கவனம்
இதழ் 3 மே 1981
பல சிறுகதைகளும், ”நாளை மற்றும் ஒருநாளே” என்னும் அதிர்வூட்டும் புதினத்தையும் எழுதிய திரு.ஜி.நாகராஜன் மறைந்துவிட்டார். பெரிய பெரிய படைப்புகளுக்கு திட்டமிட்டிருந்த ஜி.நாகராஜன் அவற்றில் ஒன்றையும் உருவாக்காமல் சென்றது துரதிருஷ்டம். டெரிலின் ஷர்ட்டும், எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் என்ற அவர் கதை அவர் உணர்த்திய உலகின் மெய்ம்மை, பொய்மைகளை உருக்கமாகக் காட்டுவது. ஆயுட்காலம் எந்த அளவானாலும் எழுத்தாளனைப் பொறுத்தமட்டில் அது முற்றிலும் வீணடிப்பல்ல என்பதை நாகராஜன் படைப்புகள் நினவூட்டுகின்றன.
***
ஜி.நாகராஜனின் மறைவுக்கு அஞ்சலியாய் 81ல் கவனத்தில் மீள்பிரசுரம் செய்யப்பட்ட செரியான கதை இது. படித்துப் பாருங்கள்.
இந்தக்கதையைத் தட்டச்சு வடிவில் படிக்கவிரும்புவோர் வசதிக்காக