மனமே! நீ வெறும் தாண்டவக்கோன் என்று தெரிந்த என்னிடமே ஆண்டவக்கோன் போல வேஷம் கட்டுவது சரியா? அல்லது உன் சரிவா? எதையோ நான் தோலுரிக்க அது உனக்குக் கரிக்க, கஷ்கத்து முடிபோல அலட்சியமாய், இது நம் கைக்கடக்கம் என்றென்னை நினைத்து இறுமாந்திருந்தாய்.
புரட்சிகர இயக்க பூதங்களே, பிளவுண்டபின் ஒரே தட்டில் உண்டதை மறக்க நினைக்கையில், தனிமனித உறவெல்லாம் தவிடு பெறுமா தத்துவக்கோனே?
எத்துனைதான் எதிர்முகமாய் சீவி ஏற்றி வைத்தாலும் தாடைக்குக் கீழே வளரும் தாடியின் சஞ்சாரம் கீழ்நோக்கிதானே!
எப்போது எழுதினாலும் என்னுடைய எழுத்து உண்மை, தனியாக உண்மை மனிதர்கள் வரிசை என்று அறிவித்து, இறந்தவர்களையும் இருப்பவர்களையும் கற்பனையாய் எழுதவேண்டிய அவசியம் எனக்கில்லை என்பது நீ அறியாததா என்ன?
பொங்கிப் போடுகிற பெண்டாட்டிக்காக வேண்டியேனும் நான் தோண்டிச் சொல்பவை அனைத்தும் பொய் பொய்யன்றி வேறில்லை என்றே நீ புலம்பியாக வேண்டி இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தர்மத்திற்கு சங்கடம் வருகையில் சங்கூதி, தாறுமாறாக வழித்துக் கொண்டு அல்லவா வருகிறது.
என் இழிவையும் உன் அழிவையும் இலக்கியமாக்க என்னால் முடியும் என்பதை எச்சரிக்கையாய்,அபாய அறிவிப்பாய் எடுத்துக் கொள். இணையத்துப் பெரும்படுகையில், சயனிக்க யத்தனித்து இளிக்கையிலும்கூட இதை மறவாதிரு மனமே! அது மதி!
பள்ளிப் பருவத்தில் நையாண்டியாய்த் திரித்து, பாடித்திரிந்த சினிமாப் பாடல் நினைவுக்கு வந்தது.
ஆசையினாலே மனம்
அடியில தொங்குது கனம்
ஆசைமீறிப் போனதாலே
கிழிஞ்சிப் போச்சுது கோமணம்.