தத்தளிப்பு
முக்குளிக்கும் தோற்றம் காட்டலாம்
***
மூழ்கிக் கடலாழம் காணமுடியுமா?
***
வெத்து
சிறைக்குப்போன அப்பாவிக்காய்ப் போராடி
சிறைபுகுந்த தோழர் வெற்றிகரமாய் பெயிலில் வந்தார்.
மாலை மரியாதையுடன் வீடியோ படமெடுத்து
புரட்சிகரமாய் வெளியிட்டுக்கொண்டார்கள்.
***
வேட்டு
எவனோ வெடித்துப்போட்ட
பட்டாசுக் கூளத்தை
எவனோ பொறுக்கிக் கொண்டிருந்தான்.
தண்டவாளத்துத் தலையைப் பார்த்து
ஓட்டுப்பொறுக்கி என இளித்தது
தண்ட வாளம்.
***