நெடுநாளாக திரும்பிக்கிடைக்காத என் புத்தகம் ஒன்று கண்டிப்பாக இன்று கிடைத்துவிடும். ஆனால் அதற்கு ரஷ்ய கலாச்சார மையத்திற்கு வரவேண்டும் என்று நிபந்தனை போடப்பட்டது. நான் உள்ளே வராமல் வெளியில் இருந்தே அழைக்கிறேன். புத்தகம் மட்டும் வெளியில் வந்தால் போதும் என்று ஒப்பந்தமிட்டுக்கொண்டேன். என்னிடம் மிகச்சில பிரதிகளே உள்ள, வாசிப்பதற்காக மட்டுமே என்றுகொடுத்த இரண்டாவது தொகுப்பின் பிரதி எனக்கு முக்கியம். அதற்கு தோப்புக்கரணம் போடச்சொன்னாலும் போட்டிருப்பேன்.
யாராவது எங்கேயாவது பாஸ்போர்ட் வாங்கிக்கொள்ளட்டும். அல்லது வெளிநாடு போக விசா வாங்கிக்கொள்ளட்டும். நமக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று இரு சக்கர வாகன லைசென்ஸிலேயே திருப்தியடைந்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருப்பவன்.
அலுவலக வேலை பளு காரணமாய் இன்று ஆறு இருபது செங்கை-பீச்சைத்தான் பிடிக்க முடிந்தது. சரியென்று ஜெயமோகனின் முகத்தோடு நெட்புக்கில் சல்லாபித்தபடி ரயிலில் வந்துகொண்டிருந்தேன். இரண்டு நாளாய் திகிலுலகில் உல்லாச சல்லாபம்.
பெருங்களத்தூரை நெருங்கும் முன்னால் ஒரு சிறுவனிடம் இருந்து ஃபோன். அங்கே வந்தால் புத்தகம் கிடைக்கும் என்ற ஆவலில் மண். வேலை காரணமாய் வெளியில் சுத்திக்கொண்டிருந்தோமா அலுவலகத்திலேயே புத்தகம் தங்கிவிட்டதா நாங்கள் அங்கிருந்து அப்படியே இங்கே வந்துவிட்டோமா என்று விட்டுவிட்டுக் கேட்ட அலைப்பேச்சில் என்னென்னவோ கதை. தூங்குகிறவனை எழுப்பி சோறில்லை தூங்கு என்கிற கதை போலாகிவிட்டது.
போவதென குதிரையைப் பூட்டியபின் போகாமலிருக்க முடியுமா? ரஷ்யன் கலாச்சார மையத்திற்கு வந்து வாசலில் இருந்தபடி ஆளை அழைத்தால் ஐஃபோன் சத்தமின்றி மக்கர் செய்தது. அதை ரீஸ்டார்ட் செய்த்படி பார்த்தால், பக்கவாட்டில் விழியோர சிறுதூர இருட்டில் வெண்தாடி. அதைச்சுற்றி சிலர். ’மாமல்லன்’ என்று அழைத்தது போலவோ அல்லது குறிப்பிட்டுப் பேசியுதுபோலவோ குரல் கேட்டது. யானை போய் ஏன் கொசுவை அழைக்கப்போகிறது? பக்திச் சீருரையாளர் சுகிசிவம் போலவோ அல்லது இலக்கியப் பேருரையாளர் எஸ்.ரா போலவோ நாம் எந்தவிதத்தில் பிரபலம்? நம்மைப் பற்றிப் பிறர் விளிப்பதாகவோ அல்லது பேசிக்கொள்வதாகவோ ஏக்கத்திலேயே மனம் பிரமையை உண்டாக்கி சுனைக்காவு நீலியைப் போல பலிவாங்கப் பார்க்கிறது ஜாக்கிரதை திரும்பிப் பார்க்காதே என்று உள்ளுணர்வு எச்சரித்ததாலும் மூன்று கூழாங்கற்கள் வேறு கைவசம் இல்லாததாலும் உஷாராய் திரும்பியேப் பார்க்கவில்லை. வா வெளியே என சிறுசை அழைத்தேன். அதுவோ முடியப்போகிற இலக்கியத்தேனில் முக்கால் குணித்துவிட்டேன். கடைசி தடவையக முக்குளித்துவிட்டு இதோ வந்துவிடுகிறேன் என்று நாவலைக் கதையாய்க் கேட்டு இலக்கிய வளர்ச்சியடைந்தபடி குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருந்தது.
