<பர்தா போட்டு வந்த ஒரு பாகிஸ்தான் தேவதை>
<கோவில் சிலைகளில் அம்மணத்தை ஆடையாகக் கொண்டு ஆடிய பழங்குடியான காளி, பாரதமாதாவான கதை தனிக்கதை! ஆனால் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாரதமாதாவை, பர்தா போட்டு வந்த ஒரு பாகிஸ்தான் தேவதை வென்றுவிட்டாள்! பாரத் மாதா கி நகி! பாக் அழகி கி ஜெய்!>
<கோவில் சிலைகளில் அம்மணத்தை ஆடையாகக் கொண்டு ஆடிய பழங்குடியான காளி, பாரதமாதாவான கதை தனிக்கதை!>
இதுவும் அசல் இல்லை சுயமோகி என செல்லமாய் அழைக்கப்படும் ஜெயமோகனின் மாடன் மோட்சம்.
மாடன் மோட்சமே வினவின் பெத்தண்ணாவான ம.க.இ.க அராஜகவாதிகளால் விடியற்காலையில் வீடு புகுந்து கட்டிவைக்காத குறையாய் மன்னிப்புக் கடிதம்
வாங்கப்பட்ட ஈராக் கவிதை எழுதிய இரட்டையரில் ஒருவரான விக்ரமாதித்யனின் ‘தக்ஷ்ணாமூர்த்தியான’ கவிதையில் இருந்து சுடப்பட்டது என்பது தனிக்கதை.
கட்டி தங்கம் வெட்டி எடுத்து...பர்தா எப்படி இருக்கும் என்பதுகூடத் தெரியாதா?
ஹீனா அணிந்திருப்பது பர்தாவெனில் இந்திய ஜனாதிபாதி அணிந்திருப்பது?
’ப’வன்னாவுக்குப் ‘பா’வன்னா போடும் லெவல்தானா?
’இ’க்கு இ - இந்தியாவை இழிவுபடுத்து
’பா’வுக்கு பா - பாக்கிஸ்தானைப் பாராட்டு
ஈராக் பற்றி கவிதை எழுதினால் வீடுபுகுவது ஜனநாயகம். காரல் மார்க்ஸ் லெனின் ஆண்குறிகள் என்று லீனா எழுதினால் குய்யோ முறையோவெனக் கூச்சல் கலாட்டா கண்டண ஆர்ப்பாட்டம்.
இந்தியா பாரத்மாதா பற்றியெல்லாம் அடிப்படை நாகரிகம்கூட இல்லாமல் வாய்க்கு வந்தபடி எப்படி எழுதலாம் என்று கேட்கப்போனால் எல்லோரும் அம்பிகள்.
இந்தியாவை இழிவாக எழுதினாலும் யாரும் யாரிடமும் மன்னிப்புக் கடிதம் கேட்பதில்லை. ஆனாலும் இந்தியா சர்வாதிகார நாடு.
மாவோவின் சீனாவை இந்தியாவில் விமர்சித்தாலும் சீவி விடுவார்கள் இந்த வெஜிடெபிள் பிரியாணியான நக்ஸலைட்டு அம்பாள் உபாசகர்கள்.
பர்தா மேட்டர், கொடைக்காக அலையத் தொடங்கியதால் சுடலைமாடனுக்கு வந்த சோதனையா? இல்லை சுயமே சூன்யம்தானா?
பேபல்லுக்காக இன்னும் எத்துனையெத்துனை பல் இளிப்புகளை வருங்காலம் பத்மநாப ஸ்வாமியாய்ப் பதுக்கி வைத்திருக்கிறதோ?
அதியமான்! வினவு என்கிற விஸ்வமித்திர கோத்திரதாரரின் பேர் ராசி நட்சத்திரத்திற்கு அடுத்த வருடம் எப்படி இருக்கும் என்று சீக்கிரமாய் ஒரு சீட்டெடுத்து சொல்லுங்கள்.
விஸா மாஸ்டர்கார்டு அமெரிக்கன் எக்ஸ்ப்ரஸ் டிஸ்கவர் எதில் வேண்டுமானாலும் கன்ஸல்டேஷன் ஃபீஸ் வாங்கிக்கொள்ளலாம்.
எந்தக் கார்டும் இல்லையா! நீரெல்லாம் என்னையா முதலாளித்துவவாதி? பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்காகப் பாடுபடுகிறவர்களைப் பார்த்தேனும் வாழ்க்கையில் முன்னேறக் கற்றுக்கொள்ளுங்கள்.
ஸ்கூட்டரில் வந்த தோழர்
கால்நடைக்காரன் என்னை,
குறி, பார்த்து வந்தது
அவரது ஸ்கூட்டர்.
தோழர் அவர் எனக்கல்ல. எனவே
நின்றபடி ஓடும்
எஞ்ஜினுடன் ஓடவிட்டார்
இயங்கு இயல் வாதத்தை-
’நீ பூர்ஷ்வா
உன் அப்பன் பூர்ஷ்வா
உன் பாட்டன் முப்பாட்டன்
உன் பரம்பரை
பூராவும் பூர்ஷ்வா
பூ ஊ ஊ ஊர்ஷ் வாஹ்!’ என்றார்.
’நீ?’ என்றேன்.
’நானா?’ என்று
பிரேக்கை ரிலீஸ் பண்ணி
‘நான் ஒரு லெப்ட்...’ என்று
பள்ளத்தே பாய்ந்த
முன்சில்லைத் தூக்கி
‘டிஸ்ட்’ என்று எம்பினார்.
‘டூ’...என்றார் ‘டா’ என்றார்.
பறந்தார் ஸ்கூட்டரில்.
பள்ளம் பார்த்துப் பாதை பிடித்து
நடந்தேன் நான்.
- பிரமிள்
(1986)
மீறல், அக் 1993.