08 October 2011

பாரதி சின்னப்பயல்

ஞான் கவி இல்லா.

கம்பனை நோக்கில்
தமிழின் நவீன ஆதி கவியே மகாகவி இல்லா.
அவன்டெ கவியில்
ஒருஜிநாலுடீயும் ஞான் கண்டிட்டில்லா.

முப்பது முப்பத்து ஐந்தாயிரம் பக்கத்துக்கு
ஃபாஸ்டாயிட்டு டைப்படிச்சிப்
போட்டிட்டெங்கில்
தமிழின் மகா எழுத்தாளன் போஸ்டுக்கு
ஞான்தன்னே அன் அப்போஸ்டு.

மெகாவும் மகாவும்
டிஃபரெண்டானுண்ணு
ஈ பாண்டிகள் அறிஞ்சூடா மாஷே!

மொட்டையே போட்டுக்கொண்டு
விவாத ரசிக ரஸமஞ்சரி என்கிற பெயரில்
காலட்சேபம் கேட்க
சப்பணம் போட்டவன்கள்
காது குத்திக்கொள்ளவா கஷ்டப்படப்போகிறான்கள்.

ஜெயமோகனானந்த னைய்யனைய்யப்ப ஸ்வாமியேய்!
சரண மெய்யப்பா!

தத்வமசி - நீயே அது!
எது?
அதா வது
பக்கம்பக்கமாய்ப்
பரவிக் கிடக்கும் மசி.