புகைப்படப் பலகைகளுக்கு நடுவே நான் நின்றுகொண்டிருக்க பக்கவாட்டுக் கதவில் இருந்து அடிக்கடி கரவொலி. என்னவென்றே புரியவில்லை. அப்புறம் கழுத்துச்சுருக்கணிந்த அலுவலக நண்பனைக் கண்டதும் தெரிந்தது பண மகுடிக்கு மயங்கி சங்கிலித்தொடரராய் ஊதித்திரியும் ஆம்வே பாம்புகளின் கூட்டம் என்று.
இலக்கிய பேருரை மகுடியில் பாம்புகள் தூங்கியேவிட்டதைப் போன்ற பேரமைதி. அவ்வப்போது கதவு திறக்க ஒன்றிரண்டு குட்டிப் பாம்புகள் அவ்வப்போது வெளியேறியபடி வேறு இருக்கவே சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கதவைத்திறந்து உள்ளே சென்றேன். உட்கார இடமில்லாததால் உயரிய மரியாதையுடன் வழியிலேயே நின்றேன். பள்ளத்தாக்கில் மலைப்பிரசங்கம் போய்க்கொண்டிருந்தது.
ரஸ்கோல்னிகோவ் செய்யும் கொலை - நெப்போலியன் போல உணரும் தாஸ்தாவெஸ்கி - எல்லோருக்குள்ளும் குற்றவாளி - சிறைச்சாலை என்ன கற்றுத்தருகிறது ஒழுங்கை - ஒழுங்கென்பது என்ன்வென்று போலீசும் சமுதாயமும் நினைக்கிறதோ அதற்கேற்றார்போல் குற்ற வாளிகளை நசுக்கி வெளியில் அனுப்புகிறது - ஆனால் குற்றவாளிகள் சிறைச்சாலைகளால் திருந்துவதே இல்லை - தீர்வாக தாஸ்தாவெஸ்கி கிறித்துவ மதத்தின் தீர்வாகக் கடவுளை வைக்கிறார் - ரோஷமான் கடைசிக் காட்சி - குற்றவாளி ஏன் குற்றம் செய்கிறான் - எல்லோருமே குற்றவாளிகளாக இருக்க விரும்புகிறோம் - கிட்டத்தட்ட நின்ற நிலையிலேயே டெம்பிளேட் தாலாட்டில் கார் விளம்பரத்துக் குழந்தையென கண்சொக்க தூங்கத்திற்குப் போய்க்கொண்டு இருந்தேன்.
அந்நியன் ஸ்ட்ரேன்ஜர் என்கிற ஆல்பர்ட் காம்யூவின் நாவலில் ஒரு கொலை நடக்கிறது ஒருவன் கத்தியை எடுக்கிறான் அது பளபளக்கிறது. மெர்சேவும் கத்தியை எடுத்துக் குத்திவிடுகிறான். பின்னால் கேட்கும்போது வெயிலாய் இருந்தது அதனால் குத்திவிட்டேன் என்கிறான்.
தூக்கிவாரிப்போட துயில் கலைந்தது.
துப்பாக்கி எப்படா கத்தியாச்சு?
முதல் பாகம் முற்றுப்பெறும் கடைசி பக்கத்தில்தான் கொலை நடக்கும். நான் படித்தது வெ.ஸ்ரீராம் மொழிபெயர்த்து கிரியா வெளியிட்ட அந்நியன் என்கிற அற்புத பொழிபெயர்ப்பில். கண்டிப்பாக என்னிடம் இருக்கிறது. சனியன் எவ்வளவு தேடியும் ஸ்கேன் பண்ண கிடைக்கவில்லை. ஆகவே ஆங்கிலத்தில் அந்தப்பகுதி இங்கே தரப்படுகிறது. ஆங்கில மொழிபெயர்ப்பில் முழு நாவலை தரவிறக்க இங்கே சொடுக்கவும்.
