11 July 2011

வடை படை (அடி தடி கவிதைகள்)

இளமைக்காலச் சேற்றை அளைந்து
பெருசுகள்
பூசிக்கொள்வதைப் பார்த்ததில்,

என்ன புரிந்ததென்று
அரசிலை பில்லை
அணிந்தவையெல்லாம்
துள்ளுகின்றன?

*****

மலை எலி
பொறியில் மாட்டுமா,
போயும் போயும்
வடையைப் பார்த்து
நாக்கை நீட்டுமா?

*****

குலவழிப் பேரு குதிரைக்கு சோறு
பெற்றவர் பெயர்
வெற்று முக தாட்சண்யம்
விளிப் பெயர் வழிப் பெயராக
வெற்றுத் தளும்பல் போதாது
சீர்செனத்தியல்ல சிருஷ்டிகரம்.
நில் கவனி
பயணம் தொடங்கும் முன்
கரம் சிரம் புறம் நீட்டாதே!

*****

மாமி
பொருளீட்ட போயிங்கில் போய்விட்டால்
மாமாவின்
கீதா உபதேசம்
சம்பமாமி யுகே யுகே

*****

இங்கிலீஷ்காரன் சொன்னது
ஏழுவருட அரிப்பு
துறஅறம் துறவரம் என்று
தாடிக்குள் மறைந்திருந்து
தவித்து அரிக்கிறது
பிறவிச் சொறி