Meenakshipuram Deivakumar Muthukumaraswamy April 12 at 11:51am Report
அன்புள்ள மாமல்லன்:
பேயோன் என்ற பெயரில் எழுதுவது நானில்லை என்று உங்களுக்கு உறுதிபட தெரிந்துவிட்டதாக நண்பர் கடற்கரை மூலம் அறிந்து பெருமூச்செரிந்தேன்.
தயவுசெய்து உங்கள் தளத்தில் ‘எம்.டி.எம் பேயோனில்லை’ என்றொரு பிழைத்திருத்த இடுகையை பதிவேற்றிவிடுங்கள். பாவம் யார் பெற்ற பிள்ளையோ அவர் எழுதுவதற்கெல்லாம் எனக்கு பாராட்டு குவிந்தவண்ணமிருக்கிறது. போதாக்குறைக்கு, ஃபிரஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி, Beat movement, மொஸாம்பிக், மொரொக்கொ போராட்டங்கள், பொலிவிய புரட்சி, இத்தியாதி இன்னபிற என நான் பங்கேற்கும் இடங்களிலெல்லாம் பேயோனும் பங்கேற்பதாக அறிகிறேன். நாங்கள் இந்த பொது இடங்களில் சந்திக்க நேர்ந்தால் ‘நான் நீயில்லை’ என்று முத்துசாமி நாடகம் போல் பேசி எப்படி புரட்சிகளை கை நழுவவிடுவோமென்று சற்றே யோசித்துப் பாருங்கள். இது தவிர, உலகப்புரட்சிகளின் நாட்காட்டியை விளையாட்டு விமர்சனங்களின் பின்னூட்டங்களாக வாசிப்பது என்ற என் திட்டத்திற்கு எவ்வளவு குந்தகம் ஏற்பட்டிருக்கிறது என்பதையும் நீங்கள் அறிவீர்களாக. நிற்க.நான் சிவனே என்றிருக்கும் சாந்த சொரூப சக்குபாய். நன்றி.
**********
எல்லாம் சரி.
அது என்ன கடைசியில் சக்குபாய். ”நான் சிவனே என்றிருக்கும் சாந்த சொரூப சக்குபாய்.”
கணையாழி (1982)
கணையாழி குறுநாவல் போட்டியில் இரண்டாம் பரிசு
அறியாத முகங்கள்
அனிச்சையான இந்த அமுக்குக் குசும்பு எதையும் அடையாளம் காட்டுகிறதா?
எம்டிஎம்முக்கு ஒரு விண்ணப்பம். சில்வியா என்கிற பூர்வ ஜென்ம பெயரில் தாங்கள் எழுதிய ஒரு நெடுங்கதை / குறுநாவலை (மன்னிக்கவும், தலைப்பு நினைவில்லை) ஸ்கேன் செய்து எனக்கு அனுப்பி வைக்க முடியுமா?
நா.விச்வநாதன் என்கிற பாதசாரியின் ‘காசி’ போலவே அந்தக் காலத்தில் என்னை வயிறெரிய வைத்த இன்னொரு கதை.
அழியாச்சுடர்களில் கட்டாயம் இருக்க வேண்டிய கதை அது.