show details 9:09 PM (12 hours ago) |
மாமல்லன் சார்,
இன்று தான் உங்கள் குல்லாவுக்கு உள்ளே இருப்பது என்ன? இடுகையைப் படித்தேன். ஆங்கில விக்கிப்பீடியாவுக்கும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் உள்ள தர வித்தியாசத்தை நீங்கள் சுட்டியிருப்பதைக் கண்டேன். குலக்கல்வித் திட்டம் குறித்த இரு கட்டுரைகளையும் (ஆங்கிலம் மற்றும் தமிழ்) எழுதியது ஒரே ஆள் (நான்) தானென்றாலும் தர வித்தியாசம் அதிகமாக உள்ளது. ஆங்கிலக் கட்டுரையை எழுதும் போது விக்கிக்கு வந்த புதிது - ஏதேனும் ஒரு விசயத்தை எடுத்துக் கொண்டு மெல்ல படித்து தகவல் சேர்த்து வாரக்கணக்கில் ஒரு கட்டுரையென எழுதிய கட்டுரைகளில் ஒன்று ஆங்கில விக்கி குலக்கல்விக் கட்டுரை.
தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதத் தொடங்கிய பின்னர் வேகமாக ஆங்கிலத்தில் உள்ள பலதை தமிழில் கொண்டு வந்து விட வேண்டுமென்ற வேகத்தில் விசயத்தைக் குறுக்கி, ஒரு மாதிரி சம்மரி ஃபார்மேட்டிலும் தமிழில் எழுதி வருகிறேன். அப்படி உருவானதில் ஒன்று தமிழ் குலக்கல்விக் கட்டுரை. நீங்கள் எழுதியிருந்ததைப் படித்த பின்னால் தவறு செய்கிறோமோ என்று சற்று உறுத்தலாக உள்ளது. இனி அகல உழும் போது ஆங்காங்கே ஆழ உழவும் கட்டாயம் முயற்சிக்கிறேன்.
(ராஜாஜி கட்டுரையில் இருந்த தவறுகளை சற்று சரி செய்திருக்கிறேன். கட்டுரையை முழுதாக மீண்டும் சரிபார்க்கிறேன்)
சோடாபாட்டில்
அன்பான சோடாபாட்டில்,
அது போதும்.
அன்பான சோடாபாட்டில்,
அது போதும்.