கம்பன் கவிச்சக்கிர்த்தியா?
சந்த ஒலியில் கட்டுக்குள்ளேயே உழன்றுகொண்டு, மிகையான உவமைகளை மீண்டும் மீண்டும் கையாண்டு, புளித்துப்போகும் அளவிற்கு பெண்ணுடல் பற்றிய வருணணைகளை எழுதியவர் தான் கம்பர், என்பதை மறுக்கமுடியாது.
பக்திரசம் என்பதிலாவது அவர் முன் நிற்கிறாரா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். அவருக்கு சில நூறு ஆண்டுகள் முன்னர் எழுதிய ஆழ்வார்களின் பாசுரங்களோடு ஒப்பிட்டால் கம்பர் எழுதியவை வெற்றுக்கூவல்கள் என்றே தோன்றுகின்றன. மேலும் சோழர்கள் படைபலம், போர்த்திறம் ஆகியவற்றை மறைமுகமாக மெச்சும் வகையில் யுத்த பகுதிகளை அளவுக்கு அதிகமாக நீட்டி காவியத்தின் சமன்நிலை இலக்கணங்களை முற்றிலும் குலைத்தார் கம்பர்.
படித்து முடித்ததும் கம்பன் கவிச்ச கீர்த்தியா? கம்பன் கவிஜக்ரபத்தியா? என்கிற பாடபேதங்களெல்லாம் தோன்றின. இவரை வாழ்த்துவதா? பாராட்டுவதா?