On seeing me, the Arab raised himself a little, and his hand went to his pocket. Naturally, I gripped Raymond’s revolver in the pocket of my coat. Then the Arab let himself sink back again, but without taking his hand from his pocket. I was some distance off, at least ten yards, and most of the time I saw him as a blurred dark form wobbling in the heat haze. Sometimes, however, I had glimpses of his eyes glowing between the half-closed lids. The sound of the waves was even lazier, feebler, than at noon. But the light hadn’t changed; it was pounding as fiercely as ever on the long stretch of sand that ended at the rock. For two hours the sun seemed to have made no progress; becalmed in a sea of molten steel. Far out on the horizon a steamer was passing; I could just make out from the corner of an eye the small black moving patch, while I kept my gaze fixed on the Arab.
It struck me that all I had to do was to turn, walk away, and think no more about it. But the whole beach, pulsing with heat, was pressing on my back. I took some steps toward the stream. The Arab didn’t move. After all, there was still some distance between us. Perhaps because of the shadow on his face, he seemed to be grinning at me.
I waited. The heat was beginning to scorch my cheeks; beads of sweat were gathering in my eyebrows. It was just the same sort of heat as at my mother’s funeral, and I had the same disagreeable sensations—especially in my forehead, where all the veins seemed to be bursting through the skin. I couldn’t stand it any longer, and took another step forward. I knew it was a fool thing to do; I wouldn’t get out of the sun by moving on a yard or so. But I took that step, just one step, forward. And then the Arab drew his knife and held it up toward me, athwart the sunlight.
A shaft of light shot upward from the steel, and I felt as if a long, thin blade transfixed my forehead. At the same moment all the sweat that had accumulated in my eyebrows splashed down on my eyelids, covering them with a warm film of moisture. Beneath a veil of brine and tears my eyes were blinded; I was conscious only of the cymbals of the sun clashing on my skull, and, less distinctly, of the keen blade of light flashing up from the knife, scarring my eyelashes, and gouging into my eyeballs.
Then everything began to reel before my eyes, a fiery gust came from the sea, while the sky cracked in two, from end to end, and a great sheet of flame poured down through the rift. Every nerve in my body was a steel spring, and my grip closed on the revolver. The trigger gave, and the smooth underbelly of the butt jogged my palm. And so, with that crisp, whipcrack sound, it all began. I shook off my sweat and the clinging veil of light. I knew I’d shattered the balance of the day, the spacious calm of this beach on which I had been happy. But I fired four shots more into the inert body, on which they left no visible trace. And each successive shot was another loud, fateful rap on the door of my undoing.
தேடித்திரித்த வார்த்தைகளை வைத்து கவித்துவ வீச்சென்ற பேரில் ஆர்பாட்டப் பேருரை ஆற்றாத எழுத்து.
நினைவிலிருந்து ‘தவறுதலாகப் பேசுவது’ பெருங்குற்றமில்லை. ஆனால் ஒரு மாத விளம்பரத்தோடு தனிக்கச்சேரி செய்ய ஒரு மேடை தரப்படுகிறது. தார்மீக கடமை சரியாகத் ‘தயார் ’ செய்துகொண்டு வருதல் என்பதுதான். ஆயிரம் மேடைகளில் பாடிய பாட்டே என்றாலும் அடுத்துவரப்போகும் பாட்டை பின்மேடையில் பாடிப்பார்த்துக்கொள்வாராம் ஜானகி. பராக்கு பார்த்துக்கொண்டிருந்த சித்ராவை அழைத்து அங்கே பார் ஜானகியை என கண்டித்தாராம் இளையராஜா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சித்ரா கூறியது. முழுநேர இலக்கியவாதி என்பதை பீற்றிக்கொள்ள மட்டும் பயன்படுத்தலாகாது. நடைமுறைப்படுத்தவும் வேண்டும். முழுக்கக் கேட்காதது முன்ஜென்ம புண்ணியம் அவருக்கும் நமக்கும்.
