லி எனக்குத் தெரிந்துவிட நான் என்ன படிப்பாளியா? ஃப்ராய்ட் சொன்னதாக இதை எனக்குச் சொன்னவர்.... அம்மாடி ஆத்தாடி அந்தப் பெயரை என் வாயால் சொல்லிவிட்டு, அப்புறம் இந்த பூமியில் நான் எப்படி வாழ்வதாம்? எதற்கு வம்பு. குளிர்ந்து கிடக்கும் எரிமலை கொந்தளிக்கத் தொடங்கிவிடப் போகிறது. நெற்றிக் கண் தீயில் நான் ஆயில் போல எரிய நேரிடும். எனவே அது வேண்டாம். மேட்டருக்கு வரவோம்.
கவிதை என்பது அனுபவமல்லவா? என்று தன்ன்குத்தானே ஷொட்டிக் கொள்ளும் குட்டிக் கவிஞனில் இருந்து எட்டு புக்கு பெத்துப் போட்டக் கவிஞர் வரை கேட்டு என்னைக் குடாய்கிறார்கள். இணையத்திற்கு வந்த புதிதில் - 17 ஆகஸ்ட் 2010ல் - என்னை எவனோ புதுசாக வந்திருக்கும் கேனை பிளாகர் என நினத்தவர்கள், இப்போது கொஞ்சம் மரியாதையுடன், கேனை மட்டுமல்ல இது கிறுக்கும் கூட என்கிற தெளிவிற்கு வந்து,
சீனியர் ரைட்டரே!
<உங்கள் அறையின் கதவையும் ஜன்னல்களையும் சாத்திக் கொண்டு தனியாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.>
நீர் எங்களோடு விவாதித்தால்தான் ஆயிற்று. விளக்கம் கொடு கவிதையை கதைகளை எல்லாம் இப்படிக் குதறுகிறாயே! விளக்கம் கொடு விளக்கம் கொடு என்கிறார்கள். வாசிப்பு என்பது அனுபவம் என்கிறார்கள். அனுபவத்தை ஆராயக் கூடாது அனுபவிக்க வேண்டும் என்கிறார்கள். இதை எல்லோருமே வாழ்வில் தாண்டிவந்த பிறிதொரு அனுபவத்தை வைத்தே விளக்க முடியும் எனத் தோன்றுகிறது.
கவிதை படிப்பது போலவே,
கை அடிப்பது என்ற கிளர்ச்சியுடன் கண்ணை மூடிக் கொண்டீர்கள். கையை எடுத்தீர்கள். வாகாய் பிடித்தீர்கள். அசைக்கத் தொடங்கினீர்கள். விறைத்தது தெரிந்தது. ஆஹா பிரமாதம், என்ன ஒரு வீர்யம். ஆனால் மனம் ஏன் சூடாகாமல் குளிர்ந்தே கிடக்கிறது? வேகம் போதவில்லையோ? அப்போதுதான் உன்னத மகிழ்வோ எனறு, வேகம் கூட்டினீர்கள். அப்படியும் உங்களுக்கு ஆனந்தமே வரவில்லை. ஆனால் உச்சகட்ட அனுபவிப்பின் ஒலி மட்டும் வரத்தொடங்கியது. என்னடா இது எனக் கண்திறந்து பார்த்தால்தான் தெரிகிறது உங்கள் கையில் பிடித்திருப்பது அடுத்தவனுடையது என்று.
அனுபவித்தே தீருவேன் என்று முன்-தீர்மானித்த பரவச நிலையுடன், கர மைதுனம் என்றில்லை கலை இலக்கியம் சினிமா ஓவியம் என எதையுமே அணுகாதீர்கள். உங்களின் கற்பித ஆனந்தத்தை அந்தப் படைப்பில் ஏற்றி அதில் இல்லாததையும் அனுபவிக்க பேராசைப்பட்டீர்களேயானால், படைத்தவனுக்கு பரமானந்தம்தான்! உங்களுக்கு?
அடித்துக் கொள்வதற்கும் அடித்து விடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை என்றேனும் விளக்கிவிட வேண்டும் என என் மனம் கிடந்து அடித்துக் கொண்டதன் விளைவுதான் இந்தப் பதிவு.
இனி உங்கள் கை எங்கிருக்க வேண்டும் என்பது உங்கள் தீர்மானம்.