”இந்த தளத்தில் எதையுமே பேசலாம். ஆனால் இது ஓர் எழுத்தாளராகிய என்னுடைய தளமாக அறியப்படுவதனால் சில சிறு சங்கடங்கள் இருக்கின்றன. ஆகவே சில விஷயங்களை பேசவேண்டாமென நினைக்கிரேன். சாரு அதில் ஒரு தலைப்பு. என்னைப்பொறுத்தவரை இனி எப்போதும் எந்நிலையிலும் எங்கும் அந்த பெயரை சொல்லப்போவதில்லை. கருத்துரைக்கவும்போவதில்லை. இதன்பின்னால் ஆழமான ஓர் அவமான உனர்ச்சி இருக்கிரதென்பதை மட்டுமே சொல்ல விரும்புகிறேன். இங்கே பேசப்படும் எதுவும் என்னுடன் அடையாளப்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்பதனால் இந்த எச்சரிக்கை. மற்றபடி எதையும் தடுக்க அல்லது கட்டுப்படுத்த விரும்பவில்லை.”
ஒரு தமிழ் எழுத்தாளர் அடியேனைப் பற்றி எழுதியிருப்பதே மேலே கண்டது.
இதைப் பார்க்கையில் நான் கொஞ்சம் பாக்கியவான்.
ஜெயமோகன் அவர்கள், குழும குருகுலத்திற்குள், ஒலக சினிமா மேதை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் கொடுத்த பைசைக்கிள் தீவ்ஸ் முடிவிற்கு வக்காலத்து வாங்கி டிசிகாவுக்கும் எனக்கும் எதிராக பிரத்தியேக மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி உள்ளார் என்று அறிய நேர்ந்தது.
ஜெயமோகன் அனுப்பிய அல்லது குழுமத்தில் அறிவித்த மேற்கண்ட சாரு மேட்டர், சாருவின் தளத்தில் வெட்ட வெளிச்சமானதும்தான் ஜெயமோகன் குழுமத்தில் ரத்த ஆறு ஓடியது.
கம்யூனிஸ்ட் நாடுகளின் கமிசார்கள் பின்தொடரும் நிழலின் தத்துவத் தொலைநோக்குக் குழல்கள் வழியே கண்காணித்துக் ‘களை’ எடுப்பதுபோல் ஜெயமோகனின் காந்தீய ஜனநாயகக் கமிசார்கள் கிட்டத்தட்ட 200 பேர்களைக் குழுமத்திலிருந்து நீக்கினார்கள்.
கம்யூனிஸ்ட் நாடுகளின் கமிசார்கள் பின்தொடரும் நிழலின் தத்துவத் தொலைநோக்குக் குழல்கள் வழியே கண்காணித்துக் ‘களை’ எடுப்பதுபோல் ஜெயமோகனின் காந்தீய ஜனநாயகக் கமிசார்கள் கிட்டத்தட்ட 200 பேர்களைக் குழுமத்திலிருந்து நீக்கினார்கள்.
எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை. அப்படி என்ன ராணுவ ரகஸியம் கோர்ட்வேர்டில் குழுமத்திற்குள் பறிமாரிக்கொள்ளப்படுகிறது. குண்டியடிப்பு விஷயம் என்றால்கூட ஏதோ அவரவர் தனிப்பட்ட சமாச்சாரம் எனவே தனிநபர் ரகஸியம் காக்கப்படவேண்டும் என்று புரிந்துகொள்ளலாம்.
பைசைக்கிள் தீவ்ஸ் படத்திற்கு ராமகிருஷ்ணன் சொன்ன முடிவுதான் சரி. அதைத்தான் நானும் பார்த்திருக்கிறேன். (தமிழ் இயக்குநர்கள்போல டிசிகாவும் நேர்மையற்று) உள்ளூருக்கு ஒன்று உலகத்திரைப்பட விழாக்களுக்கு ஒன்று என இரண்டு முடிவுகளைத் தன் படத்திற்கு வைத்துள்ளார் என்கிறாராம் ஜெயமோகன். உள்ளூர் சினிமா என்றால் என்னவென்றே தெரியாத நிரக்ஷர குக்ஷியான விமலாதித்த மாமல்லன் உலக சினிமாவை வெறும் விக்கியின் துணைகொண்டு (ஜெயமோகன் எழுதாத விக்கியோ) ராமகிருஷ்ணனை வசைத்திருக்கிறார் லபோதிபோ லபோதிபோ லபோதிபோ.
குழுமத்தில் எழுதிய இந்தக் கடிதத்தை மாற்றமேதுமின்றி அப்படியே தனது தளத்தில் வெளியிடுவதில் ஜெயமோகனுக்கு என்ன பிரச்சனை? ஈழம் பாலஸ்தீனம் போன்ற போராட்டப் பிரதேசங்களை சுதந்திர நாடுகளாய் அங்கீகரிப்பதால் அமெரிக்காவிடமிருந்து வரக்கூடிய அபாயம் போல், மாமல்லன் பெயரைப் பொதுவெளியில் சொல்லிவிடுவதால் உலக இலக்கிய பிரச்சனை ஆகிவிடுமா என்ன? அல்லது நெஞ்சில் இருக்கும் மஞ்சா சோறு வெளியில் வந்துவிடுமே என்கிற பயமா? பல்துலக்கும் போஸுடன் சொந்த உருவில்தான் வரவேண்டும் என்றில்லை ஜெயமோகன், குழுமக் கூலிப்படைக் குழவிகள் ஏதாவதொன்றின் அடையாளத்துடன் மாரீசனாய் கூடப் பொருத வரலாம்.
முதலில் அந்தக் கடிதத்தை ஜெயமோகன் தமது தளத்தில் பிரசுரிக்கட்டும். அவருக்கு அதைச் செய்வதில் ஏதும் தயக்கம் இருப்பின் அதை பெறும் பேறுபெற்ற வேறு எவரேனும் கூட இணையத்தில் வெளீயிடலாம்.
குரல்கொடுப்பீர் குழும கண்டாமணிகளே!
தலீவா வெளியே வா!!
- தில் இருந்தா
முதலில் அந்தக் கடிதத்தை ஜெயமோகன் தமது தளத்தில் பிரசுரிக்கட்டும். அவருக்கு அதைச் செய்வதில் ஏதும் தயக்கம் இருப்பின் அதை பெறும் பேறுபெற்ற வேறு எவரேனும் கூட இணையத்தில் வெளீயிடலாம்.
குரல்கொடுப்பீர் குழும கண்டாமணிகளே!
தலீவா வெளியே வா!!
- தில் இருந்தா