27 March 2011

பெயர் மொழிபெயர் மொழியைப் பெயர்த்துவிடு!

தயவு செய்து முதலில் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படியுங்கள் ANTON CHECKHOV - The Wife and Otther Stories (Translated by CONSTANCE GARNETT புகழ்பெற்ற ஆங்கில மொழிபெயர்ப்பாளர்) இந்த புத்தகத்தின் கடைசிக்கதைதான் THE LOTTERY TICKET

பிறகு எழுத்தாளர் எஸ்.ஷங்கர நாராயணனின் மொழிபெயர்ப்பு 
அதற்குப் பிறகு பதிவர் தீபா அவர்களின் மொழிபெயர்ப்பு

***************
//IVAN DMITRITCH, a middle-class man who lived with his family on an income of twelve hundred a year and was very well satisfied with his lot, sat down on the sofa after supper and began reading the newspaper.//

என்கிற தொடக்க வரியை எஸ்.ஷங்கர நாராயனன் கீழ்க்கண்டவாறு மொழிபெயர்த்திருக்கிறார்.

<இவான் டிமிட்ரிச் கிடைக்கிற சம்பளமே யதேஷ்டம் என வாழ்கிற நடுத்தரன். இரவு உணவை முடித்துக் கொண்டு செய்தித்தாளை வாசிக்க சோபாவில் உட்கார்ந்தான்.>

<a middle-class man> நடுத்தரன் (சுஜாதா ஸ்டைலா)

//an income of twelve hundred a year //

மொழிபெயர்ப்பில் இது எங்கு போயிற்று? இது எதற்கு அநாவசியம் என்று வெட்டி எறிந்து விட்டாரா மிஸ்டர் மொழிபெயர்ப்பு? 1200 என்பது ஏன் குறிக்கப்படுகிறது. கதையின் மைய்ய விஷயமான லாட்டரியில் விழுவதாய்க் கற்பனை செய்யப்படும் தொகை எவ்வளவு <seventy-five thousand> வருடம் முழுக்க உழைத்தால் பெறுவது வெறும் 1200 இருப்பினும் அவன் நிறைவாகவே இருப்பவன். ஆனால் லாட்டரிச்சீட்டு என்கிற சைத்தான் அவனையும் ஆட்டிப் படைக்கிறது.

நுட்பங்களை அடையாளம் கண்டு நுண்ணுணர்வுடன் படிக்கவே தெரியாதவர்கள் மொழிபெயர்க்கிறேன் என்று கிளம்புவது டான்க்விக்ஸாட் போருக்குப் புறப்படுவதற்கு இணையானது.


//very well satisfied with his lot// கிடைக்கிற சம்பளமே யதேஷ்டம் என வாழ்கிற - என்று மொழிபெயர்க்கிறார்.


(நிறைவடைபவன் நிறைவுருபவன் என்பது நிறைவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும், சமநிலையைக் குறிக்கும் சொல். யதேஷ்டம் என்பது எக்கச்சக்கம் என்பதற்கு இணையான வடசொல். 

1200ஏ எக்கச்சக்கம் / யதேஷ்டம் என்கிற நினைப்புள்ளவன் கிட்டத்தட்ட துறவு நிலை எய்தியவன். அவன் ஒரு லாட்டரிச்சீடிற்குத் தடுமாறுவானா?

**********
இது பதிவர் தீபா அவர்களின் மொழிபெயர்ப்பு.


//IVAN DMITRITCH, a middle-class man who lived with his family on an income of twelve hundred a year and was very well satisfied with his lot, sat down on the sofa after supper and began reading the newspaper.//

<இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு சோஃபாவில் வந்தமர்ந்த ஐவன் திமித்ரி அன்றைய நாளிதழைப் புரட்ட ஆரம்பித்தான்.

ந‌டுத்தர‌வ‌ர்க்க‌த்தைச் சேர்ந்த‌ ஐவன் ஆண்டுக்கு ஆயிர‌த்து இருநூறு ரூபிள் ச‌ம்ப‌ள‌த்துட‌ன் திருப்திக‌ரமாக வாழ்க்கை நடத்தி வருபவன்.

"இன்னிக்கு நான் பேப்பர் படிக்கவே மறந்துட்டேன்" என்றவாறே அங்கு வந்தாள் அவனது மனைவி. "பரிசுச் சீட்டு முடிவுகள் வந்திருக்கா பாரு">

கதையை, செகாவ் எப்படித் தொடங்கினால் எனக்கென்ன? நான் எப்படித் தொடங்குவது சரி என நினைக்கிறேனோ அப்படித்தான் மொழிபெயர்ப்பேன் என்று சொல்ல ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு உரிமை உண்டா?

