எறும்புகளும் நெருப்பும்
அது எறும்புகளின் குடியிருப்பாய் இருப்பதை அறியாமல் ஒரு உளுத்துப்போன கட்டையை நெருப்பில் எரிந்தேன். கட்டை பிளக்கத்தொடங்கியதும், எறும்புகள் வெளிப்பட்டுத் திகைத்து நான்கு திசைகளிலும் ஓடின. கட்டையின் மேற்புரத்தில் ஓடின-ஜ்வாலையில் தீய்ந்தும் செத்தும். நான் கட்டையை இறுக்கிப்பிடித்து மறுபுறத்தைத் திருப்பினேன். மணலுக்கும் பைன் மரக்குச்சிகளுக்கும் ஓடின.
ஒரு விசித்திரம், அந்த எறும்புகள் நெருப்பைவிட்டு நேரே விலகி ஓடவில்லை.
அச்சத்தைத் தவிர்த்துக்கொள்ள முடிந்ததும் அவை குழுக்களாகத் திரும்பி வந்தன, ஏதோ ஒரு சக்தி தாங்கள் விட்டுச்சென்ற தாயகத்துக்கு அவற்றை மீண்டும் இழுப்பது போல. எரிகிற கட்டைக்கே மீண்டும் திரும்பி, சாகிற வரைக்கும் திரிந்தவை பல அவற்றில் இருந்தன.
தமிழில்: ரங்கநாதன்
நன்றி: கசடதபற இதழ் 2 நவம்பர் 1970
PDFஆக வலையேற்றிய பொள்ளாச்சி நசன் அவர்களுக்கும் நன்றி. http://pollachinasan.com/ebook3/3950/pdf/TM3908.pdf
நன்றி: கசடதபற இதழ் 2 நவம்பர் 1970
PDFஆக வலையேற்றிய பொள்ளாச்சி நசன் அவர்களுக்கும் நன்றி. http://pollachinasan.com/ebook3/3950/pdf/TM3908.pdf