இது ஜெயமோகனின் அசோகவனமா?
ஏம்பா இந்தப்படம் ஸொம்மா டமாசுதானே! இல்லே மெய்யாலும்தான்னு சொல்டாதே! அடி வயிறு இப்பவே கலக்குது!
நண்பர்களே,
அசோகவனம் என்ற பெயரில் ஜெ ஒரு புத்தகம் எழுதிவருவது அனைவரும் அறிந்ததே. அதன் பக்கங்கள் மிக அதிகமாக இருப்பதால், அதைப் புத்தகமாக்கும் வசதி இந்தியாவில் இல்லை என்பதால், அதை அமெரிக்காவில் அச்சிடும் பணி நடந்துகொண்டு இருக்கிறது. முதல் பிரதி அச்சிட்டு, அதைப் புரட்டிப்பார்க்கும் அச்சகத்தாரின் முகத்தில் தெரியும் பீதி, அசோகவனம் புத்தகத்தின் மீது நம் ஆவலை அதிகமாக்குகிறது.
<அசோகவனம் என்ற பெயரில் ஜெ ஒரு புத்தகம் எழுதிவருவது அனைவரும் அறிந்ததே.>
அது புக்குதானா? நாவல் இல்லையா? எய்த்தாளர்னா நாவல்தானே எய்துவாரு? நாவல்தான புக்காவும்? நாவ்லா எய்தி புக்கா போட்டா டைம் வேஷ்டுன்னு இப்பல்லாம் நேரா புக்காவே எய்த ஆரம்ஷ்டாரா?
<ஜெ ஒரு புத்தகம் எழுதிவருவது>
எய்திகிட்டு இருக்கஸொல்வோ பிரிண்ட்டுக்குப் போயிட்சா.....மொத்தமும் எய்தி முட்ச்சா வேலைக்கி ஆள் போட்டுத்தான் பட்சாவணுமா?
<அதன் பக்கங்கள் மிக அதிகமாக இருப்பதால்,>
பட்சிஸொல்லொ வேலைக்கி எடுக்குற ஆளு அடியாள் டைப்புலப் புடிக்கணுமா?
<அதைப் புத்தகமாக்கும் வசதி இந்தியாவில் இல்லை என்பதால்,>
ஈஸ்ட்டுக்கு எம்மாம் பெரிய அவ்மானம்? கெழக்கோட தத்துவம் கெழக்கோட சிந்தனை அப்பிடினெல்லாம் ஸொம்மா எய்திகிட்டே இர்க்கற்தால எய்தற எல்லாத்தியிம் கெய்க்குக்கே குட்துற மிடியிமா?
76 சுஜாதாவை, பொட்டிக்கடை டீக்கடைனு சேஞ்சில்லே, அதுக்கு பர்த்தியா புக்கு வெச்சிக்கோன்னு கல்விக்கண் தெறந்து விக்க ஆரம்பிச்சா நாஸ்டாக்ல நாஷ்டா துண்ணுக்கலாம். அத்த வுட்டு, நாலி பேரு தூக்கறாப்புல ஒத்த புக்கப் போட்டு, இத்த வாங்கினா ரெண்டு கண்ணாடி இலவசம்னு (படிக்க ஆரம்பிக்கைல போட்க்குற கண்ணாடி பவரு, புக்கப் பட்ச்சி முடிக்கஸொல்லொ இங்ரீஸ் ஆயிருக்கும்ல அதான் அட்வான்ஸா ரெண்டு கண்ணாடி - டையப்பு எந்த நேத்த்ராலயா?) அதுக்கு வேற ஆளப் புடிக்க கெழக்கென்னா கிறுக்குத்தன்மா எளக்கியக் கைமுறுக்குப் பெட்டிக்கடையா நட்த்துது?.
<வசதி இந்தியாவில் இல்லை> வசதின்றத்து ‘கிலமா’ தான?
ம். இதுக்கோஸரமாச்சியும் ஈளப்போராட்டம் இன்னமும் நட்ந்துகிணு இர்ந்துர்க்கலாம். அதான் இந்த ஏப்ரெல் மே வந்தாலே அத்த நென்ச்சாலே பெஜாரா ஆயிட்து போல.
ம் நம்ம வாஸகெ விமர்ஸகென்னு எத்தினிப்பேரு அஸோக்வன்த்த படிகறத்துக்கு மின்னாலயே அநியாயமா செத்துப் பூட்டான் கொறஞ்செது பட்ஷ்டு போயிருக்கலாம். அந்த மெர்ஸ்ல்லியே பெலூன் கிலூன் வுட்டுக் கேக்கு வெட்டி விஷ்ணுபொறத்துலக் கொண்டாட்ற பொற்ந்தநாள் கூட நிற்திட்டாராம்.
<முதல் பிரதி அச்சிட்டு> இன்னியும் எய்திகிணுதானக் க்றாரு! மொதொ பாகத்தோட மொதொ பிரெதியா இது.
<அதைப் புரட்டிப்பார்க்கும் அச்சகத்தாரின் முகத்தில் தெரியும் பீதி> அச்சகத்தான் மொவத்துலையே பீதினா வாசகனுக்கு பேதியா? அமெரிக்க வெள்ளக்காரனே டர்ருனா இந்தியக் கருப்பன் டாரா!
<அசோகவனம் புத்தகத்தின் மீது நம் ஆவலை அதிகமாக்குகிறது.>
அடங்கொ வெளம்பரமா?
<-ராம்>
அட இதான் இந்து நான்மர்ப்பா ஜெய்மோகனோட ஒர்ஜினல் நேமா?
அது செரி இதுவே இங்கேந்துதான் சுட்டதா? அட ஆண்டவா!
நன்றி ஃபேஸ்புக்:
Lathamagan Paramanantham ஒரு காமெடியைக் கூட ஜெமோசார் காப்பிதான் அடிப்பாரா ? #எடுத்துக்குடுத்தல்
அது செரி இதுவே இங்கேந்துதான் சுட்டதா? அட ஆண்டவா!
நன்றி ஃபேஸ்புக்:
Lathamagan Paramanantham ஒரு காமெடியைக் கூட ஜெமோசார் காப்பிதான் அடிப்பாரா ? #எடுத்துக்குடுத்தல்