WASTE (a Tamil poem by Vimalathitha Mamallan translated by me)
by Rajan Kurai Krishnan on Monday, July 18, 2011 at 7:50pm
WASTE
A piece of coal
Destined to burn it’s self
To enflame into fire
Arrogated itself as the flame
It inscribed flame on
The lime washed wall
Becoming Extinct
As for the wall flame
The heavy downpour of rain
Turned it into mud
Vimaladhitha Maamallan
(published through facebook on 17/07/2011)
வியர்த்தம்
சுயம் எரித்துத்
தீயாய் கனன்றெழ
விதிக்கப்பட்டிருந்த கரித்துண்டு,
நானே தழல் என்று திமிரிற்று.
சுண்ணமடிக்கப்பட்ட சுவரில்
நெருப்பைக் கிறுக்கித்
தீர்ந்து போயிற்று.
சுவர் நெருப்போ
மழை கரைக்க மண்ணாயிற்று.
*****
எத்துனைப் பல்கலைக் கழகங்கள் இதைப் பாடமாக வைக்க முண்டியடிக்கப் போகின்றனவோ, யாரெல்லாம் இதை நோபல் குழுவிற்குப் பரிந்துரைக்கப் போகிறார்களோ,எந்த நாட்டு இலக்கிய அமைப்பு விருது கொடுத்து கெளரவித்துக் கூப்பிடப் போகிறதோ என்கிற எதிர்பார்ப்பில் இரவுத் தூக்கம் போயிற்று.
எளிய உண்மையை விக்ரமாதித்யனின் வழியாகச் சொல்வதென்றால்...
புழுவாக இருக்கும்போது
ஊர்ந்துகொண்டு
வண்ணத்துப் பூச்சியாக வாழ்ந்தால்
பறந்துகொண்டு...
- விக்ரமாதித்யன் (ஊறுங்காலம் கவிதைத் தொகுதி பக்கம் 76)