21 September 2011

மன்சூர் அலியும் மண்ணாந்தையும் - சுடச்சுட ஃபேஸ்புக் சாட்டிலிருந்து

Manzoor Ali
Today

vanakkam sir

வணக்கம்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படையில் பணியாற்றியவர்கள் இந்திய விடுதலைக்குப் பிறகு இந்திய அரசாங்கத்தால் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.....
i heard this from one book இத பத்தி இன்னும் தெளிவாக தெரிஞ்சுக்கணும் can u help me

இப்படி ஒரு விஷயத்தை நான் கேள்விப்பட்டது இல்லை. அப்படி இருந்திருந்தால் குறைந்தபட்சம் போஸ் மண்ணின் மைந்தர் என்பதால் வங்காளமும் போஸின் சிஷ்யர் பொன் முத்துராமலிங்கத் தேவரின் கட்டுக்குள் இருந்த தென்தமிழகமும் கொந்தளித்து இருக்குமே! மாறாக போஸின் படையைச் சேர்ந்த பலருக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. என் கல்லூரி காலங்களில் எவருக்கும் அஞ்சாத 55+ பெரியவர் PTC டிரைவராகப் பணிபுரிந்தார்.

அஜயன் பாலா எழுதிய நாயகன் புத்தகத்தில் கடைசி பக்கத்தில் இதை குறிப்பிட்டு இருந்தார்... vikatan pubications அவருக்கு அனுப்பிய மெயில க்கு விடை இல்லை

இது எனக்கு சாத்தியம் என்றே தோன்றவில்லை. சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிலருக்கு வேண்டுமானால் நடைமுறைச் சிக்கல் காரணமாய் விடுதலை கிடைக்க தாமதம் ஆகி இருக்கலாம். போஸுடன் இருந்ததற்காக விடுதலைக்குப் பின் ஒருவர் சிறைபட்டிருக்கக்கூடும் என்பது என் கற்பனைக்கெட்டாததாகவே இருக்கிறது.

தமிழக விடுதலை போரில் குறிப்பிடப்படும் திருநெல்வேலி சம்பவம் பற்றி விரிவாக அறிய ஆசை 

வேடிக்கை பார்க்க விருப்பமிருந்தால், ”போஸ் படையைச் சேர்ந்தவர்கள் சுதந்திர இந்தியாவில் சிறைபடுத்தப்ப்ட்டார்கள் என்று விகடன் பதிப்பித்த, அஜயன் பாலா புத்தகத்தில் எழுதப்பட்டு இருக்கிறதே. இது உண்மையா என்று, எது ஒன்றையும் ஆழ்ந்து கற்று அலசுபவ்ர் என்கிற முறையில் தங்கள் ஒருவரால்தான் இதற்கு பதில் கூற முடியும்” என்று மெயில் அனுப்பிப் பாருங்கள். இரவு பன்னிரண்டு மணிக்குள் குட்டி புத்தக சைஸில் கட்டுரை தயாராகிவிடும். கிழக்கு வேண்டிக்கொண்டால் இந்த சீரிசில் கொடிகாத்த குமரன் வஉசி என்று 30 40 கட்டுரைகள் எழுதப்பட்டு அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் கடைகளை அடையக்கூடும். போதும் போதததற்கு உங்கள் மன்சூர் அலி என்கிற பெயர் வேறு போனஸாய் காவியைக் கரைத்துக் காட்டிக்கொள்ள உதவக்கூடும்.

என்ன சார். கேள்விமேல் கேள்வியாய்க் கேட்டுக்கொண்டே போகிறீர்களே, என்பெயர் ஜெயமோகன் இல்லை. உங்கள் பெயர் வடகரை வேலனோ சென்ஷியோ இல்லையே?


கேள்வி கேட்பதால் என் பெயர் மாறும் என்றால் நான் கேட்கவில்லை. நான் நானாகவே இருந்துவிட்டு போகிறேன் எது எப்படியோ commercial என்ற வார்த்தைக்கு மிகச் சரியான விளக்கம் அளித்துவிட்டீர்கள்.

6:45pm
சும்மா ஜோக்கு. உண்மையில் என்னிடம் அவ்வளவு சரக்கும் இல்லை. ஏதோ இருப்பதை வைத்து கிடைத்த வாழ்க்கையை ஈடேற்றிக்கொண்டாலே போதும் என்பது என் இலக்கு.