Dyno Buoy அனுப்பியிருந்த பஸ்ஸின் சுட்டி, மெய்லில் இருந்தது. அதைப் பார்த்துத்தான் படிக்கத்தொடங்கினேன். இன்னமும் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வெளிவருவதாக உள்ள பேயோனின் புத்தகங்கள் பட்டியலில் நான்கைக்கூடத் தாண்டவில்லை.
ரயிலில் வழக்கமாய் வரும் சக பயணிகளுக்கு, நெட்புக்கில் வெட்டியாய் எதையோ நோண்டிக் கொண்டிருக்கும் பைத்தியம் என்கிற அபிப்ராயமே இதுவரை இருந்திருக்கும் என்பது என் எண்ணம். இன்று அது உறுதிப்பட்டிருக்க வேண்டும்.
மின்சார வண்டிகளில் உரக்க உரையாடவோ அல்லது செல்ஃபோனில் பேசவோ மட்டுமே அத்தியாவசியம் கருதி பிறப்புரிமை போன்ற அனுமதி உண்டு. வாய்விட்டு சத்தமாய்ச் சிரிப்பது கண்டிப்பாக தடைசெய்யப்படவேண்டும் என்று ஓரிரு பெருசுகள் ஆசிரியருக்குக் கடிதம் எழுதினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.