தமிழாக்கம் என்கிற வார்த்தை போட்டுவிட்டதால் சொந்தமாய் ஆக்கிக்கொள்ள வார்த்துக்கொள்ள இது என்ன ‘தாயார் தோசைமாவா’?

எந்த ஒரு சொற்றொடரிலும் அழுத்தம் எதற்கு எந்த விஷயத்திற்குக் கொடுக்கப்படுகிறது என்பது முக்கியம் இல்லையா?

இந்தக் கதை எதைப் பற்றியது? கதை மாந்தர்கள் யார்? நடுத்தர வர்க்க மனிதன் ஒருவனின் - தன் சம்பளத்தில் நிறைவுடன் வாழும் ஒருவனின் - தடுமாற்றம் - உள்மன விழைவின் கற்பனை விரிப்பு - லாட்டரிச் சீட்டின் வெறும் வரிசையே - முழு எண் அல்ல - அவனது / அவர்களது சமநிலையைக் குலைக்கப் போதுமானதாக இருக்கிறது எனச் சொல்வதால் அல்லவா அவன் ஆண்டன் செகாவ். இலக்கியத்தை ஆண்டுகொண்டிருக்கும் செகாவ்

ஆகவேதான் கதையின் ஆதாரமான நிறைவை முதலில் வைக்கிறார் மூல ஆசிரியர்.

<Ivan Dmitritch, a middle-class man who lived with his family on an income of twelve hundred a year and was very well satisfied with his lot, >

மொழிபெயர்ப்பாளருக்கோ, சோறு தின்றுவிட்டு சோபாவில் உட்காருவதே முக்கியமாய்ப் போய்விட்டது. ஆகவே மொழிபெயர்ப்பில் முதல் வாக்கியம்

<இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு சோஃபாவில் வந்தமர்ந்த ஐவன் திமித்ரி அன்றைய நாளிதழைப் புரட்ட ஆரம்பித்தான்.>

என்று ஆகிவிட்டது. 

ஆனால் இதே மொழிபெயர்ப்பாளர் அடுத்து எழுதுகையில், எழுத்தாளரைப் போல் அல்லாது  எவ்வளவு உண்மையுடன் மொழிபெயர்க்கிறார் எனப் பாருங்கள்

<Ivan Dmitritch, a middle-class man who lived with his family on an income of twelve hundred a year and was very well satisfied with his lot, >

<ந‌டுத்தர‌வ‌ர்க்க‌த்தைச் சேர்ந்த‌ ஐவன் ஆண்டுக்கு ஆயிர‌த்து இருநூறு ரூபிள் ச‌ம்ப‌ள‌த்துட‌ன் திருப்திக‌ரமாக வாழ்க்கை நடத்தி வருபவன்.>

ஆனால் அடுத்து இவரே இப்படிச் செய்கிறார், 


//ரூபிள்// இதை செகாவ் ரஷ்ய மொழியின் மூலத்தில் எழுதி, கான்ஸ்டன்ஸ் கார்னட் என்கிற புகழ்பெற்ற ரஷ்ய-ஆங்கில மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்க்கத் தவறி விட்டாரோ?

//twelve hundred// என்பது அமெரிக்கப் பிரயோகம். நாம் ஆயிரத்து இருநூறு என்பதை அவர்கள் நூறுகளின் எண்ணிக்கையிலேயே கூறுவது வழக்கம்.

மூல ரஷ்யனில் செகாவால் ரூபிள் என்று எழுதப்பட்டு, பதிவர் தீபா அவர்கள் அதை மீட்டெடுத்து இருந்தால் மிக்க நன்றி. சம்பளம் ஆங்கிலத்தில் எழுதப்படாவிட்டாலும் தமிழில் முழுமை சேர்க்கிறது.

“I forgot to look at the newspaper today,” his wife said to him as she cleared the table. “Look and see whether the list of drawings is there.”
“Yes, it is,” said Ivan Dmitritch; “but hasn’t your ticket lapsed?”
“No; I took the interest on Tuesday.”

ஆனால் துரதிருஷ்டவசமாக அடுத்த வரியிலேயே அபத்தம்.

