இது என்ன முன் ஜாமீனா?
அலுவலகப் பணிச்சுமை, தினசரி மூன்றுமணி நேரப் பயணம், வீடு திரும்பும் நேரம் ஏற்றுமதிக்குத் தயாராகும் கண்டெய்னர்களால் தீர்மானிக்கப்படுவது என அசதியும் அவகாசமின்மையும் அரித்துக்கொண்டிருக்கின்றன.
ரப்பர் நாவல் பற்றி எழுத முடியாமைக்காக ஜெயமோகன் அவர்களிடம் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எங்கே எழுதிவிடுவேனோ எதிர் முகாம்கள் எங்கே அதைப் பிரசுரித்துவிடுமோ என்று, ங்கா பருவத்தில், விரல்சூப்பியபடி எழுதிய நாவல் அது. அதன் மூலரூபம் விஸ்வரூபம் என்றெல்லாம் வித்தாரம் செய்து, வரமுடியாத சுந்தர ராமசாமியை சாட்சிக்கிழுத்து என்னடா இது நாகர்கோவிலுக்கு வந்த சோதனை? என்று இதற்குப் போய் ’லேட் கட்’டாய் முன் ஜாமீன் எல்லாம் எடுக்க வேண்டாம்.
என்ன இருந்தாலும் நாவல் கலையையே எழுதவைத்த நாவலல்லவா ரப்பர்?
நாவல் இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
ஒன்று என்னுது இனொண்ணு எனக்கு வரப்போவது
யாருக்கோ சொல்வது போல் பெரிய்ய்ய்ய நாவலில் உன்னை ஈடுபடுத்திக் கொள் என்பது போல ஏதாவது அறிவுரை வழங்கவும் - வழக்கம்போல.
நானும் என்பாட்டிற்கும் சலவையுடை தத்தாரியாகத் திரிந்துகொண்டிருப்பேன் வழக்கம்போல.
வாசஸ்தலம்
சுதந்திரமான இடம்
ஆனால்
எது வொன்றும்
எது வொன்றுக்கும்
வெளியில்தான் வரவேண்டியிருக்கிறது...
- விக்ரமாதித்யன்
பி.கு. ஆவலுடன் எதிர்பார்க்கும் ஜெயமோகனின் அடுத்த ரிலீஸ்: விக்ரமாதித்யனின் தக்ஷ்ணாமூர்த்தியான மாடன்மோட்சம் கட்டி தங்கம் வெட்டி எடுத்து... இதற்கான ’லேட் கட்’.
லேட்டாய் சொல்வதன் தாத்பர்யம்: பொதுஜனம் மறந்துடும். சம்பந்தப்பட்டவனுக்கு மட்டும் சங்கேத சமிக்ஞை.