தள்ளுவண்டியில்
மல்லாக்கக்கிடக்கும் இழைப்புளிமேல்
தேய்க்கப்பட்ட கட்டிஐஸ்
கொளுத்தும் வெயிலைக் குளிர்விக்குமா?
தெய்வம் தொலைந்த திருவிழா நசநசப்பில்
பனி பொழிவதாய்
பயல்கள் நனையக்கூடும்.
வெயிலைத் தின்று அழு
நிழலை மென்று கழி
இளமையில் கல்
முதுமையில் மண்
என்பதே தமிழ்விதியாய் இருக்க
மண்ணாங்கட்டி
கெட்டி மண்ணாய் இருப்பதெப்படி?
மல்லாக்கக்கிடக்கும் இழைப்புளிமேல்
தேய்க்கப்பட்ட கட்டிஐஸ்
கொளுத்தும் வெயிலைக் குளிர்விக்குமா?
தெய்வம் தொலைந்த திருவிழா நசநசப்பில்
பனி பொழிவதாய்
பயல்கள் நனையக்கூடும்.
வெயிலைத் தின்று அழு
நிழலை மென்று கழி
இளமையில் கல்
முதுமையில் மண்
என்பதே தமிழ்விதியாய் இருக்க
மண்ணாங்கட்டி
கெட்டி மண்ணாய் இருப்பதெப்படி?