புரட்சியும் மெண்டலும்
சமூகத்தை ஜாக்கி வைத்து உயர்த்த
ரூம் போட்டு பள்ளம்தோண்டி
அரசு இயந்திரத்திற்குத் தெரியாவண்னம்
பதுங்கிப் பதுங்கி விவாதித்தன.
வெளியில் வந்தபோது
மெண்டல், புரட்சியாகிவிட்டதாய்
சட்டையைக் கழற்றி கக்கமிடுக்கி
மாமிசாமிக்கு நன்றி கூறிற்று.
புரட்சி, மெண்டல் ஆகி
சந்திலும் பஸ்ஸிலுமாய்
சட்டையைக் கிழித்துப்
பினாத்தியபடி அலைந்துகொண்டிருந்தது.
இரண்டின் நிலைமையைக் கண்ட மாத்திரம்
எதற்கு வம்பு என்று
கப்சிப்பென சமூகம்
அட்டென்ஷனில் வடிவமைத்துகொண்டுவிட்டது.