| hide details 1:15 PM (12 hours ago) |
நலமா மாமல்லன் சார்,
நான் முஹமத். சிங்கப்பூரில் ஒரு சாதாரண வேலை பார்க்கிறேன்.உங்களின் வலை தளத்தை தினமும் பார்த்து விடுகிறேன்.
உங்களின் சிறுகதைகள் சிலவற்றை வலைத்தளத்தில் படித்தேன்.எளிமையாக அதே சமயம் நல்ல ஆழமாக இருக்கின்றன.
சின்னஞ்சிறு கவிதைகளும் கூர்மையாய் இருக்கிறது.
சில சமயங்களில் ஜெயமோஹனுக்காக அதிக நேரம் செலவு செய்கிறீர்களோ என்று நினைக்க தோன்றுகிறது. அவருக்கு ஏன் சார் உங்கள் மதிப்புமிக்க நேரத்தை இவ்வளவு ஒதுக்குகிறீர்கள்? எப்படி இருந்தாலும் அது உங்களின் விருப்பம்தான் சார்.
நல்ல படைப்புக்களை வாசகர்களாகிய எங்களுக்கு தொடர்ந்து கொடுங்கள்.
மிக்க நன்றி.
அன்புடன்
முஹம்மது
***
***
அன்பான முஹமத் அல்லது முஹம்மது,
<நல்ல படைப்புக்களை வாசகர்களாகிய எங்களுக்கு தொடர்ந்து கொடுங்கள்.>
முயற்சிக்கதான் முடியும். கண்டிப்பாக முயற்சிக்கிறேன். நன்றி.
<சில சமயங்களில் ஜெயமோஹனுக்காக அதிக நேரம் செலவு செய்கிறீர்களோ என்று நினைக்க தோன்றுகிறது. அவருக்கு ஏன் சார் உங்கள் மதிப்புமிக்க நேரத்தை இவ்வளவு ஒதுக்குகிறீர்கள்?>
என்னதான் ஹிந்துத்துவவாதி எனினும் மலையாளம் சமஸ்கிருத கலப்பு மிக்கது எனினும் ஜெயமோகன் இவ்வளவு ஸ்பஷ்ட்டமாய் உங்களைபோல் ஜெயமோஹன் என்று உச்சரித்ததில்லை.
சர்வ சம்பத்துகளும் சித்திக்க ஜெயமோஹன் என்கிற இந்த ஒலிவடிவை 23 தினங்களுக்கு 23முறை எழுதிப்பார்க்கும்படி உங்கள் சார்பில் சிபாரிசு செய்து அவருக்கு அனுப்பி வைக்கிறேன்.
முஹம்மது பெயரில் மோடியும் மோடியின் பெயரில் முஹம்மதும் உலவிக்குழப்பும் இணைய வெளியில் சுவாரசியத்திற்குக் குறையே இல்லை.
ஈ பீ என ஙொய்ப்பதைப் பார்க்க இது எவ்வளவோ நறுமணமுடையதாக இருக்கிறது.
<மதிப்புமிக்க நேரத்தை>
எனது நேரம் மதிப்புமிக்கதாய் இருக்க நானென்ன விடாமல் முக்கிக்கொண்டிருக்கும் மும்மூர்த்திகளில் ஒருவனா? வாழவைச் சும்மா பராக்கு பார்க்க வந்தவனுக்கு ஏது மதிப்புமிக்க நேரம்?
நீங்கள் உண்மையிலேயே முஹமத் அல்லது முஹம்மது எனில் பரவாயில்லை போனால் போகிறது என்று மன்னித்துவிடவும் என்னை.
பி.கு: சரவணன் வந்தார், முஹமத் அல்லது முஹம்மது வந்துவிட்டார் அடுத்து வரப்போகும் கிறிஸ்துவுக்கு அட்வான்ஸ் வந்தனங்கள்.