from parthasarathi.jayabalan@***.com
to madrasdada@gmail.com
date Mon, Aug 29, 2011 at 6:59 PM
subject RE: கதைதான் அனுப்பக் கூடாது..சந்தேகம் கேட்கலாமல்லவா
mailed-by ***.com
மாமல்லன் சார் - உங்களோட ஹசாரே பற்றிய கட்டுரைகளைப் படித்தவுடன் எனக்குத் இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.
சில்லறை விஷயம் தான்.ஆனால் கொஞ்சம் சில்லறை புரளும் விஷயம்.
மூன்று மாதங்களுக்கு முன்பு ஊருக்குப் போயிருந்தேன். எங்களுடையது பெரிய கிராமம். கிராமத்தின் இரு எல்லைகளிலும் டாஸ்மாக் கடைகள் உண்டு. கடை திறக்கும் நேரமான 10 மணிக்கு போய் நானும் என் நண்பர்கள் இருவரும் உட்கார்ந்திருந்தோம்.( காலையிலே குடிக்கும் அளவுக்கு பெருங்குடிகாரன் என்று என்னை நினைத்து விட வேண்டாம். ஊரில் ஒருவர் காலமாகிவிட்டார். "நீர் வளத்துறை" என்னிடம் அளிக்கப்பட்டிருந்தது.அதற்காக)
கடையைத் திறந்தது ஒரு புது ஊழியர். நாங்கள் யாருமே அதற்கு முன் அவரைப் பார்த்ததில்லை. எங்களுக்கு முன்பாக எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர் காசை நீட்டினார்.
"அறுவது ஒன்னு குடுப்பா?"
"அறுவத்தி ரெண்டு?"
"எதுக்கு ரெண்டு ரூவா அதிகம்.அறுவது ரூவாதானே கோட்டரு?"
வாக்குவாதம் நீண்டது.கடைசியாக ஊழியர் சொன்னார்.
யோவ் காலங்காத்தால ஏன்யா இம்ச பண்ர..இஷ்டம் இருந்தா வாங்கு..இல்லன்னா போய்யா?"
மேற்கண்ட வாசகத்தை ஊழியர் முடிக்கும் முன்பாகவே அவருடைய கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விழுந்தது.
'ங்கோத்தா..எங்க வந்து யார் கிட்ட..தொலச்சுப் போடுவேன்..ஜாக்ரதை" சொல்லிவிட்டு சரக்கை வாங்கிக் கொண்டு போய்விட்டார்.
அந்த புது ஊழியர் பாவம். தேம்பித் தேம்பி அழத் தொடங்கி விட்டார்.
என்ன சார் இது. தாளவாடியில ( அங்கிருந்து தான் மாற்றலாகி வந்திருக்கிறார்)அஞ்சு ரூவா அதிகம் வாங்குறாங்க..ரெண்டு ரூவாக்கு என்ன அடிச்சிட்டாரே"
அடித்தது தவறுதான். நான் கேட்டேன்." இருக்குற வெலயத் தான் குடுக்க முடியும்.அதிகமாக் கேட்டா எப்படி சார்?"
'என்ன சார்..இது என்ன நாங்களா வாங்குறம்னு நெனச்சீங்களா? மேல இருக்குறவங்க வாங்க சொல்றாங்க..தாளவாடியில மட்டும் ஒரு நாளக்கி 20,000 ரூவாய்க்கு மேல வரும் சார் இந்த அதிகம் வாங்குற பணத்துல.."
எங்கள் கிராமத்துக் கடைகளிலும் சில சமயம் இரண்டு ரூபாய் அதிகம் வாங்குவார்கள்.யாராவது சத்தம் போட்டால் அடங்கி விடுவார்கள்.
ஒரு கடையில் ஒரு நாளைக்கு இவ்வளவு வருமானம் என்றால்..தமிழகம் முழுவதும் உள்ள கடைகளை எண்ணிப் பார்த்தேன்.
எனக்கு மயக்கம் வருவது மாதிரி இருந்தது.
பின்பு சாவகாசமாக கணக்கு போட்டுப் பார்த்தேன். அடேங்கப்பா!
6800 கடைகள் - ஒரு நாளைக்கு சராசரியாக 3000 ரூபாய்( இது குறைவுதான்) - 2 கோடியே 4 லட்ச ரூபாய்
ஒரு மாதத்திற்கு 61 கோடியே 20 லட்ச ரூபாய்.
வருடத்திற்கு 735 கோடி.
இது வெறும் உபரிப் பணம் மட்டுமே...என்னவோ போங்க சார்..
ஹசாரே குல்லா போட்டிருக்கிறார். அறை விட்ட அந்தப் பெரியவர் மீசை வைத்திருந்தார்.அஷ்டே!!
***
யோவ் கதை அனுப்பாதேன்னு சொன்னப்பறமும் இது என்ன பேக் டோர் பிரவேசமா?
