மரியாதைக்குரிய அற்பவாதி மாமல்லனுக்கு,
இதுதானா உங்க டக்கு? ஐயோ... ஐயோ...
//Monday dawned warm and rainless. Aurelio Escovar, a dentist without a degree, and a very early riser, opened his office at six.//
//மழையற்ற வெம்மையுடன் திங்கள் விடிந்தது. அதிகாலையில் எழும் வழக்கம் கொண்டவரும் பட்டம் பெறாத பல் டாக்டருமான அரேலியோ எஸ்கவார், அன்று காலை ஆறு மணிக்கே தன் அலுவலகத்தைத் திறந்துவிட்டிருந்தார். //
இதில் காலை ஆறு மணி என்றா ஆங்கிலத்தில் இருக்கிறது? ;-)
//He took some false teeth, still mounted in their plaster mold, out of the glass case //
//வார்ப்புத் தாங்கியில் பொறுத்தப்பட்டிருந்த பொய்ப் பற்கள் சிலவற்றை எடுத்து மேசை மேல் வைத்தார். //
இதற்கு தமிழாக்கம் இதுவா? ;-)
எல்லாவற்றையும் விட அடித்து விட்டிருக்கிறார் பாருங்கள்...
The shrill voice of his eleven year-old son interrupted his concentration.
//அவரது ஏழு வயது மகனின் கூக்குரல் அவரது முனைப்பில் குறுக்கிட்டது.//
ஆங்கிலத்தில் மகனின் வயது 11 என்றிருக்கிறது. அது எப்படி தமிழாக்கத்தில் ஏழானது?????!!!!
முதலிரண்டு பத்திக்குள்ளேயே இவ்வளவு மிஸ்டேக். இதில் அடுத்தவரை இது நொட்டை அது சொத்தை என்ற விமர்சனம்...
கஷ்டம்...
முதற்கண் பைத்தியக்காரன் அவர்களுக்கு நன்றி.
பதிவு ஏற்றும் முன்பும், ஏற்றிய பின்பு ஒரு நண்பரிடம் வாசித்துப் பார்த்து உதவி கேட்டும் திருத்தி இருக்கிறேன்.
அதற்கு முன்பாக திரு.பைத்தியக்காரன் அவர்கள் பஸ்ஸ் விட்டிருக்கிறார். எனினும் நன்றி. எனது முதல் மொழிபெயர்ப்பு முயற்சியே விவாதத்திற்கு உட்படுத்தப்படுவது தனிப்பட எனக்கு மாபெரும் உதவியாகும். அதற்காக பைத்தியக்காரனுக்கும் மீண்டும் சிறப்பு நன்றி.
இனி அவரது விமர்சனங்களைப் பார்ப்போம்.
1.இதில் காலை ஆறு மணி என்றா ஆங்கிலத்தில் இருக்கிறது? ;-)
//Monday dawned warm and rainless. Aurelio Escovar, a dentist without a degree, and a very early riser, opened his office at six.//
//மழையற்ற வெம்மையுடன் திங்கள் விடிந்தது. அதிகாலையில் எழும் வழக்கம் கொண்டவரும் பட்டம் பெறாத பல் டாக்டருமான அரேலியோ எஸ்கவார், அன்று காலை ஆறு மணிக்கு தன் அலுவலகத்தைத் திறந்துவிட்டிருந்தார்.//
//அதிகாலையில் எழும் வழக்கம் கொண்டவரும்//
இதற்கு அடுத்து அலுவலகத்தை ஆறுக்குத் திறந்தார் என்று மொட்டையாக ஆங்கில வழக்கு போலவே மொழிபெயர்க்காமல் ’ஆறு’ என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் கொண்ட மொழி தமிழ் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ஆறு மணி என்று எழுதியது தவறா?
இதற்கு அடுத்து அலுவலகத்தை ஆறுக்குத் திறந்தார் என்று மொட்டையாக ஆங்கில வழக்கு போலவே மொழிபெயர்க்காமல் ’ஆறு’ என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் கொண்ட மொழி தமிழ் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ஆறு மணி என்று எழுதியது தவறா?