களைப்பில் கண் சொக்குகிறது. கடினமான இந்த தினம் முடியும் தருணத்தில், கர்த்தாவே உம்மிடம் என் பிரார்த்தனையெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
அந்நியன் நாவலுக்கு இரண்டு வெர்சன்கள் உண்டு. ஆல்பர்ட் காம்யூ என்கிற பெயரில் எழுதிய வெர்சனில் மெர்சே குத்தியால் கத்துகிறான் காம்யூ ஆல்பர்ட் என்கிற பெயரில் எழுதியதில் மெர்சே துப்பாக்கியால் சுடுவதாக எழுதியுள்ளார். பிற்காலத்தில் அவர் பெயர் ஆல்பர்ட் காம்யூ என்று மட்டுமே அறியப்படவேண்டும் என அவரது மனைவியார் விரும்பியதால் அந்தப்பெயரே நிலைத்துப் போனது. விபத்தில் உயிர் பிரிகையில், ஆல்பர்ட் காம்யூ கொடுத்த வாக்குமூலத்தின்படி ஆல்பர்ட்டின் இறுதி ஆசையை மதிக்கும்பொருட்டு பதிப்பகத்தாரே கத்திக்குத்து வெர்சன் அனைத்தையும் அழித்துவிட்டனர். தப்பிப்பிழைத்த ஒரே பிரதி பிரம்ம தத்தன் நம்பூதிரிபாடு அவர்களின் கொள்ளுப் பேரரான ஈ.எம்.எஸ் அவர்களிடம் கொணஷ்டாதேவி கிருக கர்பத்திற்குள்ளே இருந்தது. ஜெராக்ஸ் இல்லாத 80கள் ஆதலால் நானே கையால் பிரதி எடுத்தேன். அந்தப் பிரதியைத்தான் 1992ல் நான் உரக்கப்படிக்க நடுவில கோணங்கி பள்ளிகொண்டிருக்க எண்ணிறைந்த நண்பர்களுக்கு இடையில் இருந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கூர்மையாக கவனித்துக்கேட்டுக்கொண்டார். இதைப் பற்றி யுவன் அடுத்த ஆண்டிற்கு அடுத்த ஆண்டு எழுதப்போகும் குறுநாவல் புத்தகமாகி அதற்கடுத்த ஆறு மாதத்தில் மயிலை தெப்பக்குளத்திற்கு எதிரில் கழிவு விற்பனையில் கால் விலைக்குக் கிடைக்க உள்ளது.
என்னைப் பற்றி எழுதி இருந்தால் படித்திருக்க மாட்டேன். கில்பர்ட் ஆம்யூ என்பதால் கீரவடை குன்ஷி கொடுத்த சுட்டியில் படித்தேன். இந்தப்பின்னணி ஏதும் அறியாமல் விமலாதித்த மாமல்லனிடம் இருந்து வம்பு மழையில் இன்னுமொரு வசைமாரி.
எஸ்.ராமகிருஷ்ணன் பேசி சில மணி நேரங்களாவது ஆகியிருக்கும். அதைப்பற்றி எழுதப்பட்ட பதிவு இது என்பது அவர் காதுக்கும் போயிருக்கும். அவரிடமிருந்து ஏதேனும் எதிர்விளைவு இருக்கும் என்று எதிர்பார்த்தேன். அவர் ஏதுமே சொன்னதாகத் தெரியவில்லை. எழுத்தாளர்கள் விமர்சனங்களை இப்படித்தான் எதிர்கொள்ள வேண்டுமோ?
எருமை மாட்டுத்தோல் எனக்கு இல்லையே, தேவ எழுத்தாளர்கள் செய்யும் பிக்ஷ வேள்வியில் எழும்பிவரும் குக்ஷ பக்ஷியைப் போன்றவளான தூம்ரசித்துவின் மூத்த மகளின் கெண்டைக்காலின் கொண்டை மயிரொத்த மென்மையான சருமம் கொண்டவன் என்பதால், என்னால் ராஜாக் காது கழுதைக்காது என்று குழுமத்திற்குள்ளாகவாவது, குளத்திற்குள் கு.வாக கூவ நேர்ந்துவிடுகிறதே என்பதை நினைத்தால் சோர்வாக இருக்கிறது:)))
என்று ஜெயமோகன் எழுதி எனது நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கி விடுவாரோ என்பதை நினைத்தாலே நெஞ்சு பதைக்கிறது. அப்படியான அசம்பாவிதம் நடக்காமல் அவருக்கு இன்னும் ஒருவாரத்திற்கேனும் தமிழ் தட்டச்சை மறக்கவைத்து கர்த்தாவே என்னைக் காப்பாற்றும். (முனி ரத்னம் படத்திற்கான எழுத்துவடிவம் எல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே. ஆங்கில வசனங்கள் படப்பிடிப்பு சமயத்திலேயெ மொழிபெயர்க்கப்படும் என்பதால் பிழைப்புக்குப் பிரச்சனை இல்லை) ஆமென்.