12 July 2011

நல்லார் ஒருவர் உளறல்

மனப் புரட்டே இணையத்தில்
மை பரவுவதாய் உளறாதே.
மெய்நிகர் உலகில் ஏதடா மை?

அச்சிலும்கூட
மை ஒடுங்கிக் 
கிச்சென்று நின்றால்தான்
பார்க்க அழகாகும் வாசிப்பு சுகமாகும்
பரவிய மையில் 
எங்கடா தெரியும் எழுத்து?

மொழியில்
புழுதியைக் கிளப்புவதாய் சொல்லி
ச்சும்மா அதிருதில்ல என்று பாவனிக்க
உச்ச நட்சத்திரம் என்கிற சுயமைதுனமா?

நிதர்சனம் கவித்த புழுதியில்
வெளுத்தது தலை எனினும்
தடி தூக்கும் ஆன்மீக தாடிப் புரட்டில் 
தந்தையோஃபோபியா வலைவிரிப்பு
டாவடிக்கத் தலைக்கு மட்டும் டையடிப்பு

எழுத்தறியா நிபுணா!
நிலைத்தொடர் வாக்கியம்
கழுத்தில் சிலேட்டாய்
தொங்கிக்கொண்டிருக்கும் 
நிரந்தரப் பல்லிளிப்பு.