இதற்குப் பின்னால் வரும்,
//After eight he stopped for a while to look at the sky through the window, and he saw two pensive buzzards who were drying themselves in the sun on the ridgepole of the house next door. He went on working with the idea that before lunch it would rain again.//
//எட்டு மணிக்கு நிறுத்திவிட்டு, ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்தார். அப்போது பக்கத்துவீட்டுக் கூரையின் மேல் யோசனையிலாழ்ந்த இரண்டு பருந்துகள் வெயிலாற்றிக் கொண்டிருப்பதைக் கண்டார். மதியத்திற்கு முன் மழைபெய்யும் என்கிற எண்ணத்துடன் தம் வேலையைத் தொடர்ந்தார்.//
//மதியத்திற்கு முன் மழைபெய்யும்//
என்றால் அந்த அலுவலகம் திறக்கப்பட்ட ”ஆறு” என்பது காலை ஆறுமணியா இல்லையா? six / eight என்பவற்றை ஆறு மணி / எட்டு மணி என்பது கூடத் தவறா?
2.//He took some false teeth, still mounted in their plaster mold, out of the glass case //
//வார்ப்புத் தாங்கியில் பொறுத்தப்பட்டிருந்த பொய்ப் பற்கள் சிலவற்றை எடுத்து மேசை மேல் வைத்தார். //
இதற்கு தமிழாக்கம் இதுவா? ;-)
என்று கேட்டிருக்கிறிர்கள்.
இதன் நீண்ட கடினமான ஒற்றை வரியின் முழுவடிவம் இதுதான்
//He took some false teeth, still mounted in their plaster mold, out of the glass case and put on the table a fistful of instruments which he arranged in size order, as if they were on display.//
இதனை
//வார்ப்பில் பொறுத்தப்பட்டிருந்த பொய்ப் பற்கள் சிலவற்றைக் கண்ணாடி அலமாரியிலிருந்து எடுத்து மேசை மேல் வைத்தார். சில கருவிகளையும் அவற்றின் அளவுகளுக்கேற்ப ஒழுங்குபடுத்தி காட்சிக்கு வைப்பதைப்போல் வைத்தார்.//
இப்படி இரண்டு வாக்கியங்களாக மொழிபெயர்த்திருப்பது தவறா?
”எது சரி” என்று அறிந்து சொல்லப்பட்ட விமர்சனம் இது எனில், தயவு செய்து சரியாக எப்படி இருக்கவேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டவும். என்னைப்போல் பலரை அது செழுமைப்படுத்தக் கூடும்.
3.எல்லாவற்றையும் விட அடித்து விட்டிருக்கிறார் பாருங்கள்...
The shrill voice of his eleven year-old son interrupted his concentration.
//அவரது ஏழு வயது மகனின் கூக்குரல் அவரது முனைப்பில் குறுக்கிட்டது.//
ஆங்கிலத்தில் மகனின் வயது 11 என்றிருக்கிறது. அது எப்படி தமிழாக்கத்தில் ஏழானது?????!!!!
இது எனது கவனக் குறைவுதான் நீங்கள் சுட்டிய பிறகே இதைத்திருத்தி இருக்கிறேன். உங்களுக்கு என் சிரம் தழ்ந்த நன்றி.
இதே போல் இரண்டு பாராக்களோடு நிறுத்திக் கொள்ளாமல், மிச்சமிருக்கும் பிழைகளையும் எப்படி மொழிபெயர்ப்பது சிறப்பு, என்பதையும் சுட்டிக் காட்டினால் (உங்களின் காழ்ப்புக் காமாலைக் கண்களால் தோன்றும் பிழைகளையும் சேர்த்து) இரண்டு பேரின் டக்கும் என்ன என்று எல்லோருக்கும் தெரியவர, எல்லோரும் இயங்கியல் தத்துவத்தின்படி முன்னேற உபயோகமாய் இருக்கும் இல்லையா?
சீக்கிரம் ஆவன செய்யுங்கள்.