தொலைக்காட்சி பார்ப்பதில்லை.
இணையம் வெட்டி அரட்டை மடம்.
யாராவது எதையாவது பார்வைக்குக் கொண்டுவந்தால் தவிர, எதன் மீதும் கடைக்கண்கூடப் படாமல், இலக்கியம் சமூகம் சினிமா என்கிற சிந்தனையில் மட்டுமே இருபத்து நான்கு மணித்தியாலமும் நாயர்கடை பாய்லரின் வெநீராய்க் கொந்தளிக்கும் மனத்துடன், வாயிலிருந்து கழுத்து வழியேத் தோள் சாய்ந்த வடிகட்டியின் உள்ளேயிருக்கும் சாரத்தைத் தான் வாழும் காலத்திற்குக் கொடுப்பதற்காகவேத் தன்னை சக்கையாக்கிக்கொள்ளக் காத்திருக்கும் டீத்தூளாய் பிஸியாய் இருக்கும் பசியோடு கிடப்பதாகக் கட்டமைத்து, எம்மைப்போல் எழுத்தாளர் ஆகவேண்டுமென்று ஆசைப்படுவோர் எல்லோரும் இதே சைஸுக்குப் அறுத்துக் கொண்டாலன்றி வேறு மார்க்கமில்லை என்று பரப்புரைக்கும் பின்தொடரும் நிழலின் குரலால் பின்தொடரப்படும் பேறு பெற்றோர் பட்டியலில் இதுவரை இடம்பிடித்திருப்போரின் எண்ணிக்கை அஷ்டோத்திர சதநாமாவளிக்கு ஆறு கம்மி.
பாதபூஜை செய்யும் குழுமத்திற்கு இது நம்ம ஆளு என்று பதில் மரியாதை செய்யத்துஒடங்கினால் எண்ணிக்கை சஹஸ்ர நாமமாகவும் ஆகக்கூடும்.
பட்டியலில் இருக்கும் சில முகங்களைப் பார்த்து, ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 போல் ’பெரிய அண்ணன் கண்காணிக்கிறார்’ ஆகவும் இருக்கலாம் என்கிற ஐயம் எவருக்கேனும் எழுந்தால் அது தேசத்தைத் துண்டாட நினைப்பதற்கு ஒப்பானதாகும்.