Oct 27 2011 இரு இளைஞர் கடிதங்கள்
<இதைஎப்படிப் போக்குவது, அல்லது இப்படியே இருப்பதுதான் சரியா ?
நன்றி
விஜய்.
அன்புள்ள விஜய்
மிக இளமையில் எழக்கூடிய சஞ்சலங்கள் இவை.>
அறிந்தோ அறியாமலோ தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்துவிட்டு வெளியில் சொல்ல முடியாது தவித்துக்கொண்டிருக்கும் இளைஞர்களே! என்று கூவிக் கூவி தெருவோர மரத்தடியில் கடை பரப்பி லேகியம் விற்கத் தொடங்கிவிட்டாரா ஜெயமோகன்?
திருப்பதி வரிசையில் தலையை நீட்டியபடி அடுத்த இளைஞரின் கேள்வி.
<ஒரு தலைசிறந்த எழுத்தாளனாக விரும்புகிறேன்>
கிருஷ்ண பிரசாத்>
அன்புள்ள கிருஷ்ணபிரசாத்
<வாசியுங்கள், அது எழுதுவதற்கான முதல்படி.>
ஜெ>
என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். நான் எப்படி வாசித்து வாசித்தே தலைசிறந்த எழுத்தாளன் ஆனேன் என்பதைப் பாருங்கள்.
சுகுமாரனின் வளர்ப்பு மிருகம் வாசித்து ஆரம்ப காலத்தில் எப்படி என் கைதி கவிதையை எழுதினேன் என்று தெரிந்துகொள்ளுங்கள். சட்டென்று பிடிபடவில்லை என்றால் Wednesday, November 24, 2010 சுகுமாரன் கவிதையிலிருந்து ஜெயமோகன் சுட்ட மொக்கை என்கிற இந்தக் கோனார் நோட்சை உபயோகியுங்கள். Tuesday, November 23, 2010 ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே
Friday, November 12, 2010 பின் தொடரும் நிழலின் குரலின் முன்னால் சென்ற உருவம் - முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்
மாடன் மோட்சம் எழுத வேண்டும் என்றால் முதலில் தக்ஷ்ணாமூர்த்தியான என்கிற விக்ரமாதியனின் கவிதையை வாசித்தால்தானே முடியும் Sunday, July 10, 2011 கட்டி தங்கம் வெட்டி எடுத்து...
இப்படி இப்படியாக எதையெதையெல்லாம் வாசித்து எதையெதையெல்லாம் எழுதி தலைசிறந்த எழுத்தாளர் என்கிற இடத்தை இன்றைக்கு அடைந்திருக்கிறேன் என்று அறிய இளையபாரதி திண்ணையில் கொடுத்திருக்கும் பட்டியலும் உதவியாய் இருக்கும். ஓய்ந்த நேரத்தில் எஸ்.வி.சேகரையும் படிக்கலாம் எந்தத் துரும்பு எப்போது ந்ம் கதையாய் அரும்பும் என்று யார் கண்டார்.
குழுமத்தில் நீங்கள் இன்னும் உறுப்பினராகவில்லையா? சீக்கிரம் இணைந்துகொண்டால் கூடுதலாய் நாமசங்கீர்த்தனமும் வாசிக்கக் கற்றுக்கொள்ளலாம்.
அன்புடன் ஜெ