ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - 5 Jun 2011 (edited 5 Jun 2011) - Buzz - Publicஜெமோவிடம் பேசியபோது, மாமல்லனிடம் பேசும்போதெல்லாம் சார் என்றுதான் அழைப்பேன். சாருவிடம் அப்படிச் சொன்னதேயில்லை # அதான் சாரு.
நிஜமாகச் சொல்கிறேன், சாருவிடம் பேசும்போதும் சரி, அவருடைய எழுத்துகளைப் படிக்கும்போதும் சரி, இளைஞர்களுக்கான எழுத்தாளராய் அவர்தான் இருக்கிறார். அவர் எழுத்தில் இருக்கும் துள்ளல் வேறு யார் எழுதுவதிலும் இருப்பதில்லை.
ஜ்யோவ்ராம் சுந்தர் Sundar - Buzz - Public 6/20 (edited 6/20)
தமிழச்சி எழுதியிருப்பதையும் யூ ட்யூபில் இருக்கும் வீடியோவையும் பார்த்துவிடுங்கள்.
சாரு நிவேதிதா என்கிற எழுத்தாளர் ஒரு வாசகியிடம் பொறுக்கித்தனமாக நடந்திருக்கிறார்.
*****
பார்க்கலையே எதிர்பார்க்கலையே - மனதுக்கு நெருக்கம் இவ்ளோ சீக்கிரம் மாயமா மறையும்னு எதிர்பார்க்கலையே!
ஜ்யோவ்ராம் சுந்தர், எச்சி வுட்டேன்னு சொல்லி இருந்திருந்தா ஒரு வேளை இப்படி எல்லாம் நடக்காமல் இருந்திருக்குமோ?
இலக்கியம் லேசான காரியமா சார்? மதிப்பீடுகள் சம்பந்தப்பட்டது இல்லையா சார்?
எழுதுவது அழகியலா அசிங்கவியலா ஆன்மீகவியலா என்பதல்ல ஆத்மார்த்தமாக எழுதப்பட்டிக்கிறதா என்பதுதான் அடிப்படைக் கேள்வி.
ஆத்மார்த்த எழுத்து எல்லா நேரமும் கலையாகிவிடும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்பது உண்மைதான். ஆனால் கற்பனை என்கிற கித்தாப்பிலும் சால்ஜாப்பிலும் பொய்யாக இல்லை என்பதே போதாதா சார். அட! சார்னு சொல்றது அவ்வளவு பெரிய அவமதிப்பா சார்?