நிறம் [சிறுகதை] (2011)
கதையைப் படிச்சுட்டு எப்போ அர்ச்சனை ஆரம்பிக்கப்போறதுன்னு காத்துண்ட்ருந்தது வீண்போகலை.
திரையை மூடிக்கொண்டு, அபிஷேகமே ஆரம்பமாகிவிட்டது.
நிறம் எழுதியவன் பார்ப்பணீயன் என்றால் யார்? போர்வை (1981) இதை எழுதியவன் அணிந்திருப்பது எந்த பனியன்?
தாம்பத்யம் (ஜூன் 1994) கதையை ஆஃப்செட் இயந்திரம் அச்சடித்துக் கொண்டிருக்கையில், அதைக் கண்காணித்துக்கொண்டிருந்த மெஷின்மேன் இளைஞன் இயந்திரத்தில் ஓடிக்கொண்டிருந்த ஃபாரத்தைக் கையில் எடுத்துப் பார்த்தவன், ஒரே மூச்சில் படித்து முடித்து அடித்த கமெண்ட், ( என்று தற்செயலாய் கவனிக்க நேர்ந்த சுகுமாரன் சொன்னது).
”ஒக்காளி ரொம்ப நாள் கழிச்சி பாப்பானைத் திட்ற கதை நம்ப பத்திரிகைல வந்துருக்குய்யா”
முனைவர் ஆகும் தகுதியுடன் மூளையைக் கசக்கிக் கடுமையாக உழைத்து, ஆராய்ச்சி செய்யும் இணைய இலக்கியப்புலிகள், எழுத்து கூட்டிப் படிக்காமல் எப்போதுதான் கதை படிக்கக் கற்றுக் கொள்ளப்போகிறார்களோ! கதையின் தொனியைப் பிடிக்கக் கற்றுக் கொள்ளப்போகிறார்களோ!
ஈஸ்வரோ சர்வ ரக்ஷது!.