19 March 2011

விமர்சனம் - ராஜமார்த்தாண்டன்



விமர்சனம் - ராஜமார்த்தாண்டன்

எழுது எழுது என்றாய்
எழுதினேன்.
உன் மீசையின் கம்பீரத்தைப்
போற்றவில்லை என்று ஆத்திரம் கொள்கிறாய்
மீசையின் வரலாறு தெரியுமா? (அறிவாயா?)
மீசையைப்பற்றி அந்த ஆங்கிலக் கவிஞன்
எழுதிய சர்ரியலிசக் கவிதை படித்திருக்கிறாயா?
கேள்விகளை அடுக்குகிறாய்
நண்பனே!
உன் கற்பனை மீசையைத் திருகி
நீ கொள்ளும் பரவசம்
எவ்விதம் நானறியவியலும்
எங்ஙனம் அது குறித்து எழுதுவேன்?

(கொல்லிப்பாவை இதழ் 20 - ஜூன் 1988)

வயித்தெரிச்சல் கும்பல் என்று ஒரு பிராண்ட் நேம் கொடுத்திருக்கும் நண்பர்களுக்கு நன்றி.

நன்றி: கொல்லிப்பாவை இதழ் தொகுப்பு - மருதா பதிப்பகம்
கிடைக்குமிடங்கள்:
புக்லேண்ட்
டிஸ்கவரி புக் பேலஸ்