06 April 2011

சுகுமாரன் என்னைக் கிண்டலடிக்கிறானோ! - அஞ்சலில் வந்த கவிதை

fromsukumaran narayanan 
toவிமலாதித்த மாமல்லன்
dateWed, Apr 6, 2011 at 10:01 AM
mailed-bygmail.com
signed-bygmail.com

hide details 10:01 AM (2 hours ago) 
-- 
SUKUMARAN

'Madhyamavati'
MGRA F 53 Anayara
Thiruvananthapuram 695029
Phone 98950 99248/ 9489294023/  0471 2741287

வரலாற்று முக்கியத்துவமுள்ள ஒரு சந்திப்பு.docவரலாற்று முக்கியத்துவமுள்ள ஒரு சந்திப்பு.doc
28K   View   Download  

வரலாற்று முக்கியத்துவமுள்ள ஒரு சந்திப்பு
@ சுகுமாரன்

நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று
மதுரை விடுதியறையில் 
மூட்டைப் பூச்சியைச் சந்தித்தேன்.


சலவை செய்த படுக்கைவிரிப்பின் 
வெண்மையில் தெரிந்த அரக்குப் புள்ளியை 
பொட்டா உதிரச் சொட்டா  என்று
விரலால் தொட்டுச் சோதித்தேன்
அனிச்சையாக விரலையும் முகர்ந்தேன்
வரலாற்றைக் கடந்த தற்காப்பு வாடை

தொடுதலுக்கும் முகர்தலுக்கும் இடையில்
அரக்குப் புள்ளி மாயமாக மறைந்ததும் 
நினைவு வந்தது:
மூட்டைப் பூச்சியையும் வரலாற்றையும்
பெருவிரலுக்கும் சுட்டுவிரலுக்கும் இடையில்
இறுகப் பிடிக்க வேண்டும்

'சரித்திரப் பிரக்ஞை கம்மி உனக்கு
புதுமைப் பித்தனை மீண்டும் படி'
வெண்விரிப்பில் வேகமாய் ஊர்ந்து 
மூட்டை உபதேசம் மறைந்தது  

தலையணையின் தையல் இடுக்குகள்
மெத்தையின் விளிம்பு மடிப்புகள்
கட்டில் பலகையின் ஈசான திசைகள் 
போர்வைச் சுருக்கங்கள்
எல்லாவற்றையும் சோதித்துச் சோதித்தே 
நழுவியது இரவு 

வீடு திரும்பிய மறுநாள்
பற்பசை, காப்பி, சிற்றுண்டி
எல்லாவற்றுக்கும் ஒரே மணம்
மூட்டையின் மொச்சை மணம்

பயணப் பையில் 
திணித்த ஒவ்வொன்றையும் 
புரட்டி உதறி உலுக்கிய பிறகும்
மூட்டையின் சுவடு தென்படவில்லை

குனிந்த கையறுநிலைப் பார்வையில்
வெண்நிறத் தரையில் ஊர்ந்து
அரக்குச் சொட்டு நகர்ந்தது

விருதுநகர், கோவில்பட்டி, நாகர்கோவில் மார்க்கம் 
இலவசப் பயணம் செய்து 
திருவனந்தபுரம் அடைந்த 
சாகச நோக்கை வியந்து
ஆள் காட்டி விரலையும் சுட்டு விரலையும்
குறடாக இணைக்கும் முன்பே
எங்கோ ஒளிந்தது உபதேச மூட்டை

'மூட்டைப் பூச்சியானதால் 
ரத்தம் குடிக்கிறோமே தவிர
ரத்தம் குடிப்பற்காய் 
மூட்டையாகப் பிறக்கவில்லை'

வீடு முழுக்க
சரித்திராதீதத் தற்காப்பு வாடை
எந்தக் கிருமி நாசினியால் விரல்களைக் கழுவ?

*******************
நவம்பர்-டிசம்பர் 2010 வாக்கில் எழுதியதை வேலைமெனக்கெட்டு இப்போது ஏன் அனுப்புகிறான்?

எப்போதோ எழுதிய பழைய கதைகள்தானே மாமல்லனுடையவை. அவற்றுக்கு நீங்கள் ஏன் புதிதாக முன்னுரை எழுத வேண்டும்? போதும் போதாததற்கு விபத்தின் வலியுடன் பயணம் செய்து பேசவே கஷ்டப்படும் நிலையிலும் இத்துனைத் தடைகளையும் மீறி ஏன் மேடையேற வேண்டும்?

இயங்க மறுத்திருந்த காலங்களிலும் விடாப்பிடியாகப் பல கட்டுரைகளில், நினைவுகூர்ந்து கொண்டே இருந்தவன் இப்படி ஒரு கவிதையை அனுப்பி வைக்கிறான். பஸ் விவாதம் பற்றி நேற்று ஃபோனில் பேசியதற்கு எதிர்வினையோ இது?

வெட்டிப்பயலே யாருடன் விவாதிப்பதென்று உனக்கு விஸ்தையில்லையா என சுகுமாரன் கிண்டலடிக்கிறானோ!

கிடக்கிறான் சுகுமாரன் என்கிற கெளரவவாதி நம் கடன் பணி செய்து கிடப்பதே!