ஃபேஸ்புக்கில்....
Ravichandran Kandasamy May 23 at 11:22pm
மிக்க நன்றி.
கல்குதிரை வேனிற்கால இதழில், 'கொர்த்தசாரின் புதினங்களில் கலையும், புரட்சியும் 'என்ற பொருளில் மொழிபெயர்ப்பு கட்டுரை வெளியாகியுள்ளது. வாசித்து தங்களின் மேலான கருத்துக்களைக் கூறவும்.
அன்புடன்
ரவிச்சந்திரன்
அன்பான ரவிச்சந்திரன்.
கொர்த்தசாரா? ஆரு? சத்தியமாத் தெரியாது.
அலுவலக வேலை பிடிக்காது கசங்கல். 2003ல்தான் திருச்சியில் இருந்து சென்னை வந்தவனுக்கு ’நெடுநாள் சுழற்சி இடமாற்றல்’ என்கிற பெயரில் திரும்ப ஒரு வெளியூர் தூக்கியடிப்பு. பாண்டிச்சேரிக்கு இடமாற்ற அலைச்சல் குறித்த உளைச்சல். இதற்கு நடுவே மாடன் மோட்சம். அரைகுறையாய் நிற்கும் என் அநேக கதைகள். ரப்பரை கலைக்கும் பென்சில் என்று நாய்க்கு வேலையில்லை நிற்க நேரமில்லை என்பதான வாழ்வில் கொர்த்தசாரை கூகுளில் தேடிப்பார்க்கவும் இப்போது மனம் இல்லை.
என்னைத் தவறாக எண்ணிவிட்டீர்கள். படிப்பறிவே இல்லாத வெட்டிப்பயல். தெரிந்ததை எழுதுகிறேன். எனக்கு நிறையத் தெரியும் என்று நீங்களாக நினைத்துக் கொண்டுவிட்டீர்கள்.
மன்னிக்கவும் நான் பெரிய வாசகனே அல்லன். அப்புறம்தானே படிப்பாளியாக.
இப்படி இருப்பது நிறையா குறையா என்று தெரியாது. இருப்பதும் தோன்றுவதை சொல்வதும் பொய்யில்லை சத்தியம்.