<"இன்னிக்கு நான் பேப்பர் படிக்கவே மறந்துட்டேன்" என்றவாறே அங்கு வந்தாள் அவனது மனைவி. "பரிசுச் சீட்டு முடிவுகள் வந்திருக்கா பாரு"

"ஆமா, வந்திருக்கு. ஆனா உன் சீட்டு காலாவதியாயிருக்குமே?"

"இல்ல, செவ்வாய்க்கிழமை தான் வாங்கினேன்.">

இது தீபா என்கிற பதிவரின் பெண்ணின் மொழிபெயர்ப்பு. 

பேப்பர் பார்க்க மறந்துவிட்டேன் - என்பதில் உள்ள மேம்போக்குத்தன்மை நடுத்தர வர்க்கத்தினுடையது. (கதையின் தொடக்கத்தில் அவனை நடுத்தரவர்க்கம் என செகாவ் குறிப்பிடுவதன் முக்கியத்துவம் இப்போது புரிகிறதா?) மொழிபெயர்ப்பாளரே! செகாவ் எழுதிய கதையைப் பார்த்தீர்களா படித்தீர்களா எனக் கேட்கத் தோன்றுகிறது.

<மறந்துட்டேன்> இவான் திமித்ரி ஐயாரா அய்யங்காரா? அவாத்துல இன்னக்கி என்ன மோர்க்கொழம்பா கொத்ஸா? சுட்டப்ளாம் போட்டாளோ? வத்தக் கொழம்பு வெக்கலியோ? சாத்தமுது விட்டாளோ? 

விட்டா மறந்துடுத்துன்னு கூட மொழிபெயர்த்துடுவேள் போல இருக்கே!

************
இதையே ஆண் எழுத்தாளரான எஸ்.ஷங்கரநாரயணன் என்கிற எழுத்தாளர்

<மேஜையை சுத்தம் செய்துகொண்டே பெண்டாட்டி 'இன்னிக்குப் பேப்பரைப் பார்க்கவே விட்டுட்டது' என்றாள். 'குலுக்கல் முடிவு வந்திருக்கா பாருங்க.'

'ஆமா, இருக்கு,' என்றான் டிமிட்ரிச். 'ஆனா உன் சீட்டு காலாவதியாவல்லியா?'

'இல்லல்ல, வட்டியெடுக்க நான் செவ்வாயன்னிக்குதானே போயிருந்தேன்...'>

ஆனால் அங்கிலத்தில்

“I forgot to look at the newspaper today,” his wife said to him as she cleared the table. “Look and see whether the list of drawings is there.”
“Yes, it is,” said Ivan Dmitritch; “but hasn’t your ticket lapsed?”
“No; I took the interest on Tuesday.”

<'இன்னிக்குப் பேப்பரைப் பார்க்கவே விட்டுட்டது'> ஐயா எழுத்தாளரே! இது எங்கே உள்ளது? மிகச் சாதாரனமாக அன்றாடம் தமிழில் உபயோகிக்கிற வார்த்தை பிரயோகம் கூடவா பிடிபடவில்லை. இன்று பேப்பர்/நாளிதழ் பார்க்க மறந்து விட்டேன் என்று இருப்பதை எழுதினால் தெறமை தெரியாமல் போய்விடுமா? 

பதிவர் தீபாவின் மொழிபெயர்ப்பில் டேபிளேக் காணாமல் போய்விட்டது. போதும் போதாததற்கு, மனைவி டிவி சீரியல் போல ஃப்ரேமுக்குள் வருகிறாள் 

<என்றவாறே அங்கு வந்தாள் அவனது மனைவி.> மொழிபெயர்ப்பாளரைப் போலவே திமித்ரியின் மனைவியும் சென்ற நூற்றாண்டின் முதல் பெண்ணியவாதி போலும், கணவனை //Look// - <பாரு> என விளிக்கிறாள்.

எழுத்தாளரிடமோ மேஜை சரியாய் பிடிபட்டுவிடுகிறது கூடவே பழமைவாதி பல்லிளிக்கிறார்.

<மேஜையை சுத்தம் செய்துகொண்டே பெண்டாட்டி


பதிவர் பெண் என்பதாலோ என்னவோ //wife// - //மனைவி// எவ்வளவு இயல்பாக தமிழுக்கு வருகிறது.

**********
எழுத்தாளர் எஸ்.ஷங்கர நாராயணனின் எழுத்தை ஆள்பவர்தானா?

Ivan Dmitritch; "but hasn't your ticket lapsed?"
"No; I took the interest on Tuesday."