<எங்களுக்கு முன்பாக எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர் காசை நீட்டினார். >
மாமல்லன் ஐயானு மெய்லனுப்பி, அப்பறம் ஃபோன்ல பேசினப்போ, அது இன்னா பாதி பேரு ஐயங்காரா இருக்கு மீதிப்பேரு வேறையா இருக்கு, மெயில்ல இன்னாடான்னா ஐயா கொய்யாங்கறேன்னு கேட்டப்போ நான் ஈரோடு (பொள்ளாச்சி?) பக்கம்னு இல்லெ சொன்னே? ஊர்ல பெரியவங்களை ஐயான்னு மருவாதியா கூப்புட்றவன் தெரிஞ்ச ‘பெரியவர்’ டாஸ்மாக்ல நிக்கசொல்லொ ஈரோட்டு கிராமத்துல - என்னத்தான் எழவு இன்னாலும் அதே டாஸ்மாக்குலத்தான் குந்திகினு இருப்பீங்களா?
<யோவ் காலங்காத்தால ஏன்யா இம்ச பண்ர..இஷ்டம் இருந்தா வாங்கு..இல்லன்னா போய்யா?">
உங்க கிராமத்துக்குப் புதுசா வந்த டாஸ்மாக் ஆளு உங்க ஊர் ’பெரியவரைப்’ பாத்து ’யோவ்’னு சொல்ல அவன் என்ன நேரா மெட்ராஸ்லேந்து டேரா தூக்கினவனா? இணைய இலக்கிய குருஜியைக் குஷிப்படுத்த ’ஜ்யோவ்’னு சொன்னான்னுகூட எழுதிடுவீரு போல இருக்கே.
<'ங்கோத்தா..> உங்கூர் கிராமத்துப் பெருசும் ங்கோத்தா ங்கொம்மான்னுதான் பேசுமா?இல்லை தரமணி மேரிதான் தாளவாடிக்குப் பக்கத்துக் கிராமத்துலையும் பேஷிப்பாங்களா?
<தேம்பித் தேம்பி அழத் தொடங்கி விட்டார்.>
திடீர்னு என்னையா குழந்தைக் கவிஞர் ஆயிட்டீரு!
ஒரு வாரம் மின்னேடி, ஒரு மாசத்துக்கு ஷாட் ட்ரிப்பா ஆஸ்திரேலியா போறேன்னு ஃபோன்ல சொல்லிட்டுப் போயி இந்த மேரி டாப்பிக்கலா கதை எழுதி எடுக்க என் உசுருதான் கெட்சுதா? எஸ்.ராவுக்கு அனுப்பப்போறதா சொன்ன ’நெகிழ்ச்சியான கதை’ என்ன ஆச்சி? அதே மேரி ஏற்கெனவே அவர் ஒண்ணை எழுதி வெச்சிருக்காராமா?
எங்களூர் உண்மைச் சம்பவம்னு இத்தை அப்பிடியெ ஜெயமோகனுக்குப் பார்சல் பண்ணு பப்ளிஷ் ஆயிரும். இன்னா ஒண்ணு 'சரக்கு'தான் இடிக்குது. அவுருக்கு கட்டங்காப்பி இல்லே கஷாயம்தான் பிடிக்கும். கொஞ்சம் லைட்டா டிங்கரிங் பண்ணப்பாரும் ஓய்!
இல்லே இதை அப்பிடியேப் புடிச்சிகிட்டு பாத்தியா தமிழ்நாட்டுல கால்ரா சீதபேதி எல்லாம் சுழிச்சிகிட்டு ஓடுதுன்னு டெம்மி சைஸ்ல பத்துபக்கம் வராப்புல ங்கொங்கா ங்கொங்கான்னு எயிதி, அடுத்த வாரம் பிரசுரமாகப்போற கிழக்கு இரண்டாம் பதிப்புல வரலாற்றுப் பதிவா சேத்தாலும் சேத்துடுவாரு.
மொளைக்கிறதுக்கு முன்னாடியே காத்தடிக்கிற பக்கமா மோட்டார் போட் வுடக் கத்துகிட்டீங்க.
டாஸ்மாக்கில் ஹசாரேன்னு டைட்டில் வெச்சி இத்தை அனுப்பிப்பார் எவன் கண்டான் ஆனந்த விகடன்ல வந்தாலும் வந்துடும்.
இன்னொருக்கா கதைகிதைனு எத்தையாச்சும் எஸ்.ரா ஜெமோ சாருன்னு ரவுண்டு கட்டி அனுப்பாமத் திரும்பவும் எனக்கே அனுப்பி கினுப்பி வெச்சே! மவனே, பாஸ்போர்ட்டே இல்லாத நான் ஆஸ்திரேலியாவுக்கே வந்து அடிப்பேன்.