@Dyno Buoy : அய்யனார், ஸ்ரீதரின் அதே கதையை முயற்சித்திருக்கிறார்னு பாத்ததுமே எனக்கும் எழுதிப்பாக்கணும்னு ஆர்வம் ஏற்பட்டது. சிறுபிள்ளைத்தனமா இதெல்லாம் தேவையான்னு கொஞ்சம் வெக்கமாவும் இருந்துது. ஆனா எழுதணும்னு தோணியதே மேலோங்கியதாலே அய்யனாரைப் படிக்கலை. கமெண்ட்ஸ் மட்டும் படிச்சிகிட்டு வந்தேன்.
எழுதிப்பாக்கறது க்ராஃப்ட் சம்பந்தப்பட்டது. எழுதறது இலக்கியம் சம்பந்தப்பட்டது.
இலக்கியத்துல க்ராஃப்ட் இல்லைனு யாருமே சொல்லலை.சிக்கலோ எளிமையோ எழுதுபவனின் பார்வை காரணமாகவே அதற்குறிய இடத்தைப் பெருகிறது. அதனாலதான் சுஜாதா க்ராஃப்ட்ஸ்மேன். சுவாராசியமான க்ராஃப்ட்ஸ்மேன். சுவாரசியம் மட்டுமே முதலும் முடிவுமாக நின்றவர்.
”மச்சி மணிரத்னம் நெனச்சா சத்யஜித்ராய் மேரி படம் எடுக்க முடியாதா என்ன?”
கலையில் சுவாரசியம் கட்டாயமாக இருக்கிறது. ஆனால் வெகுஜனங்களுக்கு சுவாரசியமாய் இருப்பதாலேயே அது கலை என்று கச்சை கட்டுகையில்தான் பிரச்சனையாகிறது. தனித்தனித் தீவுகளாய் நிற்கும் இலக்கியச் சிறுகூட்டம் புன்னகையுடன் விலகி நடக்கிறது.
புரியாது இருக்கும் ஒரு காரணத்தினாலேயே ஜீவித்திருக்கும் இலக்கியப்போலியும் இதே போல் கலையாவதில்லை.
கதை எழுதிக்கொண்டிருப்பதால் இதைத் தொடர்ந்து பேச இப்போதைக்குக் கொஞ்சம் கஷ்டம். பஸ்ஸிலிருந்து ப்ளாகுக்கு ஓடிவந்ததற்கு அதுவும் ஒரு காரணம்.