<டிமிட்ரிச். 'ஆனா உன் சீட்டு காலாவதியாவல்லியா?'

'இல்லல்ல, வட்டியெடுக்க நான் செவ்வாயன்னிக்குதானே போயிருந்தேன்...'> 

என்று மொழிபெயர்க்கிறார்.

No No என்பதுதான் <இல்லல்ல> இது பதற்றத்தின் வெளிப்பாடு

செகாவை மொழிபெயர்க்கிறேன் பேர்வழி என்று இது என்ன சொந்த செருகல். 


எழுத்தாளர் எஸ்.ஷங்கர நாராயணனின் நகைச்சுவை பேரொளிவிட்டுப் பிரகாஸிக்கும் இடம் இதுதான். அக்‌ஷர லக்‌ஷம் பெரும் மொழிபெயர்ப்பு.

Ivan Dmitritch; "but hasn't your ticket lapsed?"
"No; I took the interest on Tuesday."

இதன் பொருள் தமிழில் சாதாரணமாக எழுதினால் இப்படித்தானே வரும்

உனது பரிசுச்சீட்டின் கெடு (கடைசி நாள்) இன்னும் முடிந்துவிடவில்லையா?
இல்லை நான் ஆர்வம் கொண்டதே செவ்வாய்க்கிழமைதானே 

ஆனால் நம் கிரியேட்டிவ் எழுத்தாளர் எஸ்.ஷங்கர நாராயணன் எப்படி மொழிபெயர்க்கிறார் என்று பாருங்கள்.

<டிமிட்ரிச். 'ஆனா உன் சீட்டு காலாவதியாவல்லியா?'

'இல்லல்ல, வட்டியெடுக்க நான் செவ்வாயன்னிக்குதானே போயிருந்தேன்...'>

interest என்பதை வட்டி எனப் புரிந்து கொண்டு அடகு மீட்க போயேவிட்டார். சரி அடகுவைக்கப்பட்டது என்னென்ன? வேறென்ன எழுத்தாளரின் மொழியறிவும் பொதுப் புத்தியும்தான்.


ஆனால் ஒன்றைப் பாராட்டியே தீர வேண்டும்.

//“Look and see whether the list of drawings is there.”// என்பதை ”ஓவியங்களின் பட்டியல்” என்று மொழிபெயர்க்காமல் விட்டமைக்காகக் கண்டிப்பாய்ப் பாராட்டவே வேண்டும்.

*************
எழுத்தாளருக்குப் பதிவர் எவ்வளவோ பரவாயில்லை. ஆனால் கூர்த்த கவனத்துடன் படிக்கவும் கடினமாக உழைக்கவும் நன்கு ஆங்கிலமும் தமிழும் இலக்கியமும் ஊன்றி அறிந்து கொள்ளவும் ஆழ்ந்து முயல வேண்டும். மேலும் இவை நன்கு தெரிந்த ஓரிருவரிடமேனும் கொடுத்து இரு மொழிபெயர்ப்புக்களையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். 


இப்படியெல்லாம் செய்ய வேண்டும் வேண்டும் என்பதைப் பணிவோடு ஒரு விண்ணப்பமாகவே தெரிவித்துக் கொள்கிறேன். பின்புலத்தில் வினவு என்கிற அஞ்சுகண்ணன் இருக்கும் போது அசால்டாய் விமர்சித்துவிட முடியுமா? நோக்கம் இலக்கியத்தைக் காப்பாற்றுவதாகவே இருந்தாலும்  வேண்டுகோளாகத்தானே வைக்க முடியும்.


***********
எழுத்தாளரின் மொழி பெயர்ப்பில் இன்னும் என்னென்ன பொக்கிஷங்கள் இருக்கின்றனவோ எனக்குத் தெரியாது.  வட்டியைப் படித்ததும் அடி வயிற்றிலிருந்து புரண்டு வந்த சிரிப்பால் கண்களில் நீர் கோர்த்து படிக்கவிடாமல் செய்ததில் இந்த மொழிபெயர்ப்பை வாசிப்பதை இத்துடன் நிறுத்திக் கொண்டேன்.

இது போன்ற இன்னுமொரு அபத்தம் ‘உலக இலக்கியத்தில்’ வலையேறினால் இந்த ஆட்டத்தில் நான் இல்லை என்று மலையேற வேண்டி இருக்கும். ராம்பிரசாத் மன்னிக்கவும்.